Latest News

தீபாவளி வந்துவிட்டாலே அனைவரது மனமும் குதூகலத்தில் இருக்கும். அதிலும் அந்த தீபாவளி வரப்போகிறது என்றால், இத்தனை நாட்கள் இருந்த வீட்டிற்கும், இப்போது இருக்கும் வீட்டிற்கும் நிறைய வித்தியாசங்களை காணலாம். ஏனெனில் அவ்வளவு பளிச்சென்று வீடே பார்ப்பதற்கு அழகாக இருக்கும். மேலும் வீட்டில் பல இனிப்புகள் செய்து, விருந்தினர்கள் வந்தால், அவர்களுக்கு அந்த பலகாரங்களை கொடுத்து, அவர்களின் பாராட்டை பெற வேண்டும் என்று சிலர் போட்டிப் போட்டு இனிப்புகளை செய்வர். மேலும் சிலர் வீட்டை அழகாக அலங்கரித்தோ, அழகான கோலங்களைப் வரைந்தோ பாராட்டைப் பெற நினைப்பர்.


அவ்வாறு கோலங்கள் போட நினைப்பவர்களுள் பெரும்பாலும் அழகாகவும் ஈஸியாகவும் தான் போட்டு முடிக்க வேண்டும் என்று ஆசைப்படுவர். ஆகவே அப்போது அவர்கள் அதற்கு புள்ளி வைத்து போடும் கோலங்களைத் தான் தேர்ந்தெடுப்பர். ஆனால் தற்போது அந்த புள்ளிக் கோலங்களுக்குப் பதிலாக, ரங்கோலிக் கோலங்களைப் போட்டால், அழகாக இருக்கும்.
அதிலும் ரங்கோலிக் கோலங்களைப் போட்டு, அதனை தீபங்களால் அலங்கரித்தால், அதன் அழகே தனியாகத் தெரியும். இப்போது அந்த ரங்கோலிக் கோலங்களில் சில உங்கள் பார்வைக்கு...

பூ டிசைன் ரங்கோலி

 

இந்த டிசைனில் பூவை வரைந்து, கலர் பொடியை உப்பால் கலந்து, அதற்கு போட்டு, அதன் முனைகளில் தீபங்களை வைத்தால், சூப்பராக இருக்கும்.

புள்ளிக் கோலம் மற்றும் ரங்கோலி

இந்த கோலத்தில் முதலில் ஏதேனும் ஒரு புள்ளிக் கோலத்தை போட்டு, அதனைச் சுற்றி தீபங்களை வரைந்து, அந்த தீபத்தின் மேல் விளக்குகளை வைக்க வேண்டும். இதனால் பார்க்க சற்று வித்தியாசமாகவும், அழகாகவும் காணப்படும்.

வித்தியாசமான ரங்கோலி

என்ன பெயரே வித்தியாசமாக இருகிறதா? ஆம், ஏனெனில் இந்த ரங்கோலியில் முதலில் வேண்டிய நிறத்தை தூவி விட்டு, பின் அதன் மேல் வெள்ளை நிறக் கோலப்பொடியால் டிசைனை வரைந்து, தீபங்களால் அலங்கரிக்க வேண்டும். அதனால்

லட்டு ரங்கோலி

இந்த ரங்கோலியில் லட்டுவை அடுக்கி வைத்ததுப் போல் வரைந்து, பின் அதற்கு சற்று கண்களை பறிக்கும் நிறங்களால் நிரப்பி, பின் அதில் அழகாக தீப விளக்குகளை வைத்தால், அருமையாக இருக்கும்.

பூவால் அலங்கரிக்கப்படும் வித்தியாசமான ரங்கோலி

இதுவும் வித்தியாசமான ரங்கோலி தான். ஆனால் இதில் வித்தியாசமான தீபங்களின் டிசைன் மற்றும் ரோஜாப் பூக்களால் அலங்கரித்துள்ளதால், இது இவ்வாறு அழைக்கப்படுகிறது.

ரோஜாப்பூ லட்டு ரங்கோலி

இந்த ரங்கோலியிலும் லட்டுகளாக வரைந்து, அதன் நடுவே ரோஜாப்பூக்களை அழகாக அடுக்கி, பின் அதனைச் சுற்றி, தீபங்களை வைக்க வேண்டும்.

பூவின் நடுவே தீபம்

இந்த லட்டு டிசைனை சற்று வித்தியாசமாக நடுவே ஒரு பெரிய அழகான தாமரை வடிவ தீபத்தை வைத்து அலங்கரித்து, கலைக் கண்ணோட்டத்துடன் பார்த்தால், ஒரு பூவின் நடுவே மற்றொரு பூவான தாமரை மலர்ந்திருப்பது போன்று இருக்கும்.

சங்கு டிசைன் ரங்கோலி

இந்த ரங்கோலியில் கட்ட கட்டமாக வரைந்து, அதன் நடுவே சங்கை வரைந்து, அதன் மூலைகளில் விளக்குகளால் அலங்கரித்தால், மாலை நேரத்தில் அழகாகக் காணப்படும்.

 
Top