இருக்கிற வியாதி குணமாகணும்னா நீங்க மீனும்
கோழியும் சாப்பிடறதை நிறுத்தித்தான் ஆகணும்.
நோயாளி : எப்படி doctor அதுங்க சாப்பிடறதை நான் நிறுத்த முடியும்????
2) அப்பா: நேத்து ராத்திரி பரிச்சைக்கு படித்தேன்னு சொன்ன, ஆனா உன் ரூம்‘ல லைட்டே எரியல?
மகன்: படிக்குற
இன்ட்ரெஸ்ட்ல அதை எல்லாம் நான் கவனிக்கலப்பா!!
3) ஆசிரியர் : நியூட்டன் ஒரு மரத்தடியில் உட்கார்ந்திருக்கும்போது, அவர் தலையில் ஒரு ஆப்பிள் விழ, அவர் புவியீர்ப்பு விசையைக் கண்டுபிடித்தார். இதிலிருந்து என்ன தெரிகிறது?
மாணவன் : இப்படி வகுப்பறையில உட்கார்ந்துக்கிட்டு சும்மா புத்தகத்தைப் புரட்டிக்கிட்டு இருந்தா ஒண்ணும் கண்டுபிடிக்க முடியாதுன்னு தெரியுது…
4) ஆண்: என்னோட மனைவியைக் காணோம்..ஒரு அஞ்சு
நிமிஷம் நீங்க என்கூட பேசிட்டிருக்க முடியுமா?
பெண்: எதுக்கு?
ஆண்: நான் ஏதாச்சும் பெண்கள்கூட ஒரு நிமிஷம்
பேசினாலே, என் மனைவி என் முன்னாலா ஆஜராயிடுவா..!
5) தந்தை: மகனே நீ பரீட்சையில பாஸானா உனக்கு ஒரு சைக்கிள் வாங்கித் தரேன்...
மகன்: ஃபெயிலாயிட்டா..?
தந்தை: பத்து சைக்கிள் வாங்கித் தரேன். சைக்கிள் கடை வச்சிப் பொழைச்சிக்கோ..
6) டாக்டர் : தினமும் காலையில வெறும் வயித்துல அரை மணி நேரம் நடந்தா உங்க வெயிட் குறைஞ்சிடும்.
பேஷண்ட் : யார் வயித்துல டாக்டர் நடக்கணும்?
7) தலைவர் : என்னப்பா மேடையில ஓடா வந்து விழுது…?
தொண்டர் : ஓட்டை அள்ளி வீசுங்கன்னு சொன்னதை தப்பா புரிஞ்சிக்கிட்டாங்க..