Latest News

சலவைக்கல் போல வழுவழு மேனி, பழுப்பு கூந்தல், அகன்ற விழிகள்.. இதெல்லாம் பார்பி போன்ற பொம்மைகளின் சிறப்பம்சங்கள். உக்ரைனை சேர்ந்த 19 வயது பெண் மேக்கப் செய்துகொண்டு சிறிது நேரத்தில் அச்சு அசலாக பொம்மை போலவே மாறிவிடுகிறார்.

உக்ரைன் நாட்டை சேர்ந்தவர் அனஸ்டாசியா ஷபகினா (19). சிறு வயதில் இருந்தே மேக்கப் கலையில் அலாதி ஆர்வம். கார்ட்டூன் மற்றும் அனிமேஷன் படங்களில் வரும் கதாபாத்திரங்கள் போல மாற வேண்டும் என்பது இவரது நீண்ட கால ஆசை. மேக்கப் மூலம் தன்னை சிறிது நேரத்தில் பொம்மை போலவே மாற்றிக் கொண்டு விடுகிறார். இதற்காக உணவு கட்டுப்பாடு, உடற்பயிற்சிகளை பின்பற்றி உடலை ஸ்லிம் ஆக்கியிருக்கிறார்.

சருமத்துக்கான லோஷன், ஐலைனர் என்று அழகு சாதன பொருட்களுடன் களமிறங்கினால், அரை மணி நேரத்துக்குள் பொம்மை போல மாறிவிடுகிறார். பொம்மையாக மாறும் தனக்கு ‘ஃபுக்காசுமி’ என்று பெயர் சூட்டிக் கொண்டிருக்கிறார். மேக்கப் செய்து, பொம்மையாக மாறுவதை வீடியோ பதிவாக்கி இணையதளத்தில் வெளியிட்டுள்ளார். அதை 1.5 லட்சம் பேர் பார்த்திருக்கின்றனர். பேஸ்புக்கில் ஃபுக்காசுமியின் ரசிகர்கள் எண்ணிக்கை 10 ஆயிரத்தை தாண்டியுள்ளது.

 
Top