இந்த பூஜைக்கு முதலில் வீட்டை நன்றாகக் கழுவி கோலங்கள் இட்டு அழகுப்படுத்த வேண்டும். பின்னர் வீட்டில் உள்ள சரஸ்வதி படம் அல்லது பொம்மையைப் பிரதானமாக எடுத்து மணைமேல் வைத்தல் வேண்டும். படத்தின் முன்னால் கோலம் போட்ட பலகையை வைத்து அதன் மேல் புத்தகங்களை அடுக்கி வைக்க வேண்டும்.
இந்த பூஜையில் புத்தகங்களே இடம்பெற வேண்டும். வீட்டில் உள்ள மாணவர்கள் தங்கள் பாடப் புத்தகங்களையும், பேனா போன்றவற்றையும் திலகமிட்ட பூஜையில் வைக்க வேண்டும். விஜயதசமி அன்று பூஜையில் வைத்து பூஜிக்கும் புத்தகங்களை அன்று முழுவதும் பூஜையிலேயே வைக்க வேண்டும். பின்னர் மறுநாள் எழுந்து குளித்து முடித்து சுத்தமாக வந்து சரஸ்வதி தேவியை வணங்கிட்ட புத்தகங்களை எடுத்து படிக்க வேண்டும்.