1
Image result for morse code tamil memes
  
"வருங்கால பொண்டாட்டிக்கு கவித எழுத தெரியலன்னா பரவாயில்ல மோர்ஸ் கோடாவது சொல்லிக்கொடுத்துடுங்க"
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------

 இதற்கு முந்தைய  ""

சைன்ஸ் மிஸ் : பிரின்சுபால் சார், இது என்னனு புரியலையே? 

என்ன?.... படிக்கிற உங்களுக்கும் புரியலையா?

Image result for morse code tamil memes

திரைப்படங்களில் ராணுவ வீரர்கள் அவர்களுக்குள் ரகசிய தகவல்களை மோர்ஸ் கோடில் பேசுவதும், இரவு ஆபத்தில் உதவிக்கு தகவல் சொல்ல  கையில் இருக்கும் டார்ச் கொண்டு சில வினாடி நீட்டாக எரிய விட்டால் அது கோடு என்று கணக்கு வைத்து கொண்டு மோர்ஸ் கோடு மூலம் உயிர் ஆபத்தில் இருக்கிறது என்று தெரிவிக்கும் காட்சிகலை பார்த்திருப்பீர்கள்.

உலகம் எங்கும் "உயிர் ஆபத்தில் உள்ளது "என்பதை குறிக்க பயன் படுத்த படும் வார்த்தை... "S. O. S ." இதன் முழு அர்த்தம் "SAVE OUR SOLE "நம்ம மோர்ஸ் கோடில் sos என்பதை எப்படி தெரிவிக்க வேண்டும் என்று முயற்சி செய்து பாரதால் "புள்ளி புள்ளி புள்ளி..கோடு கோடு கோடு புள்ளி புள்ளி புள்ளி" என்று வரும். (✴✴✴ __   __   ___ ✴✴✴) பார்த்து இருப்பீர்கள்.

உங்களால முடுஞ்சா கீழ இருக்குற விடியோல பூனை சொல்லும் மோர்ஸ் கோடை கண்டுபிடிங்க 




இதே போல எங்கள் பள்ளியிலும் சில வகுப்பு மாணவர்களிடம் ஒரு ரகசிய மொழி இருந்தது “#X” மொழி. இதுவும் மோர்ஸ் கோடு போலதான். அந்த கடித்தில் #X மொழியில் இருந்ததை டீகோட் செய்து எழுதியிருந்தார்

“கவலைபடாதே, அத அப்படியே விடு, மரம் தன்னால வளரும்”

பள்ளியில் தமிழாசிரியர் மாணவர்களுக்கு மரம் வளர்க்க சொல்லியிருந்தார். சீபா வளர்த்த மரம் நோய் தாக்க, சேகர் மருந்துகள் போட்டான். ஒரு வாரம் முடிந்தும் பயன் எதுவும் இல்லை. கவலையில் இருந்த சீபாவை ஆறுதல் படுத்த சேகர் #X மொழியில் எழுதியது தான் அந்த கடிதம்.

இந்த சம்பவத்தை அடுத்து #X மொழி பள்ளி முழுவதும் தீயாக பரவியது. தந்தி வடிவில் குருந்தகவல்கள் பரிமாற்றம் அதிகரித்தது. வாழ்த்துக்கள் சொல்லுவது, மன்னிப்பு கேட்பது, கிண்டல் செய்வது, நகைச்சுவைகள் பகிர்வது, இதில் சில காதல் கடிதங்களும் சேர்ந்தது... சாமிநாதன், கோபால், ஏன் இந்த கிசுகிசு அனித்தாவுக்கும் #X கடிதம் கிடைத்தது. ஆனால் சைன்ஸ் மிஸ்சும் மட்டும் யார்யார்கிட்ட இந்த கடிதங்கள் பரிமாறுகிறது என தேடிக்கொண்டிடுந்தார். 

கடைசியாக தமிழ் ஆசிரியர் டிப்பன் பாக்சிலும் ஒரு கடிதம் இருந்தது. அது யார் என கண்டுபிடித்து அதற்கு பதிலும் #X மொழியிலேயே எழுதி அந்த பெண்ணின் பாடப்புத்தகத்தில் வைத்தார்

வகுப்பில் 

சைன்ஸ் மிஸ் : இந்தவார அறிவியல் தேர்வு....... இந்த கிளாஸ் படு  மோசமான மார்க். எல்லாரும் அவுங்க அவுங்க எழுதுனத பாருங்க. இதுமாதிரி ஒரு மோசமான வகுப்பை நான் பாத்ததே இல்ல. இது எல்லாம் எதுனால. படிப்புக்கு நீங்க கொஞ்ச நேரம் செலவு செஞ்சால் பொது ஆனா யாரும் அத செய்யறது இல்ல. எனக்கு நல்லா தெரியும் இதை யாரும் ஒத்துக்க முடியாது, ஒருத்தராவது சொல்லுங்க. நான் கிரௌண்டுக்கு போக மாட்டேன், கிரிக்கெட் விளையாட மாட்டேன், டீவி பாக்க மாட்டேன் அப்பறம் மொட்ட கடிதம் எழுதமாட்டேன்னு சொல்லுற ஒரு ஆள் உங்க கைய தூக்குங்க பாப்போம்.

என் பக்கத்தில் இருந்த செல்வா மெதுவாக அவன் கையை தூக்கினான்.

சைன்ஸ் மிஸ் : செல்வா நீயா.. கைய கீழ போடு. என்ன நீ ரொம்ப நல்லவன்னு நடிக்கிறியா. எல்லாரும் இந்த டெஸ்ட் பேப்பர வாங்கிக்குங்க.

செல்வனின் ஒரு புத்தகத்தில் உள்ளே இருந்த wwe அண்டர்டக்கர் கார்டை நான் எடுக்க செல்வன் அதை பார்த்து எண்ணிடம் இருந்து அதை புடுங்க சைன்ஸ் மிஸ் அதை பார்த்து அங்க என்ன பண்ணிட்டு இருக்கிறனு கேக்க நான் அவசரமாக ஒரு புத்தகத்தின் நடுவில் அந்த கார்டை சொருகினேன் சைன்ஸ் மிஸ் என் அருகில் வர

சைன்ஸ் மிஸ் : இங்க எத வச்சு விளையாடிட்டு இருக்குற? என்கிட்டே காட்டு என அதட்ட 

செல்வன் : அது என்னுடையது இல்ல மிஸ், பிரபுவுடையது தான் என சொல்ல

சைன்ஸ் மிஸ் என்னை பார்த்தார் நான் செல்வனை பார்த்தேன் பின் மெளனமாக எழுந்து அந்த புத்தகத்தை திறக்க அந்த கார்டை மிஸ் எடுத்தாங்க.

சைன்ஸ் மிஸ் : உனக்கு என்ன தைரியம். நான் அங்க நின்னு கத்திக்கிட்டு இருக்கேன் நீ இங்க விளையாடிட்டு இருக்கிறியா. சரி உன் மார்க்க பாக்கலாம். 

பக்கத்தில் இருந்த என் சயின்ஸ் பேப்பரை பார்க்க. நல்ல நீ யோசி எப்பவாவது நீ நல்ல மார்க் வங்கியிருக்கிரியானு. 

நான் : மொனமாக “இல்ல”

சைன்ஸ் மிஸ் : நீ என் கிளாசிலேயே இருக்க கூடாது. இப்பவே பிரின்சுபால் ரூமுக்கு போ. உங்க  அப்பா அம்மாவ கூப்டு  பேசணும்

மொனமாக நான் நின்றேன் 

சைன்ஸ் மிஸ் : நான் என்ன கிண்டலுக்கா சொல்றேன். சீக்கிரம் போ என என்னை அதட்டினார்.

நான் : செல்வாவின் தலையில் பலமாக தட்டியவாறு, இருடா உன்ன வந்து வச்சுக்குறேன், என முறைத்தவாரே அங்கிருந்து நகர்ந்தேன்.

பள்ளியில் இருந்து பிரபு நீக்கப்படுவானா? செல்வாவை பளிதீர்பானா?  செல்வா பிரபுக்கு கொடுத்த கடிதம் பதிலுக்கு பிரபு செய்த பதிலடி என்ன ?

அடுத்த பகுதி  "முல்லை முல்லாலதான் எடுக்கணும்" .........  


முந்தைய டைரிகள் [1] [2] [3] [4] [5] [6] [7]


---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------



Image result for morse code tamil memes 

"தோழி க்கும்,காதலி க்கும் வித்யாசம் என்னன்னா தோழி கிட்ட சைட் அடிக்கிறேன் ன்னு சொல்லலாம் காதலி கிட்ட ..... சொல்லித்தான் பாருங்களேன்"

கருத்துரையிடுக Disqus

 
Top