0

“நேசித்த உறவு கிடைப்பதைவிட கிடைத்த உறவைநேசி... ஏனென்றால் நீ நேசிக்கும் உறவு உனக்கு ஸ்பெஷல்.. ஆனால் கிடைத்த உறவுக்கோ நீ தான் ஸ்பெஷல்...!!”
இதற்கு முந்தைய பதிவு டிங்கு டைரி - 38 "பொறுமையிழந்த பிரியா"

பிரியா அப்படிச் சொல்லி முடித்ததும், மொத்த கூட்டமும் ஷாக்காகி என்னைப்  பார்த்தார்கள். என்னால் எந்த ரியாக்சனும் முகத்தில் காட்ட முடியவில்லை. சரியாக ஒரு நிமிடம் கழித்து,

ஹரிணி, "ஐயம் சாரி" என்று சொல்லிவிட்டு சாப்பாட்டுத் தட்டை எடுத்துக் கொண்டு கெளம்பிவிட்டாள்.

சாப்பிட்டு முடியும் வரை யாரும் யாருடனும் பேசிக் கொள்ளவில்லை. கைகழுவும் இடத்தில்

குண்டுக்கன்னு குர்சிதா : "உன்னப் பார்த்தா எனக்குப் பாவமா இருக்கு. ஐ’யம் சோ சாரி பார் யு" எனச் சாபம் கொடுப்பது போல் சொல்லிவிட்டு கிளம்பினாள். 

பாப்கட் தலை : "ம்ம். ம்ம்ம்... நடக்கட்டும் நடக்கட்டும்" என்றாள். 

எல்லாரும் அவரவர் இடத்துக்குப் போய்விட்டனர். 

என்னால்  அங்கு நிற்க முடியவில்ல , "என்னடா, இது அவன் அவனுக்கு எத்தனையோ பிரச்சினை இருக்கு. எனக்கு மட்டும் ஏன் யார்ன்னு தெரியாத பொண்ணுங்க எல்லாம் பிரச்சினையா இருக்கு.. ச்சே" எனத் தோன்றியது. பிரியாவுடன் கொஞ்ச நேரம் பேச வேண்டும் போல் இருந்தது. எழுந்து பார்த்தால் அவளும் இடத்தில் இல்லை. 

ஹரிணி உடல்நிலை சரியில்லை எனச் சொல்லிவிட்டு ஆஃபிஸ்க்கு லீவ் போட்டுச் சென்றுவிட்டதாக இ-அஞ்சல் வந்து இருந்தது. அந்த இ-அஞ்சலை ஷிஃப்ட் டெலீட் செய்தான்.

வெளியே போய் ஒரு தம் அடிக்கலாமா என யோசித்தேன். பின் "வேண்டாம், பிரியாவுக்கு தெரிந்தால், இன்னுமொரு பிரச்சினையை சமாளிக்க வேண்டியிருக்கும்" எனத் தோன்றியது. அரைமணிநேரம் அப்படி இப்படி என்று ஓடியது. பிரியாவுக்கு கால் பண்ணினேன். அவள் கட் பண்ணிவிட்டாள். திரும்பவும் 5,6,7 முறை ட்ரை பண்ணினேன். அவள் கட் பண்ணிக் கொண்டே இருந்தாள். வேறு வழியில்லாமல் SMS அனுப்பலாம் என முடிவு செய்தேன்.

நான் : "I'm really sorry. Whatever she told, thats true. But i swear, i will never touch liquor henceforth. I didn't influence her to talk like. SORRY again :(" 

அனுப்பி ஒரு மணிநேரம் ஆகியும் அவளிடம் இருந்து ரிப்ளை வரவில்லை. அதுவே எனக்கு ரொம்ப டிஸ்டர்ப் பண்ணியது. "நேரில் அழைத்து தனியாக பேசலாமா?" என ஒரு கட்டத்தில் முடிவு செய்தேன். இன்னைக்கு ஹெல்மெட் கொண்டு வராததால் முடிவை அவசரம் அவசரமாக மாற்றிக் கொண்டான்.

வேறு ஒரு ப்ராஜெக்ட்டின் பி.எம், அவசரமாக மீட் பண்ணவேண்டும் என்று இ-அஞ்சல் அனுப்பி இருந்தார்.

அவருடைய கான்ஃபரன்ஸ் ரூம் நான் போய் பார்த்தேன்.

அஸ்வின் : "ஹாய் , ஐயம் அஸ்வின்" புது ப்ராஜெக்ட்டின் பி.எம் கை கொடுத்தார்.

நான் : "ஹெல்லோ" என்று சொல்லி, சேரில் உட்கார்ந்தேன்

அஸ்வின் : "ஓ.கே. ஆக்சுவலி நான் உங்கள வரச் சொன்னதுக்கு காரணம், எங்க ப்ராஜெக்ட்ல‌ ஆன்சைட்க்கு ஆட்கள் தேவைப்ப‌டுது. எக்ஸ்பீரிய‌ன்ஸ் ஆளுக எங்க‌ டீம்ல‌ இல்லை. அத‌ ப‌த்தி பேச தான் உங்க‌ள‌ கூப்பிட்டேன்"

நான்  : "ம்ம்ம்" பெரிதாக‌ எந்த‌ ரியாக்ச‌னும் காட்ட‌வில்லை

அஸ்வின் : "ஸோ, நீங்க‌ இன்ட்ரெஸ்ட்டா இருந்தா நெக்ஸ்ட் வீக் U.K கெள‌ம்புற‌ மாதிரி இருக்கும். சோ, ஆர் யு இன்றேச்டேட்?"

நான் : ஒரு நொடி கூட‌ யோசிக்காம‌ல் உட‌னே நான், "ஸாரி அஸ்வின். ஐயம் நாட் இன்றேச்டேட் " என்றேன்

அஸ்வின் : "ஓ.. ஓகே. நான் ஏற்கெனவே, உங்க‌ ப்ராஜெக்ட் மேனேஜ‌ர்கிட்ட‌ பேசிட்டேன். அவ‌ரும் ஓ.கே சொல்லிட்டாரு"

நான் த‌லையைக் கீழே குனிந்து யோசித்துக் கொண்டிருந்தேன்.

அஸ்வின் : "டைம் தான் பிரச்சினைன்னா, ஒண்ணும் ப்ராப்ளம் இல்ல. நீங்க‌ இப்ப‌ போக‌ப் போற‌து 3 மாச‌ம் தான். ஒருவேளை, நீங்க‌ ரொம்ப‌ நாள் இருக்க‌ணும்ன்னு ஆசைப்ப‌ட்டா, அதுவும் பசிபில். என்ன‌ சொல்றீங்க‌"

நான் : "நோ அஸ்வின், என‌க்கு ப‌ர்ச‌ன‌லா கொஞ்ச‌ம் வேலைக‌ள், பிர‌ச்சினைக‌ள் இருக்கு. இப்போதைக்கு என்னால‌ ஆன்சைட் போக‌ முடியாது." என்றேன்

அஸ்வின் : "ம்ம்ம்.. ஓ.கே.." என்று சொல்லிவிட்டு 2 நிமிட‌ம் யோசித்தார்.

நான் சீட்டில் இருந்து எழுந்திருக்கும்போது, 

அஸ்வின்: "ஓ.கே. இப்போதைக்கு பிரியாவை ம‌ட்டும் அனுப்ப‌ வேண்டிய‌து தான்"

நான் : "வாட்?"

அஸ்வின் : "யெஸ், உங்க‌ ரெண்டு பேரையும் தான் ப்ரோப்ப‌ஸ் ப‌ண்ணி இருந்தேன். இப்ப‌ உங்க‌ளுக்கு ப‌திலா இன்னொரு ஆள் தேட‌ணும்."

நான் : "???!!!!!!???????"

அடுத்த பகுதி "டிங்கு டைரி - 40 "பிரச்சினையில் அஸ்வின் ? " அடுத்த பகுதி தொடரும்.........  

[38] <<--- --="">>  [40]

முந்தைய டைரிகள் [1] [2] [3] [4] [5] [6] [7] [8] [9] [10] [11] [12] [13] [14] [15] [16] [17] [18] [19] [20] [21] [22] [23] [24] [25] [26] [27] [28] [29] [30] [31] [32] [33] [34] [35] [36] [37] 


Image result for onsite meme tamil


"உன் கண்ணீர் துடைக்கும்  கைகளாய் இருப்பதை விட  உன் இமைகளாய் நான்  மாறிகொள்கிறேன்  கண்ணீர் வராமல் தடுக்க"

கருத்துரையிடுக Disqus

 
Top