"நண்பர்களுக்கும்
சாக்லேட் கொடுக்கலாம் என்பதற்காக பள்ளி நாட்களில் பிறந்தநாள் வர வேண்டிய
குழந்தைகளை, அப்பருவத்திலேயே விட்டிருக்கலாம் கடவுள்!
------------------------------------------------------------------------------------------------------------------------
இதற்கு முந்தைய பதிவு "டிங்கு டைரி - 13 நான் விரித்த வலை."ஸ்கூல் முடிந்ததும் கிருத்திகாவை பின்தொடர்ந்தேன். யாரும் இல்லாத தெருவில் அவளை வழிமறைத்து நிறுத்தினேன்.
நான் : உன்கிட்ட எனக்கு ஒரு ஹெல்ப் வேணும்.
கிருத்திகா பயம் கலந்த ஆச்சரியத்துடன் என்னை பார்க்க..
நான் : நம்ம கிளாஸ் செல்வா கிட்ட நான் ஒரு பொய் சொல்லிட்டேன், நான் விளையாட்டுக்கு ஒரு லவ் லெட்டர அவன் புக்ல வச்சேன். ஆனா அத அவன் உண்மைன்னு நம்புறான். கொஞ்ச நாளா அவன் போக்கு சுத்தமா மாறிடுச்சு. அவன்கிட்ட இந்த உண்மைய சொல்ல எனக்கு பயமா இருக்கு. சாமிநாதன் தான் எனக்கு இந்த ஐடியாவ சொன்னான். கொஞ்ச நாளைக்கு யாரவது ஒரு பொண்ண நல்ல பிரெண்டா இருந்தா இதுல இருந்து மாறிடுவான்னு சொன்னான். இது தான் எனக்கும் சரின்னு தோனுச்சு இன்னக்கு நீ கிளாஸ்ல அவன்கூட நல்லா பேசிட்டு இருந்த, அதுனால எனக்கு என்ன தோனுதுனா, அந்த பொண்ணே நீயா இருந்தா தான் சரியா இருக்கும். எனக்காக இந்த உதவிய செய்வியா ப்ல்லீஸ் ......
கிருத்திகா : போடா லூசு.. என நகர்ந்தால்.
நான் : மீண்டும் அவளை நிறுத்தி. எனக்கு தெரியும் இது நல்ல ஐடியா இல்லைன்னு. ஆனா எனக்கு வேற வழி தெரியல. நான் அவன்கிட்ட உண்மைய சொன்னா அது இன்னும் அவன பாதிக்கும். பிளீஸ் கொஞ்சம் யோசி
கிருத்திகா அப்பா : இங்க என்ன பண்ணிட்டு இருக்குற? யாரி நீ? உனக்கு இங்க என்ன டா வேல ?
கிருத்திகா : அப்பா!!!!!
நான் : ஐயோ கிருத்தி அப்பாவா?.... நா கிருத்திகா கிளாஸ் தான் அங்கிள்.
கிருத்திகா : இவன் என் கிளாஸ்மெட் தான் பா.
கிருத்திகா அப்பா : அது என்ன உன் கைலை இருக்கு?
நான் : அது சாக்லேட் அங்கிள்...
கிருத்திகா அப்பா : முகம் சுளித்து ஒரு சந்தேகமாக "யாருக்கு இது ?"
நான் : அஹா இவளுக்குன்னு சொன்னா கண்டிப்பா நமக்கு செருப்படிதான்... "நான் சாப்பிட தான் அங்கிள்"
கிருத்திகா அப்பா : சாக்லெட்டை படக்கென பிடுங்கினார் "இதெல்லாம் சாப்டா பல்லு சொத்தை ஆயிடும்.... இங்க எல்லாம் இப்படி வரகூடாது.... ஓடிப்போ....
நான் : அஹா இவளுக்குன்னு சொன்னா கண்டிப்பா நமக்கு செருப்படிதான்... "நான் சாப்பிட தான் அங்கிள்"
கிருத்திகா அப்பா : சாக்லெட்டை படக்கென பிடுங்கினார் "இதெல்லாம் சாப்டா பல்லு சொத்தை ஆயிடும்.... இங்க எல்லாம் இப்படி வரகூடாது.... ஓடிப்போ....
நான் : அடபாவி வேணுனா தரபோறேன்.... உன் மகள கரைக்ட் பன்லானா இப்படியாயிருச்சே... பயந்து என் சைக்கிளை வேகமாக நகர்த்தினேன்.
அடுத்த நாள் கேண்டினில்.......
நான் : கிருத்திகா முடியாதுன்னு சொல்லிட்டா டா.
சாமிநாதன் : அடுத்தது நீ என்ன பண்ணலாம்னு இருக்குற ?
நான் : பேசாம செல்வாகிட்ட உண்மைய சொல்ல வேண்டியதுதான். அவன் என்ன அடுச்சா நீ அங்க வந்து என்ன அவன்கிட்ட இருந்து விலக்கி காப்பத்துவல?
சாமிநாதன் : அவன் எதுவும் பண்ணலைனா ?
நான் : நீ என்ன அடிக்கிற மாதிரி என்ன அங்க இருந்து காப்பாத்து அது போதும்.
செல்வா : பிரபு.... நீ இங்க தான் இருக்கிறியா ?
நான் : வா செல்வா உக்கார்.... முதல்ல இந்த எக் பப்ஸ்ச சாப்பிடு. இது உனக்கு தான்.
சாமிநாதன் : செல்வா... பிரபு உன்கிட்ட எதோ ஒன்னு சொல்லணுமாம்
செல்வா : சரி என்னனு சொல்லு. ..
நான் : நான் சொல்லுறத கொஞ்சம் பொறுமையா கேளு?
செல்வா : ம்ம். என பப்ஸை விழுங்கிக் கொண்டிருந்தான்
நான் : செல்வா, உனக்கு கொஞ்ச நாள் முனாடி ஒரு லவ் லெட்டர் கேடச்சுதுல?
சாப்பிடுவதை நிறுத்திவிட்டு ரொம்ப ஸ்லோ மோசன்ல செல்வா தன் தழையை என்னை நோக்கி உயர்த்தினான்.
செல்வா : கொஞ்சம் தயங்கியவாறு, அது எப்படி உனக்கு தெரியும்?
நான் : நீ எப்பவுமே அத உன் கைல வச்சு பாத்துடே இருப்ப. நா நெறையா தடவ அத பாத்திருக்கேன்.
செல்வா : இது ரகசியம் எல்லாம் இல்ல. உனக்கு கூட இது மாதிரி நெறையா லெட்டர் கெடச்சிருக்கும்.
நான் : செல்வா. என்ன அச்சுனா.. அந்த லவ் லெட்டர் என்னா..
செல்வாவுக்கு பின்னாடி இருந்த கண்ணாடி ஜன்னலை யாரோ தட்ட. செல்வாவும் திரும்ப நானும் திரும்பி பார்த்தேன்.
நான் : மனதிற்குள் "ஆஹா இவளா .... இப்ப இவ இங்க எதுக்கு வந்தா ????!!!!!!!"
அங்க நிப்பது அனித்தாவா இல்ல அம்பிகாவா ?? சைன்ஸ் மிஸ் கோவப்பட என்ன காரணம் ? அடுத்த பகுதி "டிங்கு டைரி - 15 இது நட்பா? இல்ல காதலா?".........
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
"பள்ளி பருவம் என்றதும் நினைவில் வருவது
படித்த படிப்பு அல்ல.
பாசம் காட்டிய நட்புக்கள்.
படிப்பை மூளையில் வைத்தோம்.
நட்பை இதயத்தில் வைத்தோம்."
படித்த படிப்பு அல்ல.
பாசம் காட்டிய நட்புக்கள்.
படிப்பை மூளையில் வைத்தோம்.
நட்பை இதயத்தில் வைத்தோம்."
கருத்துரையிடுக Facebook Disqus