Latest News

 
ஒவ்வொரு அரசியல் கட்சிகளுக்கும் ஒரு சின்னம் இருக்கிறது. அதுபோல இந்த தீபாவளித் திருநாளில் இந்த அரசியல் கட்சிகளுக்கான  வெடியை ஒதுக்கினால் எந்த கட்சிக்கு எந்த வெடியை ஒதுக்கலாம் என்பதை இங்கே பார்க்கலாம்.
அதிமுக : இதற்கு சங்கு சக்கரத்தை ஒதுக்கலாம். காரணம் இது ஜெயலலிதாவை மட்டும் சுற்றி சுற்றி வரும்.
திமுக : இதற்கு சரவெடியை ஒதுக்கலாம். காரணம் இது ஒரு பெரிய குடும்பம் தாத்தாவில் ஆரம்பிச்சால் பேரன் பேத்திவரை தொடர்ந்து வெடிக்கும்
தேதிமுக : இதற்கு புஸ்வாணம் ஒதுக்கலாம். காரணம் இது புஸ் என்று பிரகாசமாக வந்து உடனே மங்கி போய்விடும்.
பாமக :  இதற்கு புளுத்து போன வெடிகள் ஒதுக்கலாம். வெடிக்காமல் தெரு ஒரம் கிடக்கும் புளுத்து போன வெடிகள்
காங்கிரஸ் : இதற்கு ராக்கெட் ஒதுக்கலாம். ராக்கெட் தமிழகத்தில் பத்த வைச்சால் டில்லியில் போய் வெடிக்கும்
மதிமுக : இதற்கு பாம்பு வெடி ஒதுக்கலாம் .பாம்பு வெடி புஸ் என்று சீறி ஒடி அமைதியாக அடங்கிவிடும்
பிஜேபி : இதற்கு லட்சுமி வெடி ஒதுக்கலாம். லட்சுமி வெடி கடவுள் பெயரால் மிக பலத்த சத்தத்துடன் வெடிப்பதால் தனித்தனியாகதான் வெடிக்கும்
கம்யூனிஸ்ட் : இதற்கு கேப் வெடி ஒதுக்கலாம். கேப்வெடி பொட்டுமாதிரி சின்ன டப்பாவில்(உண்டியல்) இருக்கும். இதை சுத்தியல் அல்லது கல்லால் ஒன்று ஒன்றாக அடித்து வெடிப்பார்கள்
அந்தெந்த கட்சி உறுப்பினர்கள் அவர்கள் கட்சிக்கு என்று ஒதுக்கிய வெடிகள் மட்டும் வெடிக்குமாறு அறிவுருத்தப்படுகிறார்கள். மாறி வெடித்தால் கட்சியின் அடிப்பட உறுப்பினர்கள் பதவியில் இருந்து விலக்கப்படுவார்கள்
 
Top