"மெட்ரிக் பள்ளி பிள்ளைகளில் பலர் வீட்டு பாடத்தை வேனில் வரும்போதே தொடங்கிவிடுகிறார்கள்."
------------------------------------------------------------------------------------------------------------------------------------------
------------------------------------------------------------------------------------------------------------------------------------------
இதற்கு முந்தைய "டிங்கு டைரி - 7 சாமியுடன் மோதல்"
நான் : திருப்பி பார்த்தல் அது அண்டர்டக்கர்.. ஆஹா மறுபடியும் ஆட்டத்த ஆரம்பிக்கலாமா..
நான் : சரி ஒரு டீல் நான் ராக் கார்ட தர்றேன் நீ இந்த கார்ட எனக்குத்தா.
சாமிநாதன் : என்கிட்ட இருந்து உன்னால இத மட்டும் வாங்க முடியாது.. நான் உன்கூட இப்ப விளையாடுற மூட்ல இல்ல என சொல்லி தன் கையில் இருந்த ரப்பர்பந்தை தரையில் வீசி பிடித்தவாறு வகுப்பு காரிடாரில் வர தமிழ் ஆசிரியர் வந்துவிட்டார்.
தமிழ் ஆசிரியர் : காரிடார்லையா விளையாடுவ... பொய் கிரௌன்ட்ல விளையாடுனு அதட்ட.
ஆசிரியர் விலக சாமிநாதன் பந்தை என்னை நோக்கு வீசினான் ஆசிரியருக்கு பின்னல் வந்த கிருத்திகா முகம் நோக்கி பந்து வந்தது. அதை பார்த்து தன் கண்களை இருக்க மூடிக்கொண்டு கீச்சென சத்தம்போட நான் என் கையை நீட்டி பந்தை பிடித்துவிட்டேன்
அப்போது விழித்த கிருத்திகா என்னைப் பார்க்க நான் அவளை பார்க்க மௌன்னமாக நகர்ந்தால் நான்கு அடி நகர்ந்ததும் மெதுவாக என்னை திரும்பி பார்தால்.
தமிழ் ஆசிரியர் : எங்கடா பந்த வீசுற? முறைக்க பிறகு ஆசிரியருடன் வேகமாக நகர்ந்தால்.
பள்ளி முடிந்ததும் அவள் பள்ளி வாகனத்தில் சென்றால்.. நான் என் சைக்கிளை எடுத்து நகர்ந்தேன். வேன் ஜன்னல் வழியாக கிருத்திகா என்னைப் பார்த்தல். நான் அவளைப் பார்க்காது சைக்கிளைச் சேற்றில் வளைத்து வளைத்து ஓட்ட ஒரு கட்டத்தில் வழுக்கி கிலே விழுந்தேன். நான் விழுந்ததைப் பார்த்த கிருத்திகாவின் முகத்தில் ஒரு புன்முறுவல்.
மறுநாள் என் நண்பர்களுடன் காரிடாரில் பேசிக்கொண்டிருந்தேன் அப்போது சிடுமூஞ்சி சைன்ஸ் ஆசிரிய (எந்த மாணவருக்கும் பிடிக்காத ஒரு ஆசிரியை படிப்பு, ஒழுக்கம், என் மிகவும் கண்டிப்பானவர்) வருவதைப் பார்த்து நாங்கள் அமைதியாக ஒரு மூலயில் நின்றோம். கோபமாக வந்த அவர் வேகமாக பத்தாம் வகுப்பை நோக்கிச் சென்றார், என்னவென்று நாங்களும் அவர் பின் தொடர்ந்தோம். அவர் வகுப்பு கதவருகே நின்று சேகர் வெளிய வா என்றார் பின் பக்கத்து வகுப்புக்குச் சென்று சீபாவை அழைத்தார்.. இரண்டுபேரும் என் பின்னால வாங்க என் வேகமாக பிரின்சிபால் அறையை நோக்கி சென்றார்கள். வழியல் உளவுத்துறை அனித்தா வந்தால். ஆஹா புது கிசுகிசு கெடச்சுருச்சே.. அவர்கள் செல்வதை பார்த்துவிட்டு நாங்க நின்ற இடத்தை நோக்கி ஓடிவந்தாள்..
அனித்தா : விசியம் தெரியுமா அந்த சேகர் லெட்டர் பிரின்சிபால் கிட்ட போய்டுச்சு. இப்போ இவர்கள் பிரின்சிபால் ரூமுக்கு போறாங்க. கண்டிப்பா இது ஒரு பெரிய பிரச்சனையாகும். சேகர் அண்ணா வகுப்பில் முதல் ரேங்குதான் இருந்தாலும் பிரின்சுபால் முடிவுதான் பதில் சொல்லும்.
பிரின்சிபால் அறையில் தமிழாசிரியர், சைன்ஸ் ஆசிரியை முன்னிலையில் அந்த கடிதத்துக்கு சேகர் சீபாவிடம் விளக்கம் கேட்க இருவரும் மௌனமாக நின்றனர்.
சைன்ஸ் மிஸ் : இந்த கடிதம் என்ன பாஷைனுகூட தெரியல...
பிரின்சுபால் : நாங்களும் உங்க வயச கடந்து வந்தவங்க தான். எதுக்கு இவ்ளோ அவசரபடுறீங்க ஒரு பழம் இனிப்பா இருக்கணும்னா அது பலுக்கணும். நாம அவசரப்பட்டுக் காய பருச்கிட்டா அது கசப்பா துவர்ப்பாதான் இருக்கும். வாழ்க்கையும் அதேமாதிரிதான் பொறுமையா இருக்கணும்.
சைன்ஸ் மிஸ் : இத இப்படியே விடக்கூடாது. மத்தவங்களுக்கும் இது ஒரு பாடமா இருக்கணும் என சேகர் சீபா இருவரையும் பார்த்து முறைத்தார்.
சேகர் : சைன்ஸ் மிஸ்சை பார்த்தவாறே மனதுக்குள் ”இத எப்படி சமாளிக்கிறதுன்னு எனக்குத் தெரியும்”
வகுப்பு மணி அடித்ததும் பிரின்சுபால் சேகர் சீபாவை வகுப்புக்குப் போக சொன்னார்.
சைன்ஸ் மிஸ் : பிரின்சுபாலை நோக்கியவாறு.” இது பசங்க படிப்பை பாதிக்கும். அப்பறம் மார்க் வரலைன்னு எங்கள குத்தம் சொல்ல கூடாது. நம்ம ஸ்கூல் பேரே கெட்டுப்போகும். தமிழ் ஆசிரியரை நோக்கியவாறு நீங்க ஏன் எதுவும் பேசாம இருக்கிறீங்க? அந்த பசங்களும் உங்க மாணவங்க தானே
தமிழ் ஆசிரியர் : பிரின்சுபால் சார் எனக்கு வகுப்புக்கு நேரம் ஆச்சு நான் கெளம்புறேன். என வேகமாக அங்கிருந்து கிளம்ப.
சைன்ஸ் மிஸ் : சார் கொஞ்சம் நில்லுங்க
தமிழ் ஆசிரியர் : தன்னிடம் இருந்த அந்தக் கடிதத்தை சைன்ஸ் மிஸ்சிடம் கொடுத்தார். அதில் ஒரு புரியாத மொழிக்குக் கீழ் தமிழ் ஆசிரியர் இதை எழுதியிருந்தார்
“Don’t worry, and let it be. Let the tree grow naturally” - Tingu
சைன்ஸ் மிஸ் : !!!!??????????????
அடுத்த பகுதி "“# X” மொழி" .........
அதற்காகவே பாதை முடிந்திட கூடாது
என ஆசை கொள்கிறேன் நான்!"
“Don’t worry, and let it be. Let the tree grow naturally” - Tingu
சைன்ஸ் மிஸ் : !!!!??????????????
அடுத்த பகுதி "“# X” மொழி" .........
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
"விடாமல் கை பிடித்து நடக்கின்றாய்
குழந்தை போல்!
குழந்தை போல்!
அதற்காகவே பாதை முடிந்திட கூடாது
என ஆசை கொள்கிறேன் நான்!"
கருத்துரையிடுக Facebook Disqus