0
 
"அன்பு காட்ட ஆறறிவு தேவையில்ல😏
சக உயிர சதையா மட்டும் பாக்காம,
அவங்களுக்கும் உணர்வு இருக்குனு புரிஞ்சாவேபோதும்
அன்பு தானாவரும்."

-------------------------------------------------------------------------------------------------------------------

இதற்கு முந்தைய பதிவு டிங்கு டைரி - 11 "கிருத்தியின் பார்வையில் நான்"

சைன்ஸ் மிஸ் கத்தியவாறு அவசர அவசரமாக வர எதிரே வந்த தமிழாசிரியரை பார்த்து கோபமாக "உங்க மாணவன் செல்வனுக்கு என்ன ஆச்சு. கொஞ்சம் விசித்திரமா நடந்துக்குறான் என்னன்னு கொஞ்சம் விசாரிங்க." 

தமிழாசிரியர் : கொஞ்சம் கோவபடாம என்ன நடந்ததுன்னு தெளிவா சொல்லுங்க.

சைன்ஸ் மிஸ் : அது வந்து அவன்.. சீ சீ... அத அவன்கிட்டையே போய் கேளுங்க.

தமிழாசிரியர் : சரி நான் என்னன்னு அவன்கிட்ட விசாரிக்கிறேன்.. நீங்க கொஞ்சம் கோவபடாம இருங்க...

தமிழாசிரியர் அவர் வகுப்பு மாணவர்கள் சிலரை டீச்சர் ரூமுக்கு வரசொல்லி ஒரு சிறிய விசாரணை நடத்தினார். 

கோபால் : ஹாஸ்டல்ல ரொம்ப நேரம் தூங்காம இருப்பான் சார்.

செந்தில் : எதையோ அதிகமா படிக்கிறான் சார்.

கார்த்திக் : அவன் புக் படிக்கிறது இல்ல எதோ லெட்டர தான் படிக்கிறான். அத படுச்சதும் சந்தோசமா சிரிப்பான் சார்.

சாமிநாதன் : அவன் தலையில அடிபட்டதிளிருந்து சுத்தமா மாறிட்டான் சார். வகுப்புல பிரபுதான் அவன் பக்கதில் இருப்பான் சார். 

தமிழாசிரியர் : ஆமா பிரபு நீ அவன் பக்கத்துலதானே இருக்குற. அவன் வீட்டுல எதாவது பிரச்சனையா.

நான் : இல்ல சார், எனக்கு தெரியல.

வகுப்பு மணியடிக்க 

தமிழாசிரியர் :  இப்ப நீங்க எல்லாரும் வகுப்புக்கு போங்க, செல்வனை நல்ல பாத்துக்குங்க. எதாவது புதுசா செஞ்சான்னா  எனக்கு உடனே சொல்லணும். 

கேண்டினில் சிறிது நேர அமைதிக்கு பிறகு சாமிநாதன் என்னை பார்த்து கேட்டான் 

சாமிநாதன் : அவன் படிக்குற லெட்டர்  நீ தானே எழுதுன ?

நான் : அமைதியாக ஆமா என தழையை ஆட்டினேன்.

சாமிநாதன் : காலைல தமிழ் சார் கேக்கும்போது நீ ஏன்டா இத சொல்லுல?

நான் : அமைதியாகவே இருந்தேன்.

சாமிநாதன் : செல்வா இந்த நிலைமைக்கு காரணமே நீ தானா?

நான் : தலை மட்டும் ஆட்டினேன்.

சாமிநாதன் : முடுஞ்சுது எல்லாம் முடுஞ்சுது. நீ நல்லா மாட்ட போற.

நான் : டேய், இதுலிருந்து என்ன காப்பாத்த ஏதாவது வழி சொல்லுடா. 

சாமிநாதன் :  எல்லாம் பண்ணீட்டு இப்ப சொல்லி என்னபன்றது.

நான் : நா வேணுனா என்ன நடந்துதுன்னு செல்வாகிட்ட சொல்லி மன்னிப்பு கேக்கட்டுமா?

சாமிநாதன் : அப்படி செஞ்ச பிரச்சன இன்னும் பெருசாகும். அவன் முதலே பொண்ணுங்ககிட்ட பேசமாட்டான். அவனுக்கு இப்ப இருக்குறது காதல் நோய். அது இல்லன்னு தெருஞ்சா ரொம்ப மனசு ஒடஞ்சுருவான். இத இப்படி டீல் பண்ண முடியாது.            
         
நான் : சரி நான் என்ன செய்றது?

சாமிநாதன் : கவலைப்படாத.. கொஞ்சம் நான் யோசிக்கணும். தான் சப்பிட்ட முட்ட பப்ஸ்தீர்ந்த நிலையில் அதை பார்த்தவரே எனக்கு ஒரு முட்ட பப்ஸ் வாங்கிட்டுவா என்றான்.

நான் : எல்லாம் என் நிலமடா. இரு வாங்கிட்டு வரேன். 

சாமிநாதன் : அடுத்த முட்ட பப்ஸ் சாப்பிட தொடங்கினான். ஒரு வழி இருக்கு. நாம அவனுக்கு ஒரு பொண்ண பாக்கணும். அவதான் அந்த லெட்டரை எழுதுனதா நம்ப வைக்கணும். அப்பரம் அவன வெறுக்குற மாதிரி சண்டைய மூட்டனும், கடைசில ரெண்டுபேரும் பிருஞ்சுடுவாங்க, இதுல நீ வரவே மாட்ட.

நான் : படாரேன முட்ட பப்ஸை அவன்கிட்ட இருந்து புடுங்கினேன்.. போடா டேய் ... நீயும் உன் முட்டாள்தனமான ஐடியாவும். நான் எப்படி ஒரு பொண்ண நடிக்க வைக்கிறது. இதுக்கு எந்த பொண்ணுதா ஒத்துக்கும்.

சாமிநாதனும் நானும் ஒரே குரலில் : அனித்தா!!!!!!!!!!!

அனித்தா இதுக்கு சம்மதம் சொல்வாளா?...   இல்ல அனித்தா இத அப்படியே தமிழாசிரியர் கிட்ட போட்டு தந்திடுவாளா ?.... 

அடுத்த பகுதி  " ".........

முந்தைய டைரிகள் [1] [2] [3] [4] [5] [6] [7] [8] [9] [10]


---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

 
     "வீரமான ஆண்

தன் சுயத்தையும் புத்தியையும்

பெண்ணிடம் தொலைப்பான் என்று தெரிந்திருந்தால்

நிச்சயம் பெண்ணை படைத்திருக்கமாட்டான் அந்த பிரம்மன்"

கருத்துரையிடுக Disqus

 
Top