“ஒரு ஆண் எப்படியும் தன்னை சமாதானப்படுத்தி விடுவான் என்ற நம்பிக்கை முழுமையாய் வந்த பிறகுதான் அவள் அவனிடம் சண்டையிடவே தொடங்குகிறாள்”
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------
இதற்கு முந்தைய பதிவு இதற்கு முந்தைய பதிவு டிங்கு டைரி - 38 "பொறுமையிழந்த பிரியா"
மறுபடியும் நான் சீட்டில் உட்கார்ந்துகொண்டு கொஞ்சம் கூட யோசிக்காமல் பதில் சொன்னேன், "அஸ்வின், பிரியா வருவதாக இருந்தால், நான் ஆன்சைட் போவதற்கு ரெடி?"
அஸ்வின்: "வாட்?"
எனச் சொல்லிக் கொண்டே, அரை நிமிடம் உதடு பிரிக்காமல் சிரித்தார் அஸ்வின்.
சிரிப்பைத் தொடர்ந்து கொண்டே, "நீங்க நிறுவனத்துக்கு புதுசுன்னு நினைக்கிறேன், அதுவும் இல்லாம யூத் வேற. ஒரு ஃப்ரண்டா சொல்றேன். நீங்க நினைக்கிற மாதிரி பொண்ணு இல்ல பிரியா"
"ம்ம்ம்ம்" இப்போ நான் டர்ன். அமைதியாக சிரித்துக் கொண்டே, அஸ்வின் பிரியாவை பற்றிச் சொல்லுவதை நான் ரசித்துக்கொண்டிருந்தேன்.
அஸ்வின் : "ரொம்ப ஸ்ட்ரெய்ட் ஃபார்வர்டு லேடி. போன பார்ட்டில, தண்ணியடிச்சிட்டு கலாட்டா பண்ண பையனை......"
நான் : "ஐ நோ தட் ஹிஸ்டரி"
சாவின் : "ஓ.கே. ஃபைன்.. குட் கேர்ள். வொர்க் விஷயத்துல ரொம்ப கரெக்ட்டா இருப்பாங்க. அவங்க ஏற்கெனவே ஆன்சைட் போயிருந்த க்ளையண்ட் தான். அவங்க தான் பிரியாவ திரும்ப வரச்சொல்லி ரிக்வெஸ்ட் பண்ணியிருந்தாங்க"
நான் : "ஓ.. க்ரேட்"
அஸ்வின் : "ஆனா வம்பு பண்ற பசங்கள, அடிச்சி துவைச்சிடுவாங்க. எனக்கு தெரிஞ்சு, நெறைய்ய பேரு ஏதோ ஒரு வகைல பிரியாவால பாதிக்கப்பட்டு இருக்காங்க. ஸோ.. நான் என்ன சொல்ல வர்றேன்னா?"
நான் : "???"
சாவின் : "பிரியாவுக்காக தான் ஆன்சைட் போறதுக்கு ஒத்துக்கிட்டீங்கன்னா, மறுபடியும் ஒரு தடவை யோசிச்சீக்கோங்க. ஏன்னா, பிரியா அவங்கள கட்டிக்கப் போறவன தவிர யாருக்கும் பயப்பட மாட்டாங்க.. ஐ மீன்,ஃப்ரீயா கூட பேச மாட்டாங்க"
நான் : "அப்படியா சொல்றீங்க.. ஐ ஸீ"
எக்கச்சக்க புன்னகையை வெளியில் கொட்டாமல் உள்ளுக்குள் குதித்தேன்
அஸ்வின் : "ஸோ, உங்க முடிவு என்ன?"
நான் : "நீங்க பிரியாகிட்ட இது பத்தி பேசிட்டு சொல்லுங்க.. அவங்க ரெடியா இருந்தா, நானும் ரெடி. இல்லைன்னா, இரண்டு பேருக்கு பதிலா புதுசா இரண்டு பேர் தேடிக்கோங்க"
என்னை அஸ்வின் ஏற இறங்க பார்த்தார். பின் மனதினுள், "இவன் என்ன லூஸா? சொந்த செலவுல சூனியம் வச்சிக்குறானே?" என நினைத்துக் கொண்டிருக்கும்போது,
நான் : "தேங்க்ஸ்"
என்று மறுபடியும் ஃபார்மலாக கை கொடுத்துவிட்டு கெளம்பினேன்.
அடுத்த பகுதி "டிங்கு டைரி - 41 நிஜ ஷாக்" தொடரும்.........
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
"என் பேச்சுகளை கேட்க யாரும் இல்லை என்றே எழுத தொடங்கினேன்
இன்று எழுதி கொண்டே இருக்கிறேன்
கேட்காத என் பேச்சுகளும் நிச்சயம் ஒரு நாள் உன் கண்ணில் படும் என்ற நம்பிக்கையிலே"
கருத்துரையிடுக Facebook Disqus