Latest News

0

.
சூட்கேஸ் பெட்டி ஸ்கூட்டர் ஒன்றை சீனாவைச் சேர்ந்த ஒரு விவசாயி கண்டுபிடித்துள்ளார்.

பயணிகளின் போக்குவரத்தில் இது ஒரு புரட்சியை ஏற்படுத்தும் என்றும், மாசடைதல் மற்றும் போக்குவரத்து நெரிசல் ஆகியவற்றை இது குறைக்கும் என்றும் ஹேர்ல் யாங் சாய் என்னும் அந்த விவசாயி கூறியுள்ளார்.

தனது சூட்கேஸை அமெரிக்க விமானம் ஒன்றில் தொலைத்த பின்னர் 10 வருடங்கள் முயற்சி செய்து இவர் இதனை கண்டுபிடித்துள்ளார்.

இதற்கு ''சிட்டி கப்'' என்று அவர் பெயரும் வைத்துள்ளார்.

விமான நிலையத்தில் பார்க்கிங் பிரச்சினை, தள்ளுவண்டி பிரச்சின எதுவும் கூட இதலால் இல்லாது போய்விடுகிறது.

மணிக்கு 20 கிலோ மீட்டர் வேகத்தில்தான் இது பயணிக்கும்.

பட்டரியில் இயங்கும் இதில் வழிகாட்டும் கருவியான ஜிபிஎஸ் நவிகேசன் கூட இருக்கிறதாம். விமான நிலையத்தில் இதனை ஓட்டிப் பார்த்தவர்களும் அது நன்றாக இருப்பதாகக் கூறியுள்ளனர்.

கருத்துரையிடுக Disqus

 
Top