0

Related image
"அம்மா : பாத்து மெதுவா வா
அப்பா : வேகமா வந்துதொலடா
லவ்வர் : இப்ப வரியா இல்ல நா போகட்டுமா?
நண்பன் : அங்கயே இரு மச்சி அஞ்சே நிமிசம் வற்றேன்!!!"
----------------------------------------------------------------------------------------------------------------------

இதற்கு முந்தைய பதிவு "டிங்கு டைரி - 14 கிருத்தி + அப்பா = சாக்லெட்?"
 
திரும்பி பார்த்ததும் செல்வாவுக்கு மகிழ்சி....

எனக்கோ உள்ளுக்குள் பதற ஆரம்பித்தது என்ன சொல்லி என்ன சிக்க விடுவால்ன்னு தெரியலையே...
 
கிருத்திகா செல்வாவை கூப்பிட்டால். செல்வா சைகையில் என்னையா என கேக்க கிருத்திகா ஆமாம் என தழையை ஆட்டினால். சாப்பிட்டதை அப்படியே வைத்துவிட்டு ஓடினான்.

இருவரும் ரொம்ப நேரம் பெசிக்கொண்டிருந்தனர்.

அடுத்தது வகுப்பில் ஓவிய வகுப்பு  செல்வா பக்கத்தில் கிருத்திகா.. அவனுக்கு ஓவியம் வரைய உதவிக் கொண்டிருந்தாள்.

என் பக்கத்தில் இருந்த சாமிநாதன் 

சாமிநாதன் : டேய் அங்க என்னடா நடக்குது.. என சொல்ல நான் செல்வா செய்வதை பாத்தேன்.

நான் : உண்மையாலுமே கிருத்திகாவுக்கு செல்வாவை பிடிச்சிருச்சுனு நினைகிறேன்.

அவர்கள் மகிழ்சியாக இருப்பதை பார்த்த எனக்கு கொஞ்சம் பொறாமை கலந்த கோபம் வந்தது இருந்தும் நான் செய்த தப்புக்கு இதுதான் நல்ல முடிவு என நினைத்தேன். அவர்கள் இருவரையும் பார்க்கும்போது எனக்குள் பப்புவின் நினைவுகள் ஓடின. எப்போ முலாண்டு தேர்வு விடுமுறை வருமென நாட்களை எண்ணிக்கொண்டிருந்தேன்.

இன்ட்றவள் முடிந்து அடுத்தது கணக்கு வகுப்பு.

சைன்ஸ் மிஸ் : இன்னைக்கு உங்களுக்கு கணக்கு வகுப்புக்கு பதிலா சைன்ஸ் வகுப்பு. எல்லாரும் உங்க டெஸ்ட் பேப்பர எடுங்க.

வெளியே நானும் சாமிநாதனும் அனித்தாவிடம் செல்வா கிருத்திகா நட்பை பத்தி பேசிக்கொண்டு வரும்போது தமிழாசிரியர் எங்களை பார்த்து இப்போ உங்களுக்கு சைன்ஸ் வகுப்பு இங்க என்ன பண்ணிட்டு இருக்கிறீங்கனு சொல்ல நாங்கள் மூவரும் வகுப்புக்கு ஓடினோம்.

சைன்ஸ் மிஸ் : கோபால்.. என்ன இன்னிக்கு நெறையா பேற கானம் என்ன ஆச்சு.

கோபால் : வகுப்பை ஒரு சுத்து பார்த்துவிட்டு. மிஸ், ஆண்டுவிழா பாட்டு ரிகல்சருக்கு கிருத்திகா போய்விட்டாள். 

சைன்ஸ் மிஸ் : மத்தவங்க அத வேடிக்க பாக்க போய்டாங்களா ?.

கோபால் : மத்தவங்க எங்கனு எனக்கு தெரியல மிஸ்.

சைன்ஸ் மிஸ் :யார் யார் இல்லையோ அவுங்க பேர ஒரு பேப்பர்ல எழுதிக்குடு.

எக்ஸ்க்யுஸ்மி மிஸ் என கதவை தள்ளிவிட்டு மூவரும் உள்ளே வந்தோம்.

சைன்ஸ் மிஸ் : மூணுபேரும் எங்க போயிருந்தீங்க?

 
சாமிநாதன் : தன் தலையில் கைவைதவாறே "எனக்கு வயித்து வழி மிஸ்".

சைன்ஸ் மிஸ் : உன் வயிறு எப்போ தலைக்கு போச்சு!!!! நீ எங்க போன பிரபு?  

நான் : பாத்ரூம் தண்ணி வரல அதுனால எடுத்துட்டு போனேன் மிஸ்.

சைன்ஸ் மிஸ் : கிருத்திகா, நீ என்ன சொல்ல போற?

கிருத்திகா : இல்ல மிஸ், நா பாட்டு ரிகல்சருக்கு போனேன்.

சைன்ஸ் மிஸ் : போய் உங்க இடத்துல உக்காருங்க. பிரபு எந்திரி. உன் ஹோம்வொர்க இங்க கொண்டுவா.

நான் : ஹோம்வொர்க் இன்னும் முடிக்கல மிஸ்.

சைன்ஸ் மிஸ் : அப்படியே நில்லு. கிருத்திகா உன் ஹோம்வொர்க குடு?

கிருத்திகா : இன்னிக்கு சைன்ஸ் கிளாஸ் இருக்குறது தெரியாது மிஸ். அது நால நான் கொண்டு வரல மிஸ்.

சைன்ஸ் மிஸ் : எல்லாத்துக்கும் ஒரு காரணமா, என்னால இந்த கிளாஸ்ல இருக்க முடியல.. என வேகமாக கிளாசை விட்டு வெளியே கிளம்பினார்.

வாடிய மாணவர்களை குசிபடுத்திய ஆசிரியர் அப்படிஎன்ன பண்ணுனாரு?

அடுத்த பகுதி  " டிங்கு டைரி - 16 வாடிய மனதை ஆடவைத்தான் தமிழன் ".........  
முந்தைய டைரிகள் [1] [2] [3] [4] [5] [6] [7] [8] [9] [10] [11] [12] [13]


---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------




Image result for school class room tamil memes 
"எத்தனை நண்பரகள் இருந்தும் நெருங்கிய நண்பனின் தோள்களின்மீது கைகளை போட்டுகொண்டு கதைகள்பல பேசிச்சென்ற அந்த அழகான பள்ளிநாட்கள் மறக்கமுடியாதவை"

கருத்துரையிடுக Disqus

 
Top