இப்போது வலது பக்கம் பார்த்தீர்களே யானால் உங்களுக்கு கீழ்கண்ட் விண்டோ கிடைக்கும். அதில் நீங்கள் எந்த நாட்டுடைய பாஸ்போர்ட் வேண்டுமோ அந்த நாட்டினுடையதை தேர்வு செய்யுங்கள்.அதன் கீழேயே போட்டோ அளவுகளை மாற்றுதலுக்காக நிறைய வசதிகள் கொடுத்துள்ளார்கள். மேலும் போடோவில் நாம் நமது விருப்பமான வார்த்தைகளையும் கொண்டுவரலாம்.
ஒ.கே.கொடுத்தால் கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். அதில் உங்களுக்கு எவ்வளவு புகைப்படம் தேவையோ அதனை தேர்வு செய்துகொள்ளுங்கள்.
போட்டோ பிரிண்ட் சைஸையும் நாம் தேர்வு செய்துகொள்ளலாம்.
கடைசியாக ஓ,கே.கொடுங்கள். உங்களுக்கு போட்டோஷாப் துணையில்லாமல் பாஸ்போர்ட் போட்டோ ரெடி.குறிப்பாக இது டிரையல் விஷன் பதிப்பு. நன்றாக இருந்தால் வாங்கி பயன்படுத்திக்கொள்ளுங்கள்.
கருத்துரையிடுக Facebook Disqus