0
Image result for school rain memes 
" மழை பல சமயங்களில்
பள்ளி மாணவர்களுக்கு
விடுமுறை தந்தும்
இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு
வெற்றியைத் தந்தும்
சந்தோஷப்படுத்திவிடுகிறது "

---------------------------------------------------------------------------------------------------------------------

இதற்கு முந்தைய பதிவு "டிங்கு டைரி - 15 இது நட்பா? இல்ல காதலா?"

அனிதா : நம்ம வகுப்புல எப்படித்தான் இருக்குறதுன்னு தெரியல. பரிச்சைல 100/100 வாங்குனாலும் படிபடினு தான் சொல்லுறாங்க. இந்த கிளாஸ் விட்டு எங்கையும் விடமாடிங்குறாங்க..... என்ன வாழ்க்கையோ...

நான் : செல்வா, ஏண்டா சோகமா இருக்குற, நீ மட்டும் தான் ஹோம்வொர்க் செய்யலனு நினைக்காத, நான் அப்பறம் சாமிநாதன் அங்க பாரு அவன எந்த கவலையும் இல்லாம வேடிக்கை பாத்துட்டு இருக்குறான்.  

ஜன்னலோரம் பார்த்த சாமிநாதன் 

சாமிநாதன் : டேய் இங்க பாருங்கடா இவுங்க எந்த கிளாஸ் பொண்ணுக டா. செமையா இருக்குறாங்க..

எல்லா பசங்களும் ஜன்னல் பக்கம் வந்து பார்க்க செல்வா மட்டும் தன் சீட்டில் சோகமாக அமர்ந்திருந்தான். தமிழாசிரியர் உள்ளே வர எல்லோரும் அவரவர் இருக்கைக்கு ஓடினோம்.

தமிழாசிரியர் : ம்ம் எல்லாரும் ரொம்ப கஷ்டப்பட்டு படிக்கிறீங்க, எப்படியோ என் பேர காப்பாத்திடுவீங்கனு நினைக்கிறேன்.. 

மெதுவாக நடந்தவாறு என் பக்கத்தில் வந்தார். நான் என் நோட்டை பார்த்தவாறு செல்வாவை பற்றி யோசித்துக் கொண்டிருந்தேன். ஆசிரியர் என் பக்கத்தில் நின்று என் நோட்டையே அவர் பார்த்தார். இந்த பக்கம் தான் எதுவும் இல்லைல அதையே எதுக்கு பாத்துட்டு இருக்குற என முந்தைய பக்கத்தை திருப்பினார். 

மெதுவாக சென்று ஜன்னலோரம் பார்த்தவாறு ம்ம் நல்லா மலை தூறுது... 

என் பக்கம் திரும்பி இப்ப மலைல விளையாடுனா எப்படி இருக்கும்?

முதல் பெஞ்சில் இருந்த அனித்த “ஐயா நாங்களே கடுப்புல இருக்குறோம் நீங்க வேற கிண்டல் பண்ணாதீங்க”

தமிழாசிரியர்: எனக்கு தெரியும் இப்போ உங்கனால நல்ல படிக்க முடியாதுன்னு. யாரெல்லாம் இந்த மலைல என்கூட சேந்து விளையாட தயார்.

சாமிநாதன் : உண்மையாவா ஐயா 

தமிழாசிரியர் : ம்ம் உண்மையாதான் சொல்றேன் என தலையாட்ட வகுப்பு முழுவதும் வெளியே ஓடினோம்.  

வர மறுத்த செல்வாவின் கையை நான் பிடித்து இழுத்தவாறு மைதானம் அடைந்தோம்.   

சாமிநாதன் :  நீங்க தான் ரொம்ப நல்ல ஐயா, 

நாங்கள் மலையில் பயங்கர ஆட்டம் போட்டோம்.

பக்கத்தில் சைன்ஸ் மிஸ் பத்தாம் வகுப்பில் "என்ன வெளியில் வேடிக்கை நேட்ட பாத்து படிங்க" என அதட்டிவிட்டு ஜன்னலோரம் வந்தார் எங்களை பார்த்ததும் மேலும் ஆத்திரம் வந்தது.

எங்களை தடுக்க அவர் வெளியே வர அனைத்து வகுப்பில் இருந்தும் வெளியே வந்தனர். பத்தாம் வகுப்பு மாணவர்களும் வெளியே வர கோபத்தின் உச்சியில் இருந்தார் சைன்ஸ் மிஸ்.

நாங்கள் பள்ளியில் படிக்கும் கவலைகளை மறந்தோம். சைன்ஸ் மிஸ் மிரட்டலை மறந்தோம்,

என் கவலைகளை எல்லாம் கரைத்த அந்த மழை எனக்குள் பழைய நினைவுகள் ஓட, கிருத்திகாவை பார்க்க பப்புவின் ஞாபகம் வந்தது.

அடுத்த பகுதி  " டிங்கு டைரி - 17 சண்டையும், சமாதானமும் ".........  


முந்தைய டைரிகள் [1] [2] [3] [4] [5] [6] [7] [8] [9] [10] [11] [12] [13] [14]


---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------


Related image 
"உனக்கான
தேர்வுகள் அனைத்தும்
உன் வசமென சிறப்பித்து
புகழ் பாடிடவே
வெற்றிகளை குவித்திடு
சந்தோஷத்தில் விளையாடிடு"

கருத்துரையிடுக Disqus

 
Top