0
“என் மனம் அறிந்த காதலை உன் முகம் அறியும் எப்போது காத்து இருக்கிறேன்”
-------------------------------------------------------------------------------------------------------------------------------------------

இதற்கு முந்தைய பகுதி டிங்கு டைரி - 68 நடுஇரவில் கேட்ட உதவி


மொட்டைமாடிக்கு வந்த உஷா என்னை கூப்பிட

உஷா : என்னங்க..... 

நானும் அப்பாவி முகத்தோடு திரும்பி பார்க்க உஷா என் கையை பிடித்து ஹாலுக்கு இழுத்துச் சென்றால். உள்ளே சென்றதும் தன் மேல் துணியை சிறிது விளக்கித் தான் டேடுவா வாசிக்கச் சொன்னால்.

நான் : இப்ப எதுக்கு இப்படி பண்ணுற.

உஷா : மொதல்ல இத நல்ல படிங்க.

நான் : நானும் ஒன்னுக்கு நாலு தடவ படித்து விட்டு “ரிசி தான் உன் காதலன் பேரா”

உஷா : ரிசினா உங்களுக்கு தெரியுது.

நான் : மறுபடியும் படித்துவிட்டு “ஆமா அப்படிதான் இருக்கு”

உஷா : சரி இப்போ என் பின்னால நின்னு படிங்கனு சொன்னால் நானும் அவள் பின் நின்று பார்த்தேன் முகத்தைக் கொஞ்சம் சுளித்தவாறு “உஷா ... உஷானு போட்டிருக்கு”

உஷா : ஆமா உஷா யாரோட பேரு.

நான் : உஷா உன் பேர் தான்.

உஷா : ம்ம் ஏன் இவ்ளோ குழப்பம்னு இப்ப புரியுது.. இந்த டிசைன் நானே போட்டது எனக்கு தெரியனும்னு அத திருப்பி நான் பாக்குற மாதிரி ட்டேடு போடா சொன்னேன். அதே நேரா பாத்தா அது ஒரு பையன் பேரா இருக்கும்னு நான் நெனசுகூட பாக்கள. இந்த ட்டேடுவ இதுவரைக்கும் யாரும் பாக்கள நீங்க தான் முதல் பாத்தது.

நான் : நீ என்ன சொல்லுற எனக்கு ஒன்னும் புரியல. 




ஒரு காயிதத்தில் அந்த டிசைனை வரைந்து முடித்தல். என்னிடம் காட்டி படிக்கச் சொன்னால். நானும் படித்து விட்டு ரிசினு இருக்குனு சொனேன். அதே காகிதத்தை திருப்பிக் காட்டி என்னைப் படிக்க சொன்னால். 

நான் : உஷா... உஷாவா !!!!!!!!!

என் மனதுக்குள் இருந்த சந்தேகம் தீர்ந்தது... ஒரு அசட்டு வெக்கத்துடன் அவளை நான் பார்க்க அவளும் வெட்கப்பட்டு நின்றால். மெதுவாக அவலருகில் சென்றேன் உஷாவின் தாடையை என் விரல்களால் என் முகம் நோக்கி தூக்க. கைப்பேசி அலறியது. இந்த சிவபூஜைய கலைத்த கரடி யாரும் இல்ல இம்சை நண்பன் குமாருதான்.

குமார் : டேய் மச்சி சீக்கிரம் என் வீட்டுக்கு வா ஒரு முக்கியமான விஷயம் இருக்கு.

நான் : என்னன்னு சொல்லு நான் கொஞ்சம் பிசியா இருக்கிறேன்.

குமார் : நீ பிசியா.. அத விட முக்கியமான விஷயம்.. உன் பப்புவ கண்டுபிடுசாச்சு.

நான் : கொஞ்ச நேரம் முன்னாடி தொடங்கிய சந்தோசம் சுக்குநூரனது. “சரி சரி நான் இப்பவே வரேன்” 

உஷாவை நெருங்கும் வேகத்தை விட இருமடங்கு வேகத்தில் விலகினேன். 

ஒவ்வொரு முறையும் சேர நினைக்கும்போது ஏதாவது ஒரு தொல்லை வந்து எங்கள பிரிச்சு வைக்குது............ ஒருநாள் இல்ல ஒருநாள் என் கைல மாட்டும், அப்போ அதுக்கு இருக்கு.. உஷா மீண்டும் கோவ முகத்துடன் சமையலறைக்குள் சென்றால்.


" நடுஇரவில் கேட்ட உதவி  !!!! அடுத்த பகுதி தொடரும்.........    

முந்தைய டைரிகள் [1] [2] [3] [4] [5] [6] [7] [8] [9] [10] [11] [12] [13] [14] [15] [16] [17] [18] [19] [20] [21] [22] [23] [24] [25] [26] [27] [28] [29] [30] [31] [32] [33] [34] [35] [36] [37] [38] [39] [40] [41] [42] [43] [44] [45] [46] [47] [48] [49] [50] [51] [52] [53] [54] [55] [56[57] [58] [59] [60] [61] [62] [63] [64] [65]

[66] முந்தைய பதிவு || அடுத்த பதிவு [68]

--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

"மனைவி என்பதும் மூன்று எழுத்துதான் காதல் என்பதும் மூன்று எழுத்துதான் இதில் நீ எதை தேர்ந்தெடுத்தாலும் அன்றிலிருந்து உன் தலை எழுத்து மாறி விடும்"

கருத்துரையிடுக Disqus

 
Top