0
 Image result for school tamil meme 

"பள்ளி சென்ற நாட்கள் திரும்ப
கிடைக்குமா என்று சொல்லும்
நாம்தான் பாட்டி, தாத்தாவை
பலமுறை லீவு லெட்டரில்
கொன்றோம்"

-------------------------------------------------------------------------------------------------------------------------------------------
இதற்கு முந்தைய பதிவு 
 
சைன்ஸ் மிஸ் : தனியா நீ இங்க என்ன பண்ற ?.

நான் : சிறிதும் யோசிக்காமல் "ஹோம்வொர்க் பண்ணுறேன் மிஸ்."

சைன்ஸ் மிஸ் : வீட்டுல ஹோம்வொர்க் செய்ய சொல்லி குடுத்தா அத செய்யாம அப்படி என்னவேலதான் இருக்குமோ உனக்கு.. என சொல்லி அங்கிருந்து நகர.

 நான் : ஒரு பெரிய நிம்மதி பெருமூச்சுடன் "ஹப்ப .... கிரேட் எஸ்கேப்".. 

தன் சீட்டுக்கு வந்த செல்வா தன் புத்தகத்திற்குள் இருந்த நான் எழுதிய கடிதத்தை அவன் மனதிற்குள் வாசித்தான். சோகமாக இருந்தவன் திடிரென இனம்புரியாத மகிழ்ச்சி அடைந்தான், எனக்குன்னு பொறந்தவ இங்கதான் இருகுராலா.....

அந்த கடித்ததில் சொன்னவரே அன்று மதியம் மப்ளர் கட்டிக்கொண்டு சாப்பிட சென்றன். அங்கு இருந்தவர்கள் செல்வாவை விநோதமாக பார்க்க சாமிநாதனும் நானும் அவன் எதிரில் அமர்ந்தோம். செல்வாவின் கண்களோ எங்கள் இருவரை தவிர அனைவரையும் நோட்டம் விட்டுக்கொண்டிருந்தது. சாமிநாதன் மௌன மொழியில் என்ன ஆச்சு இவனுக்கு என என்னை கேற்க நானும் மௌன மொழியில் தெரியல என என் தழையை ஆட்டினேன்.

பள்ளியில் அடுத்தநாள் காலையில் லேட்டாக வருபவர்களை சைன்ஸ் மிஸ் உத்தரவின் கீழ் இரு மாணவர்கள் கொண்ட பறக்கும் படை  குழு தாமதமாக வருபவர்களை பிடித்து அவர்கள் பெயர், எந்த வகுப்பு, வகுப்பு ஆசிரியர்  பெயர் போன்ற விபரங்களை வாங்கிக் கொண்டிருந்தனர் அதில் சாமிநாதனும் இருந்தான். வேகமாக வந்த எனக்கு கூட்டம் தென்பட படி மறைவில் ஒதுங்கினேன். அப்போது கிருத்திகாவும் தாமதமாக வந்தால். நான் அவளை பார்த்ததும் அவள் கைகளை பிடித்து இழுத்து படி மறைவில் நிறுத்தினேன். 

நான் : இங்க பாரு அவங்கள இங்க இருந்து நான் போக வைக்கிறேன். அப்பறம் நீ முடிந்த அளவு வேகமாக கிளாசுக்கு ஓடு.

நான் வேகமாக படியில் ஏறி மேல் தளத்திர்கு ஓட அந்த குழு என்னை துரத்த ஆரம்பித்தது. இருவரும் நகர்ந்த நேரத்தில் கிருத்திகா நேராக வகுப்பை நோக்கி வேகமாக ஓடினாள். நான் அவர்களை திசை திருப்பி தப்பினேன்.

வகுப்பாசிரியர் வர தாமதமானத்தால் கோபால் பாடத்தை டிக்டேட் செய்துகொண்டிருந்தான், நேரம் ஆகா ஆகா வகுப்பில் இருந்த கிருத்திகா எனக்கு என்ன ஆனது என நினத்துக் கொண்டிருந்தால். பாடத்தை கூட கவனிக்காமல் என்னையே நினைத்துக் கொண்டிருக்க சிறிது நேரத்தில் நான் வகுப்பை அடைந்தேன். கிருத்திகாவை பார்த்தவாறே என் சீட்டிக்கு சென்றேன் கிருத்திகாவுக்கு என்னை பார்த்ததும் தான் அவள் மனதுக்குள் ஒரு நிம்மதிவந்தது. 

சாமிநாதன் : நீயும் மாட்னியா.

நான் : இல்லையே. என்ன புடிக்க இந்த ஸ்கூல்ல ஒரு ஆள்கூட இல்ல ..

சாமிநாதன் : உனக்கு எப்பவுமே லக்கு தான்டா.

தமிழாசிரியர் உள்ளே வர கோபால் அவன் இடத்துக்குச் சென்றான்.

தமிழாசிரியர் : "இந்தவாரத்தில் இது எட்டாவது புகார், உங்கள நான் கெஞ்சி கேட்டுக்குறேன், நான் வாங்கிட்டு இருக்குற கம்மி சம்பளத்தையும் வராம பண்ணிடாதீங்கடா.. சாமிநாதா அடுத்ததடவ நீ லேட்டா வந்து மாட்டுனேனா நான் உங்க வீட்டுக்குத்தான் சாப்பிட வரணும் பாத்துக்கோ." எல்லாரும் சிரிக்க.. சரி சரி.. கொஞ்சம் சீரியஸா பாடத்துக்கு போவோமா இல்லன எல்லாரும் தூங்கிடுவீங்க..

அப்போது உள்ள வரலாமா சார் என கதவை திறந்த பறக்கும் படை குழு செல்வனை பிடித்து கொண்டுவந்தனர். இவன் ஹாஸ்டல் பாத்ரூமில் வழுக்கி விழுந்துவிட்டான் ஐயா அதனால இவன் ஸ்கூல்க்கு லேட்டா வந்தான். கூடவே செல்வா லேட்டா வந்ததை புகாராக ஒரு கடிதமும் தந்தனர்.

செல்வன் : என்ன மனுச்சிடுங்க ஐயா கீழ விழுந்துட்டேன் அதனால லேட் ஆய்டுச்சு.

தமிழாசிரியர் : எண்டா ஒருத்தன் கீழ விழுந்து அடிபட்டுகிடந்தாலும் புகாராடா பண்ணுவீங்க.... நல்லா இருக்குது உங்க கொள்கை.. உனக்கு அடிபட்டிருக்கு செல்வா. முதல்ல இதுக்கு முதலுதவி செய்யனும்.. பிரபு நீ செல்வனை கூட்டிட்டு பொய் பக்கத்துல இருக்குற ஹோச்பிட்டலுக்கு காட்டு.

நான் : சரி சார்.

பக்கத்திலிருந்த மருத்துவமனயில் பிளாஸ்திரி ஒட்டிய நர்ஸ் செல்வனை பார்த்து "பேண்டை கழட்டு ஊசி போடணும் என்றார்"

நான் : ஆமாண்டா ஊசி போட்டா தான் சரியாகும்.

நர்ஸ் கொண்டு வந்த ஊசியை பார்த்ததும் செல்வன் ஐயோ ஊசியா என கத்தியவாறு பள்ளியை நோக்கி ஓடினான்........

நாட்கள் நகர்ந்தது.........

ஒரு நாள் வகுப்பில் சைன்ஸ் பாடம் போய்க் கொண்டிருந்தது. என் பக்கத்தில் இருந்த செல்வன் காதல் மயக்கத்தில் இருந்தான். அதை கவனித்த மிஸ் செல்வனை கூப்பிட அவன் நினைவு அங்கு இல்லை. நான் அவனை தட்டி சுயநினைவுக்கு திருப்பினேன். போர்டில் இருந்த ஒரு சூத்திரத்தை சரி செய்ய மிஸ் சொல்ல சிலை போல நின்றான்  கையில் அந்த கடிதத்துடன். பிறகு கோபால் சென்று சூத்திரத்தை சரிசைதான். வகுப்பு முடிந்து எங்கு சென்றாலும் சிரித்தவாறு கையில் அந்த கடிதத்துடனே சென்றான்.

சாமிநாதன் : இவனுக்கு என்னதாண்டா ஆச்சு. கொஞ்சநாலவே இவன் போக்கே  சரியில்ல.

நான் : இவன் எப்பவும் இப்படிதான் இருக்குறான்.

சாமிநாதன் : இவன் பாத்ரூம்ல விழுந்ததிலிருந்து ரொம்ப மாறிட்டான். இவன் தலையில் அடிபட்டு ஏதாவது மூல குழம்பிடுச்சா?..

நான் : எனக்கு தெரியல.      

இன்றவலில் செல்வா ஆசிரியை ரெஸ்ட் ரூமுக்கு செல்ல, உள்ளே இருந்த சைன்ஸ் மிஸ் கத்த, செல்வன் வெளியே  ஓடி வந்தான்.

செல்வா போகப்போக என்ன என்ன செய்வானோ!!!! பிரபு இதுல மாட்டுவானா? 

அடுத்த பகுதி  "முட்டை பப்சும் சாமியின் ஐடியாவும் ".........  


முந்தைய டைரிகள் [1] [2] [3] [4] [5] [6] [7] [8] [9]


---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

Related image

அன்று கிடைத்த சந்தோஷம்
இன்று கிடைக்கவில்லை பள்ளி சிறுவர்களுக்கு
1)கிட்டி புல்
2)பாண்டி
3)பச்சை குதிரை
4)நொன்டி
5)கண்ணாமூச்சு
6)ஐஸ்பாய்
7)பல்லாங்குழி
8)திருடன்போலிஸ்
9)ஆவின் மணியாவின்
10)7ஸ்டோன்
11)டயர் ஓட்டியது

கருத்துரையிடுக Disqus

 
Top