Latest News

0
 வெறும் சுள்ளிகளால் நெருப்பை மூட்டி அதன் மூலம் மொபைலை சார்ஜ் ஏற்றவும் தேநீர் தயாரிக்கவும் உதவும் வகையில் பயோலைட் கேம்ப்ஸ்டவ் ஒன்று தற்போது கிடைக்கிறது. இந்த ஸ்டவ்வில் இரண்டு அறைகள் உள்ளன. ஓர் அறையில் சுள்ளிகளைப் போட்டு எரிக்கலாம்; அந்த அறையின் மீது பாத்திரத்தை வைத்துச் சூடேற்றலாம். ஒரு லிட்டர் தண்ணீரை நான்கைந்து நிமிடங்களில் கொதிக்க வைக்கலாம். ஆகவே தேவையான தேநீரைத் தயாரித்துக்கொள்ளலாம். அடுத்த அறையில் வெப்ப ஆற்றலை மின் ஆற்றலாக மாற்ற வசதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் கிடைக்கும் மின்சாரத்தை மொபைலுக்கு சார்ஜ் ஏற்றப் பயன்படுத்த வாகாக பிளக் பாயிண்ட் தரப்பட்டுள்ளது. 5 வோல்ட் மின்சாரத்தை இது உற்பத்தி செய்யும். மொபைலை சார்ஜ் ஏற்றிக்கொள்ள இது போதும். இதன் விலை சுமார் 130 அமெரிக்க டாலர்.

இந்த ஸ்டவ்வை மிக எளிதாக எங்கும் எடுத்துச் சென்று பயன்படுத்த இயலும்.

கருத்துரையிடுக Disqus

 
Top