சாதாரணபோட்டோக்களையே நாம் அழகுபடுத்தும்போது அதன் அமைப்பே மாறிவிடுகின்றது. இந்த சின்ன சாப்ட்வேர் இந்த வசதியை நமக்கு அளிக்கின்றது. இதனை பதிவிறக்கம் செய்ய நீங்கள்இங்கு கிளிக் செய்யவும். இதனை இன்ஸ்டால் செய்ததும் நீங்கள் தேவையான புகைப்படத்தை திறந்து கொள்ளவும். நான் இந்த புகைப்படத்தை தேர்வு செய்துள்ளேன்.
இப்போது பேக்கிரவுண்ட்சேல்ட்சேய்துகொள்ளுங்கள். இதில் கொடுது்துள்ள 7 டிசைன்கள் பிடிக்கவில்லையென்றால் நீங்கள் உங்கள் கணிணியில் இருந்தும் தேர்வு செய்துகொள்ளலாம்.கீழே உள்ள விண்டோவினை பாருங்கள்.
இப்போது நீங்கள் புகைப்படத்தை தேர்வுசெய்யுங்கள். உங்களுக்கு படம் இதுபோல் வரும். தேவையான இடத்தில் கர்சரைகொண்டு நகர்த்தி வையுங்கள். இப்போது இடதுபுறம் வரிசையாக மெனுக்கள் இருக்கும் தேவையானதை தேர்வு செய்யுங்கள். கிளிக் ஆர்ட் சுமார் 54 படங்கள் இதில் உள்ளன. தேவையான படத்தினை கிளிக செய்து ஓ.கே .கொடுத்தால் அது படத்தில் வந்துவிடும்.
அதைப்போலவே டெக்ஸ்ட் அமைப்பும். அதனையும் கிளிக் செய்ய உங்களு்க்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். தேவையான பாக்ஸ் தேர்வு செய்து அதில் வரும் வாக்கியதினை இன்புட்டில் தட்டச்சு செய்யவும்.
படத்தினை சுற்றிவரும்பார்டர் சுமார் 30 பார்டர்களையும் நீங்கள் தேர்வு செய்யலாம்.கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.
சாதாரண படம் டிசைன்செய்தபின்னர் எப்படி மாறிவிட்டது பார்த்தீர்களா?
நீங்களும் விதவிதமான டிசைன்கள் செய்துபாருங்கள்.
கருத்துரையிடுக Facebook Disqus