2. வாசலில் நேம் போர்ட் வைக்கிற வழக்கம் இருந்தா அதிலே உங்க பேருக்குக் கீழே அவுட் ந்னு செட் செஞ்சு வச்சாலும் கொசு ஆள் அவுட்ன்னு உள்ளே வராது.
3. அப்புறம் வீட்டிலே இருக்கிற எல்லோரும் அவங்கவங்க படுக்கையிலே டம்மி உருவங்களை செஞ்சு (அட அதாங்க சோளக்கொல்லை பொம்மையாட்டம் வைக்கப்போர் எல்லாம் சொருகி) அதை படுக்கையில் படுக்க வச்சு போத்தி விட்டுட்டு பக்கத்து ரூம்லே போயி (ஒரே ரூம் இருக்கிறவங்க..கட்டிலுக்குக் கீழே போய்) படுத்துக்கணும். உங்க டம்மியை விடிய விடிய கடிச்சு கொசு நொந்து போயிடும்.
4.கொசுவுக்கு வெள்ளை நிறம் ஆகாதாம். அதனாலே வீட்டிலே இருக்கிற எல்லோரும் பாரதிராஜா படத்திலே வர்ற வெண்ணிற ஆடை தேவதைகள் கெட் அப்லே ட்ரஸ் செஞ்சுக்கிட்டா கொசுக் கடியிலிருந்து தப்பிக்கலாம். ஆனா பாதி ராத்திரி உங்களைப் பாத்து நீங்களே பேய்ன்னு பயந்துகிட்டா அதுக்கெல்லாம் நாங்க ஜவாப்தாரி இல்லை.
5. எப்பவும் உங்க வீட்டுக்கு புதுசா ஒரு விருந்தாளியை ராத்திரி தங்க வைக்க ஏற்பாடு செஞ்சுடுங்க. உங்க ரத்தத்தையே குடிச்சுக் குடிச்சு அலுத்துப் போன கொசு புது ரத்தம் கிடைச்சா உங்களை சீ சீ போ இந்த ரத்தம் புளிக்கும்ன்னு கடிக்காம விட்டுடும்.
6. எப்பவும் வீட்டுக்கு வெளியே டு லெட் போர்ட் தொங்க வச்சு வைங்க. வூடு காலின்னு நெனச்சுட்டு கொசு வராது.
7. கொசு ரத்தத்தைத்தான் குடிக்கும். ஆனா அதுக்கு ரத்தத்தைப் பாத்தா அலர்ஜி. மயக்கம் வரும்ன்னு அமெரிக்காவிலே புதுசா ஆராய்ச்சி செஞ்சு சொல்லியிருக்காங்க. (பின்னே நம்ம கூடுவாஞ்சேரி குப்புசாமி டாக்டர் சொன்னா யாரு கேக்கறாங்க). அதனாலே பீட்ரூட் சாறை உடம்பு மேலே பூசிக்கிட்டுப் படுங்க. ரத்தகளறியைப் பாத்து கொசு பயந்து மயக்கம் போட்டு விழுந்துடும்.
8. உடம்பு பூரா ஊசியாலே குத்தி வச்சுக்கிட்டுப் படுங்க. நமக்கு முன்னாலேயே வேற கொசு வந்து ரத்தம் குடிச்சிடுச்சு. பாவம் பொழச்சுப் போகட்டும்ன்னு கொசு உங்களை கடிக்காம விட்டுடும்.
9. கொசுவோட லாஜிக் படி அதோட ரீங்காரம் அதுக்கே புடிக்காதாம். அதனாலே கொசு ரீங்காரத்தை டேப் ரிகார்டரில் (அட மொபைல்லே தான் இப்போ அந்த வசதி இருக்கே) பதிவு செஞ்சு வச்சு விடிய விடிய பாட விடுங்க. அப்புறம் ஒரு கொசு உங்க வூட்டுக்குப் பக்கம் தல வச்சுப் படுக்காது.
10. இதான் ரொம்ப முக்கியம். உங்க கையிலே எயிட்ஸ் நோயாளின்னு பச்சை குத்தி வச்சுக்சுக்கிங்க. ஒரு கொசு கூட உங்க கிட்டே வராது.