"நான் உன் கூட பழகின நாட்களை விட நீ என் கூட சண்டை போட்ட நாட்கள் அதிகம் ..... திரும்பவும் உன் கூட பழக வரம் வருமா???"
----------------------------------------------------------------------------------------------------------------------------------
----------------------------------------------------------------------------------------------------------------------------------
இதற்கு முந்தைய பதிவு "டிங்கு டைரி - 3 கறிக்குழம்பும் தயிர்ச்சாதமும்"
நான் : என் மனசுக்குள் பலவாட்ஸ் பல்புகள் பிரகாசிக்க, நான் எப்படி கேக்குறதுன்னு நெனச்சேன் தேங்காட் அவளே கேட்டுட்டா” ம்ம், மத்தியான ஷோக்கு போலாம்”.
சிறிது நேரம் டிவி பார்த்துவிட்டு, கேரம்போர்ட் விளையாட ஆரம்பித்ததில் மதியம் ஆனது. ஹேமாவை என் ரூமுக்கு அழைத்துச் சென்று என் அம்மா அப்பா கல்யாண ஆல்பத்தை காட்டினேன். ஹேமாவை ஓரக்கண்ணால் பார்த்தபடி எப்படியாவது இன்னிக்கு ஹெமாவ இம்ப்ரெஸ் பண்ணவேண்டும் எனப் பலமாக யோசித்துக் கொண்டிருக்க ஒரு பல்பு மூளைக்குள் பிரகாசித்தது.
நான் : "ஹேமா நான் உனக்கு ஒண்ணு காட்டபோறேன் எப்படி இருக்குனு சொல்லு." எனச் சொல்லி முடிப்பதற்குள் அவள் அனுமதி இன்றி சடாரென போர்வைக்குள் அவளை மூடினேன்.
ஹேமா : "டேய், என்ன பண்ணுற, என அலறினாள்."
நான் : "உஸ்ஸ், சத்தம் போடாத.." என என் பாக்கெட்டில் இருந்த ரேடியம் வாட்சை காட்ட.
ஹேமா : "சூப்பர இருக்கு , நான் இது மாதிரி பார்த்ததே இல்ல. இது உன்னுடைய ரேடியம் வாட்சா."
நான் : "ம்ம் என்னுடையது தான் இப்போ இது உனக்குத் தான் என்னுடைய கிப்ட்.. இத யார்கிட்டையும் சொல்லிடாத முக்கியமா அந்த அணில் முஞ்சி அணித்தாவுக்கு தெரியவே கூடாது."
ஹேமா : "நீ தான் அவள் பெஸ்ட் பிரண்டுன்னு அவ சொன்னா, அவளபோய் இப்படி சொல்லுற."
நான் : "அவ எனக்கு பெஸ்ட் பிரென்டா.. ஹா ஹா ஹா.. அவளுக்கு வேணுனா நான் பெஸ்ட் பிரென்ட இருக்கலாம் எனக்கு நீ தான் பெஸ்ட் பிரென்ட."
ஹேமா : "சரி நான் இதபத்தி அனித்தாகிட்ட சொல்லுல."
நான் : ஹேமாவின் கன்னத்தை மெதுவாகக் கிள்ளியவாறு ”யு மை ஸ்வீட் பிரண்டு” என முடிக்க அனித்தா என் ரூமுக்குள் வரச் சரியாக இருந்தது.
அனித்தா : கொஞ்சம் கோவத்துடன் “அதை பெட்ஷீட்டுக்கு வெளியே வந்து சொல்லு பாப்போம்”
அனித்தா குரலை கேட்டதும் எனக்கு குப்புன்னு வேர்க்க தொடங்கியது, இவ எப்ப என்ட்ரி குடுத்தான்னு தெரியலையே. திருத் திரு வென முழித்தவாறே பெட்ஷீட்டை விளக்க ஹேமா கையில் இருந்த ரேடியம் வாட்சை பார்த்ததும் அனித்தாவிற்கு இன்னும் கோபம் அதிகமானது.
நான் : "ஹாய் அனி... நீ எப்போ வந்த."என என் தலையை சொரிந்து கொண்டே கேட்டேன்.
அனித்தா : நான் வந்தது இருக்கட்டும். இங்க என்ன நடக்குதுனு நான் தெருஞ்சுகக்கலாமா."
நான் : அசடு வழிந்தவாறே “வந்து... இது ஹேமா.. என் புது பிரண்டு." ஹேமாவை பார்த்தவாறு "ஹேமா இது அனித்தா. அனிதாவுக்கு ஒரு ஹை சொல்லிடு."
ஹேமா : சிறிது சிரித்தவாறு தன் கைகளை அசைத்து ஹாய் சொன்னால்.
அனித்தா : அது என்ன உன் கைல.
நான் : இது தெரியாதா.. இதுதான் வாட்ச்.. இதுல டைம் பாக்கலாம்.. இதுகூட தெரியல.. ஈ.. ஈ.. ஈ..
அனித்தா : "நக்கலு... சரி இந்த வாட்ச் தொலைஞ்சுருச்சுனு சொன்ன."
நான் : இது தெரியாதா.. இதுதான் வாட்ச்.. இதுல டைம் பாக்கலாம்.. இதுகூட தெரியல.. ஈ.. ஈ.. ஈ..
அனித்தா : "நக்கலு... சரி இந்த வாட்ச் தொலைஞ்சுருச்சுனு சொன்ன."
நான் : "உங்கிட்ட அப்படியா சொன்னேன்.." ஆமா... ஆமா இது இப்பதான் கெடச்சுது நான் ஹெமாகிட்ட காட்டுறேன் நீ கரைக்டா வந்துட்ட."
ஆஹா இது அனித்தா எனக்கு கொடுத்த கிப்ட்டாசே எப்படிச் சமாளிக்கிறது இது ஹெமாவுக்கும் தெரியக்கூடாது என்ன பண்ணுறது என என் மூளைக்குள் டாம் அண்ட் ஜெர்ரி சண்டை போல ஓடியது, இவள எப்படி டைவேர்ட் பண்ணுறதுன்னு பலமா யோசனையும் போனது.
கிச்சனிலிருந்து அம்மாவின் குரல்.. “டேய் டிங்கு கண்ணா.. பஜ்ஜி ரெடி வந்து எடுத்துட்டு போ.”
அனித்தா : என்ன பஜ்ஜியா.. ஆண்டி நான் வந்துட்டேன். என கிச்சனை நோக்கி ஓடினால்.
நான் : அப்படா... என் மனதில் ஒரு நிம்மதி... எப்படியோ சாப்பாட்டு பண்டாரம் போய்டுச்சு.
அனித்தா திடிரெனத்திரும்பி வந்தால்
அனித்தா : ஹேமா அந்த வாட்ச் அவனுக்கு நான் கொடுத்த ஸ்பெசல் கிபிட் எப்படி இருக்கு. என் சொல்லிவிட்டு ஓடிவிட்டாள்.
ஹேமா கண்கள் சிவந்தது
ஹேமா : என்கிட்ட போய் சொன்னாலே எனக்கு பிடிக்காது ஆனா நீ அடுத்தவங்க கொடுத்த கிப்ட எனக்கு கிப்டா கொடுக்கிறியா என சொல்லி முடிக்கும்முன் பளார் என என் கன்னத்தி ஒன்னு விட்டால். நீ எப்பவுமே என் பிரெண்டா இருக்க முடியாது இந்த வாட்ச் கொடுத்தவங்களுக்கே உன்னால உண்மையா இருக்க முடியல நீ எப்படி என்கிட்ட உண்மையா இருப்ப.
ஒரே வார்த்தைல என் ஒட்டு மொத்த மாளிகைய களைக்க வெச்சுட்டு எதுவுமே நடக்காதது போல அனித்த மூக்கு முட்ட பஜ்ஜியை சாப்பிட்டுக் கொண்டிருந்ததை பார்த்த எனக்கு கோவம் வந்தது . ஆனாலும் நான் செய்ததும் தப்புதான். சிவந்த கன்னங்களை என் கையால் தேய்த்தவாறு என் ரூமில் அமைதியாக அமர்ந்தேன்.
விடுமுறைகள் முடிந்து அடுத்த நாள் பள்ளியில்.....
டீச்சர்: பசங்களா! நாளைக்கு க்ரூப் ஃபோட்டோ எடுக்கப் போகிறோம் எல்லாரும் ஆளுக்கு 50 ரூபாய் கொண்டாங்க... சரியா? (மனதுக்குள்ள) 20 ரூபா ஃபோட்டோவுக்கு 50 ரூபா வாங்கினா 60 பசங்களுக்கு 30 ரூ வீதம் 1800... இந்த மாதம் புதுப் புடவை தான்...
நான் : (வீட்டுக்கு வந்தவுடன்) அம்மா நாளைக்கு ஸ்கூல்ல ஃபோட்டோக்கு 100 ரூ வேணும்...
அம்மா: ஃபோட்டோக்கு 100 ரூபாயா? கொள்ளையடிக்கிறாங்க.... சரி, சரி அழாதே... அப்பா வரட்டும்... கேக்கறேன்.
அப்பா வந்ததும்: என்னங்க... நம்ம பையன் ஸ்கூல்ல க்ரூப் ஃபோட்டோக்கு 200 ரூபாய் கொண்டு வரச் சொல்லிருக்காங்களாம்... இல்லாட்டி உள்ளயே விட மாட்டாங்களாம்...
அப்பா: க்ரூப் ஃபோட்டோக்கு 200 ரூபாயா? பகல் கொள்ளை... என்ன செய்யிறது?... சட்டைப் பையில இருக்கு எடுத்துக்க.... விலைவாசி எப்படி ஏறுதுன்னு புரியுதா? ..
"பிறந்த நாள் பரிசு." அடுத்த பகுதி .........
முந்தைய டைரிகள் [1] [2]
------------------------------------------------------------------------------------------------------------
"உன்னை காணாத ஒவ்வொரு நொடியும் என் விழிகள் தானாகவே தேடும்
என் கை கடிகாரத்தின் பார்வையை உன் வரவை எதிர்பார்த்து அன்பே"
கருத்துரையிடுக Facebook Disqus