யார் நம்பாவிட்டாலும் கூட,தமிழனின் ஆதிக் குடிகள் சுமேரியர்கள் தான் கணினிக்குத் தந்தையர்கள் என்பதை பெருமையுடன் கூறிக் கொள்ளலாம்.
கிமு. 4000 ற்கு முன்னர் Sumerian tablets என்ற தட்டுக் கணினி முறையைப் இவர்கள் பயன்படுத்தினார்கள்.
இது சுமேரிய மொழியில் இருப்பதால்,இன்னமும் முழுமையாக பலவற்றை கண்டறிய முடியவில்லை.ஆனாலும் இசை,அறிவியல் வானியல் போன்ற பல கணித முறைகள் இருப்பதாகக் கூறுகிறார்கள் ஆய்வாளர்கள்.
தொடர்ந்து கிமு.1300 அளவில் Suan Pan என்ற சீன (Chinese Abacus) மற்றும் ரோமானியர்களால் அபாகுஸ்(Roman Abacus) முறை பயன்படுத்தப்பட்டது.
1643 கிபி. இல் Pascaline என்ற கணினியை Blaise Pascal என்பவர் கண்டு பிடித்தார்.
1800 -Difference Engine என்று அழைக்கப்பட்ட கணினி முறையை, Charles Babbage என்ற ஆங்கில கணக்கியலாளர் உருவாக்கி இன்றைய கணினி முறையின் தந்தையானார்.இதைத் தொடர்ந்து 1822 இல் அவரால் உலகின் முதல் கணினி உருவானது.
அதே சமயம் 1801 இல் Joseph-Marie Jacquard என்பவரால், punched card system முறையைப் பயன்படுத்தி, music machines, mechanical organs, calculators, mechanical counters, looms, automatons and early computers கள் உருவாயின.
1890 இல் Herman Hollerith 1880 இல் நடந்த மக்கள் கணக்கெடுபிற்காக ஒரு அட்டையை வைத்து கணக்கிடும் கணினியை-punch card system – உருவாக்கினார்.இது சூன் 16,1911 இல் Computing-Tabulating-Recording Company (C-T-R) ஆகத் தொடங்கி, IBM நிறுவனமாக மாறியது.
தொடர்ந்து பல மாற்றங்களை செய்து,1937 இல் J.V. Atanasoff, (professor of physics and mathematics at Iowa State University ) புதிய கணினியை உருவாக்கினார்.இவரும் இவரின் மாணவன் Clifford Berry உம் இணைந்து, 1941 இல் 29 சமன்பாடுகளை ஒரே சமயத்தில் தீர்க்கவும்,நினைவகம் -memory- கொண்ட முதல் கணினியையும் உருவாக்கினார்கள்.
1943-1944 இல் Pennsylvania professors—John Mauchly மற்றும் J. Presper Eckert உம் இணைந்து Electronic Numerical Integrator and Calculator (ENIAC) என்ற கணினியை உருவாக்கினார்கள். இதுவே இன்றைய கணினிக்கு அடித்தளமாக இருந்தாலும் கூட,மிகப் பெரியதாக இருந்தது. இதில் 18,000 vacuum tubes கொண்டு 20 x 40 அடி உள்ள அறையில் அமைக்கப்பட்டது. கணினியில் தாத்தா என இவரைச் சொல்லலாம்.1946 இல் இவர்கள் UNIVAC என்ற வர்த்தக ரீதியிலான கணினியை உருவாக்கினர்.
1951 Harwell computer உருவானது.
1953 இல் Grace Hopper முதல் COBOL என்ற கணினி மொழியை (first computer language) உருவாக்கினார். அதே சமயம் Thomas Johnson Watson, Jr. ஐக்கிய நாடுகளுக்காக(கொரியப் போரின் போது) IBM 701 EDPM ஐ உருவாக்கினார்.
1954 SAGE (Semi-Automatic Ground Environment) கணினி உருவானது.
1954 இல் FORTRAN என்ற கணினி மொழி உருவானது.
1958 இல் Jack Kilby and Robert Noyce, இவர்களால் integrated circuit என்ற computer chip உருவானது.
1964 இல் Douglas Engelbart என்பவர், mouse , graphical user interface (GUI) கொண்ட இன்றைய கணினி முறைக்கு வித்திட்டார்.
1970 இல் Intel 1103 என்ற, முதல் Dynamic Access Memory (DRAM) chip உருவானது.
1971 இல் IBM ஐச் சேர்ந்த Alan Shugart , floppy disk முறையை உருவாக்கினார்.
1972 இல் Paul Allen , Bill Gates என்ற பாலிய நண்பர்கள் இணைந்து Traf-O-Data என்ற நிறுவனத்தை நிறுவினர்.
1973 இல் Xerox நிறுவனத்தைச் சேர்ந்த Robert Metcalfe என்பவர் பல கணினிகளையும் வன்பொருட்களையும் இணைக்கும், Ethernet ஐ உருவாக்கினார்.
1974-1977 காலத்தில் Scelbi & Mark-8 Altair, IBM 5100, RadioShack’s TRS-80— “Trash 80,” Commodore PET போன்ற கணினிகள்,personal computers ஆக உருவானது.
1975 இல் முதல் வர்த்தக ரீதியிலான IBM 5100 வந்தது.
1975 ஏப்ரல் 4, இல் பில் கேட்சும் பவுல் ஆல்லெனும் இணைந்து கணினி வரலாற்றில் இன்றும் நிலைத்து நிற்கும், மைக்ரொசொப்ட் நிறுவனத்தை ஆரம்பித்தார்கள்.
1976 ஏப்ரல் 1 இல், Apple I என்ற Apple Computer ஐ முட்டாள்கள் தினத்தில், Steve Jobs and Steve Wozniak தொடக்கினார்கள்.1977 இல் இவர்கள் Apple II ஐ வெளியிட்டார்கள்.
1978 இல் முதல் கணினி வழி VisiCalc என்ற spreadsheet வெளி வந்தது.
1979 இல் MicroPro International நிறுவனம் முதல் WordStar என்ற Word processing ஐ தந்தது.
1981 இல் முதல் Acorn என்ற IBM personal computer ஐ வெளியிட்டது. இது Microsoft’s MS-DOS operating system ஐப் பயன்படுத்தியது. இதில் Intel chip, இரண்டு floppy disks ,color monitor போன்றவை சேர்க்கப்பட்டு வழங்கப்பட்டது.1981 ஆகத்தில், IBM PC ,MS-DOS 1.0 இயங்குதளத்துடன் கூடிய கணினியை வெளியிட்டது.
1983 இல் Apple’s Lisa முதல் GUI உடன் கூடிய personal computer ஐ அறிமுகப்படுத்தியது.
Gavilan SC என்ற கணினியே முதல் portable computer -laptop – ஆகும்.
1984 இல் மைக்ரொசொப்ட்டும் IBM உம் இணைந்து OS/2 என்ற இயங்குதளத்தை உருவாக்கினர்.
1985 நொவெம்பர் 20 இல் Microsoft நிறுவனம் MS-DOS உடன் கூடிய மைக்ரொசொப்ட் Windows ஐ அறிமுகப்படுத்தியது.
1985 World Wide Web அறிமுகமானதும்,முதல் dot-com domain name March 15 இல் பதிவு செய்யப்பட்டது.
1990 இல் CERN ஐச் சேர்ந்த Tim Berners-Lee World Wide Web ற்காக HyperText Markup Language (HTML) என்ற இணைய மொழியை உருவாக்கியது.
1990 விண்டோஸ் 3.0 ஐ வெளியிட்டது.
பல நீண்ட பாதையைக் கடந்து கணினி இன்று உலகெங்கும் மனிதனின் வேலைகளை இலகுவாக்கி செயல்பட்டு வருகிறது. சாதாரண கணினியாக இருந்து,அன்றாட வாழ்க்கையில் பாவிக்கும்,குளிரூட்டி சாதனம்,கோப்பைகள்,கைகடிகாரம் என அனைத்திலும் தன்னை இணைத்துக் கொண்டது கணினி.
கருத்துரையிடுக Facebook Disqus