0
"என்னை தேடுகின்ற உன் பார்வைக்காகவாவது
நான் அடிக்கடி தொலைந்து போக வேண்டும்.
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------
 
டிங்கு டைரிக்கு ஆதரவு கொடுக்கும் நண்பர்கள் மற்றும் வாசகர்கள்  அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள் பல.

இன்றைய நாள் எனக்கு மிகவும் மகிழ்சி தரும் நாளாகும். வரும் காலங்களில் என்னோடு கைகோர்க்கும் என் இணையவளோடு சேர்ந்து கொண்டாடும் என் முதல் பிறந்தநாள். இந்த பகுதி நான் அக்டோபர் 1 2017 எழுதும்போது அவளது புகைப்படம் முதல் முதல் பார்த்ததும் என் மனதிற்குள் ஒரு உராய்வு ஏற்பட்டது. இந்த டிங்கு தேடும் பப்பு இவள் தானோ என்று..


ஒரு வருடம் விடுதியில் இருந்து பத்தாவது முலாண்டு விடுமுறையில்...
அப்பா : உனக்குதான் லீவு விட்டாச்சுல்ல… அத்தை வீட்டுக்கு எப்போ கொண்டு விடட்டும்?” என்று கேட்டார்.

நான் : டீவியை நோக்கி முகத்தை வைத்துக் கொண்டிருந்தேன், கோபமாய் அப்பாவைப் பார்த்தேன். “நான் தான் சொன்னேன்ல்ல. அவங்க வீட்டுக்கு நான் இனிமே போக மாட்டேன்” என்று கத்தினேன்.

அப்பா : என்னை பார்த்தார். “அப்படியெல்லாம் சொல்லாதே டா… ரஞ்சித் கிட்ட இன்னும் எவ்வளவு நாள் தான் சண்டை போடுவ?” என்று கேட்டார்.

நான் : “என்னால போக முடியாதுன்னா முடியாது” என்று சத்தமாக சொல்லி விட்டு, படுக்கையறைக்குள் சென்று கதவைப் பூட்டிக் கொண்டேன்.
அப்பாவும், அம்மாவும் என்னை கவலையோடு பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

ஒன்பதாம் வகுப்பு முலாண்டு விடுமுறையில் நடந்த ஒரு சம்பவம் நானும், ரஞ்சித்தும் மாமா-அத்தை பையன்கள் மட்டுமல்ல, ஒரே வயதுடைய நண்பர்களும் கூட. அதனால வீட்டு விஷேசங்களிலும், விடுமுறை தினங்களிலும் ஒன்னாதான் இருப்போம். இருவரது வீடுகளும் அறுவது மைல் தொலைவில் இருந்தன. அதனால், இருவரும் ஒருவர் வீட்டுக்கு மற்றவர் விடுமுறைகளில் தான் சென்று தங்குவோம். நான் அங்கு போக மற்றொரு காரணமும் இருந்தது அதுதான் ரஞ்சித் பக்கத்துவீட்டில் இருந்த பப்பு. அவளை கடைசியாக எட்டாம் வகுப்பு முலாண்டு விடுமுறையில் தான் பார்த்தேன். நல்ல தோழியாக இருந்தால். அவள் செய்யும் ஒவ்வொன்றும் என்னை அச்சரியப்படுத்தும்.   

அப்படிதான் ஒன்பதாம் வகுப்பு முலாண்டு தேர்வு விடுமுறைக்கு ரஞ்சித்தின்  வீட்டுக்கு நான் சென்றிருந்தேன். பக்கத்தில் இருந்த பப்பு வீடு பூட்டியே இருந்தது நான் ரஞ்சித்திடம் விசாரிக்க.
ரஞ்சித் : அது ஒரு பெரிய கதை அந்த புள்ள யாரையோ லவ் பன்னுறதா அவுங்க வீட்டுல சொல்ல பெரிய சண்டையே வந்திருச்சு. அதனால அவுங்க வீட்ட காளிபண்னிட்டு  வேற ஊருக்கு போய்டாங்க. அந்த லூசையும் எவனோ லவ் பண்ணியிருக்கு பாரே.... என்றதும் என் மனதிற்குள் கோவம் தான் அதிகரித்தது.
நான் : அப்படி எல்லாம் ஒரு பொண்ண தப்பா பேசாதடா.
ரஞ்சித் : டேய்.. நீ ஏன் அவளுக்கு சப்போட் பண்ற.
நான் : நான் பொதுவாத்தான் சொனேன்.
ரஞ்சித் : போய் சொல்லாத நீ எப்ப லீவுக்கு வந்தாலும் என்கூட கிரிகெட் விளையாட வராம எங்க சுத்தீட்டு இருந்ததேன்னு இப்பதான் தெரியுது.
நான் : சரி இத இத்தோட விடுறையா..
ரஞ்சித் : ஏய் ஏய் அப்போ அது நீதானா..
நான் : வேண்டாம்டா சும்மா என்ன கோவபடுத்தாத.
ரஞ்சித் : சரி வா கிரிகெட் விளையாட போலாம்.

Related image

அன்றைக்கு இருவரும் விளையாடும்போது, ரஞ்சித்தின் நண்பர்களும் வந்திருந்தார்கள். எல்லோரும் சேர்ந்து கிரிக்கெட் விளையாடினோம். இரண்டு பேரும் எதிரெதிர் அணிகளில் இருந்தோம்.

முதலில் என் அணி பேட்டிங் செய்தது. எனக்கு நன்றாக ஆட தெரியும் என்பதால், கடைசியாக பேட்டிங் செய்ய தீர்மானித்தேன். எனது முறை வந்தது. எதிரணி எனக்கு பந்து போட, பந்தை தூக்கி அடித்து விட்டு ரன் ஓட ஆரம்பித்தேன். ஒரு ரன்னுடன் நிறுத்தியிருக்கலாம். ஆனால், மீண்டும் இரண்டாது ரன்னுக்காக ஓடி கோட்டைத் தொடும்போது பந்து ஸ்டம்பைத் தொட்டுவிட்டது. ஒரு ரன் கூட எடுக்காத நான், ரன் அவுட்டானேன்.

நான் எந்த ரன்னையும் எடுக்கவில்லை என்பதை ஏற்க எனக்கு மனமில்லை. “இந்த ஒருவாட்டி டா” என்று கெஞ்சினேன். “ஹே… ஹே… அதெல்லாம் முடியாது, நீ அவல நெனச்சுட்டு விளையாடுவ” என்றான் ரஞ்சித். என் கோவத்தை கட்டுபடுத்த முடியவில்லை.. அவனது அணியினரும் அதை ஆமோதித்தனர். நான் பேட்டை வேகமாகப் பிடுங்கினேன். அதில் பேட் ரஞ்சித்தின் வயிற்றில் வேகமாக இடித்தது. நடந்ததை உணர்வதற்குள், ரஞ்சித் என்னை தாக்கினான். இருவருக்குள்ளும் சண்டை மூண்டது. நண்பர்கள்தான் விலக்கி விட்டனர்.

ரஞ்சித்தின் நண்பர்களுக்கு முன்னால் நான் அடி வாங்கியதை என்னால் ஜீரணிக்கவே முடியவில்லை. உடனடியாக அத்தை வீட்டுக்குச் சென்று, எனது உடைகளை எடுத்துக் கொண்டு என் வீட்டுக்கு சென்றுவிட்டேன். அத்தை சமாதானப்படுத்தியும், ரஞ்சித் மன்னிப்பு கேட்டும் கூட எனது கோபம் தீரவில்லை.
Image result for school cricket tamil meme 

அப்பாவிடம் அடம்பிடித்து பத்தாம் வகுப்பு விடுதியில் சேர்ந்தேன் அது மட்டுமல்ல. அடுத்த ஒரு வருடம் வீட்டு விசேஷங்களிலும் ரஞ்சித்தோடு பேசவில்லை. அரையாண்டு விடுமுறைக்கும் அவன் வீட்டுக்குச் செல்லவில்லை. ரஞ்சித் எங்க வீட்டுக்கு வந்து மன்னிப்பு கேட்டபோது கூட மனம் இரங்காமல் இருந்தேன்.

பெரியவர்களும் சண்டை தானாக தீரட்டும் என்று விட்டு விட்டனர்.

பத்தாம் வகுப்பு கோடை விடுமுறையில் பெரியப்பாவின் ஊருக்குப் போயிருந்தேன். பெரியப்பவுக்கு குழந்தை இல்லாததால், என் மீது அளவு கடந்த பாசம். எனக்கும் அவரைப் பிடிக்கும் என்றாலும், அவரது வீட்டில் விளையாட யாரும் இல்லாததால், அங்கு நான் அதிகமாகச் சென்றதில்லை. ஆனால், இந்த முறை “பெரியப்பா வீட்டுலயாவது போய் இரு” என்று அப்பா கொண்டு வந்து விட்டு விட்டார்.

பெரியபாவுக்கு  தொழில் விவசாயம் என்பதால், அவரது வீட்டில் மாடுகள் இருக்கும். தவிர, அவரது வீட்டைச் சுற்றி நாய்கள் அதிகம். இரவு நேரங்களில் பெரியப்பா அல்லது பெரியம்மா துணையில்லாமல் நான் வெளியே போக மாட்டேன்.

ஒருநாள் மாடுகள் வயலுக்கு மேய சென்றிருந்தபோது, ஒரு மாட்டின் காலடியில் நாய்க்குட்டி பட்டுவிட்டது. அவ்வளவுதான். நாய்கள் மாடுகளைச் சுற்றிக் கொண்டு குறைக்கத் தொடங்கின. நாய்க்குட்டிக்கு அம்மா போல இருந்த நாய், தனது குட்டியின் மேல் கால் வைத்த மாட்டின் மீது பாய்ந்தது. நல்ல வேளையாக அருகில் இருந்த மக்கள், மாடுகளையும் நாய்களையும் அடித்து துரத்தினர்.

அதே நாள் சாயுங்காலம், மாடுகள் திரும்பி வரும்போது, அங்கிருந்த பள்ளத்தில் ஒரு மாடு விழுந்துவிட்டது. உடனே, அதைப் பார்த்துக் கொண்டிருந்த நாய்கள், பலமாகக் குரைக்க ஆரம்பித்தன. நாய்களின் குரல் கேட்டு, ஓடி வந்த மக்கள் மாட்டை மேலே தூக்கி வந்தார்கள்.

அன்று இரவு சாப்பாட்டை முடித்ததும் பெரியப்பாவிடம் நான் பேசிக் கொண்டிருந்தேன்.
நான் : “பெரியப்பா… இந்த விலங்குகளை புரிஞ்சிக்கவே முடியல. திடீர்னு சண்டை போடுது. அடுத்த நிமிஷம் சேர்ந்துக்குது. புரியவே மாட்டேங்குது?” என்று கேட்டேன்.

பெரியப்பா : சிரித்தார். “அதுதான் கண்ணா விலங்குகளோட படைப்பு. தங்களுக்கு ஆபத்து என்று உணர்ந்தால்தான் சண்டையிடும். ஆறறிவு படைச்ச மனுஷன்தான் எல்லாத்துக்கும் கணக்கு வச்சு சண்டை போடுறான்” என்றார். எனக்கு சுருக்கென்றது.

நான் : “பெரியப்பா உன் செல்போனை தர்றியா?” என்று கேட்டு வாங்கினேன்.

மறுமுனையில் அத்தையின் குரல் கேட்டது. போனை ரஞ்சித்திடம் தர சொன்னேன்.

ரஞ்சித்தின் குரல் கேட்டதும், “டேய்… இப்போ பெரியப்பா வீட்டுல இருக்கேன். இன்னும் ரெண்டு நாள் கழிச்சு வர்றேன்” என்றேன் உற்சாகமாக.

ரஞ்சித் : “அப்போ… திரும்ப கிரிக்கெட் விளையாடலாமா?” என்றான்.

பதினோராம் வகுப்பு.... புதிய பள்ளி.... புதிய நண்பர்களுடன்... ஒரு புதிய டைரி 

 அடுத்த பகுதி  " டிங்கு டைரி - 18  புதிய பள்ளியும் புதிய நட்பும்".........  

முந்தைய டைரிகள் [1] [2] [3] [4] [5] [6] [7] [8] [9] [10] [11] [12] [13] [14] [15]


---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

Image result for school cricket tamil meme 

"முயற்சி செய் முயற்சி செய்.
வாழ்க்கையில்
முன்னேற முயற்சி செய்.
போட்டி போட்டு முன்னேறி வா.
வாழ்க்கைப்
போராட்டத்திலே வென்று வா."

கருத்துரையிடுக Disqus

 
Top