Latest News

நீல கலரா பாத்ததும் நம்ம நாட்டு கிரிக்கெட் டீம்னு நினைக்காதிங்க, அட இவங்க ஹொக்கி டீம் குட இல்லீங்க, இவர்கள் தான் நம் நாட்டு கால்பந்து டீம், சர்வதேச கால்பந்து சம்மேளனம் (ஃபிஃபா) வெளியிட்டுள்ள தரவரிசைப் பட்டியலில் இந்திய கால்பந்து அணி 168ஆவது இடத்தைப் பிடித்துள்ளது.


முன்னதாக 169 ஆவது இடத்தில் இருந்த இந்திய அணி, சமீபத்தில் நடைபெற்ற நேரு கோப்பை போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றதன் மூலம் ஓர் இடம் முன்னேற்றம் கண்டு 114 புள்ளிகளுடன் 168ஆவது இடத்தைப் பிடித்துள்ளது.
யூரோ கோப்பை கால்பந்து போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற நடப்பு உலக சாம்பியனான ஸ்பெயின் 1611 புள்ளிகளுடன் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. ஜெர்மனி 1459 புள்ளிகளுடன் 2ஆவது இடத்தைத் தக்கவைத்துக் கொண்டுள்ளது. போர்ச்சுகல் அணி ஓர் இடம் முன்னேறி 1259 புள்ளிகளுடன் 3ஆவது இடத்தைப் பிடித்துள்ளது.

ஆர்ஜென்டீனா 3 இடங்கள் முன்னேறி 4ஆவது இடத்தையும், இங்கிலாந்து இரு இடங்களை இழந்து 5ஆவது இடத்தையும் பிடித்துள்ளன. ஆப்கானிஸ்தான் இந்தியாவைவிட இரண்டு இடங்கள் மேலே, அதாவது 166-வது இடத்தில் உள்ளது. வங்கதேசம் 169-வது இடத்திலும், பாகிஸ்தான் 177-வது இடத்திலும் உள்ளன.

எப்படியோ  பாகிஸ்தான் நம் டீமுக்கு கீழ தான் இருகுரங்க.. இந்தியா கால்பந்து டீமுக்கு வாழ்த்துக்கள்...
 
Top