தன்னுடன் நண்பரையும் அழைத்து வந்து அதிகபட்சம் எவ்வளவு முடியுமோ? அந்த அளவிற்கு உணவு வகைகளை தீர்த்து கட்டி வந்தனர்.
இதை கண்டு வெறுப்படைந்த ஓட்டல் மேலாளர் இந்த இருவரையும் ஓட்டலுக்குள் நுழைய தடை போட்டு விட்டார். அவர் ஓட்டல் சிப்பந்திகளை அழைத்து, `இந்த 2 பேரும் சேர்ந்து என்னை தொழிலை விட்டே துரத்தி விடுவார்கள். 2 பன்றிகளும் வந்தால் உள்ளே விடாதீர்கள்’ என்று கடுமையான உத்தரவு பிறப்பித்து விட்டார்.
இந்த தகவலை படிக்கும் போது என் கல்லூரி காலங்கள் தான் நினைவில் வருகிறது, மேல நடந்தது போல எங்கள் கல்லூரி மதிய உணவிற்கு என் நண்பர்கள் அனைவரும் கல்லூரி அருகில் இருக்கும் ஒரு ஓட்டலில் தான் சபுடுவோம், அங்கு தான் 45ரூபாய்க்கு அளவில்லா சாப்பாடுனு கடை முன்பு அறிவிப்பு இருந்தது, என் நண்பர்கள் 8 பேர் அங்க சென்று தான் மதிய உணவு முடிப்போம், முதலில் மீன் குழம்பு, சிக்கன் குழம்பு, புலி குழம்பு, சாம்பார், ரசம், மீண்டும் மீன் குழம்பு முதல் ரசம் பிறகு தயிரில் முடித்து விடுவோம் , ஒரு வாரம் தான் அந்த ஓட்டலில்அன்லிமிடெட் மீல்ஸ் இருந்தது, அடுத்த வாரம் நாங்கள் செலும்போது "Limited Meals Only" சொல்லிட்டாங்க,