"எல்லோருக்குள்ளும் ஒரு காதல் நிச்சயம் இருக்கத்தான் செய்யும்....
சிலரது பள்ளி பாட புத்தக்கத்தில் மயிலிறகாக......"
------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
இதற்கு முந்தைய பதிவு "டிங்கு டைரி - 18 புதிய பள்ளியும் புதிய நட்பும்"
ஆனால் குமாரின் ஆராய்ச்சி பொய்யாகத்தான் போனது. அவள் எங்கள் வகுப்பிற்குத்தான் வந்தாள். நான் குமார பார்த்துச் சிரிக்க, அவன் அவளை முறைத்தான். வழக்கம் போல எங்கள் ஆசிரியை அவளை வகுப்பிற்கு அறிமுகப் படுத்திக்கொள்ள சொன்னார். அப்போதுதான் அவள் பெயர் திவ்யா (அ) திவ்யா ப்ரியதர்ஷினி என்றும், நான் தங்கியிருந்த தெருவில் இருந்து மூன்று தெரு தள்ளித்தான் அவள் வீடு என்றும் தெரிந்தது. அவளது கனவும் BE தானு தெருஞ்சதும், ஏனோ என் மனம் மகிழ்ச்சிக் கடலில் குதித்தது.
அறிமுகத்துக்குப் பின், என் ஆசிரியை, நாளை முதல் யூனிபார்மில் வரவும் என்று சொன்னங்க, எனக்கோ ‘இவளுக்கு மட்டும் இந்த உடையையே சீருடையாக இருந்தால் என்ன?’ என்று தோன்றியது. ஆனால், ‘அழகு உடையில் இல்லை, உடுத்துபவரிடம் தானென்று அடுத்த நாள் தான் என் மண்டையில் உறைத்தது. இவள் யூனிபார்ம் போட்டவுடன்தான் அந்த உடையும் இவ்வளவு அழகாக இருக்கிறது என்று தெரிந்தது.
அவள் எப்படியாவது என்கூட பேச மாட்டாலா என மனம் ஏங்கித் தவித்தது. எனக்கு ஏற்கனவே அறிமுகமான சில பொண்ணுககிட்ட, இன்ட்ரோ கொடுக்கச் சொல்லி கேட்டப்ப எல்லாம் முடியாதென்று சொல்லிட்டாங்க, எனக்கு என்ன செய்யறதுனே தெரியலை.
எனக்கு ரொம்ப பிடித்த பாடம் கணக்கு. முதல் தேர்வில் வகுப்பிலே முதல் மதிப்பெண் பெற்று இருந்தேன். அந்த நாள் என் வாழ்வில் மறக்க முடியாத நாள். அவளுக்கு சில கணக்குகள் புரியவில்லை என்றும், எனக்கு சொல்லிதர முடியுமா என்று என்னிடம் கேட்க, நானோ அவள் முகத்தையே பார்த்துக்கொண்டிருந்தேன். கண் முன்னே அவள் நிழலாடிய போதுதான் சுயநினைவுக்கு வந்தேன், அவள்தான் என் முகம் முன்னே சிரித்தபடி கையை ஆட்டிக் கொண்டிருப்பதை பார்த்த நான் கொஞ்சம் சங்கடத்துடன், “கண்டிப்பா! கண்டிப்பா சொல்லித்தரேன்!’ என்றேன்.
என்னதான் நாங்கள் பேச ஆரம்பித்து இருந்தாலும், பேச்சு படிப்பை தவிர வேறு எங்கும் போகுல. நமக்குத்தான் நண்பர்கள் இருக்கிறார்களே என்று அவர்கள் உதவிக் கேட்க, அவர்களோ பல படங்களின் கதைகளை அவர்கள் சொந்த சிந்தனை போல சொல்லீட்டு இருந்தார்கள். அவர்களிடம், ‘மாப்பு, நானும் அந்த படம் எல்லாம் பாத்திருக்கேண்டா, உருப்பிடியா ஏதாவது இருந்தா யோசித்து சொல்லுங்கடா’ எனச் சொல்லிவிட்டு வீட்டுக்குப் போனேன்.
அடுத்த நாள் காலையில், வழக்கம் போல என் கியர் சைக்கிளில் பள்ளியை நெருங்கிக்கொண்டிருந்தேன். சைக்கிள் ஸ்டாண்டை நெருங்கிய போதுதான் தெரிந்தது, அவள், அங்கே தன் தோழிகளுடன் நின்று கொண்டிருந்தாள் என்று. நண்பர்கள் சொன்ன ஐடியா எல்லாம் ஞாபகம் வந்து தொலைக்க, என் மனதுக்குள் ஒரு பாடல் வரிகல் ஓடின...
அன்பே உன்னால் மனம் freezing
அடடா காதல் என்றும் amazing
Excuse me let me tell you something...........
சைக்கிளை வேகமாக அழுத்திக் கொண்டு போய், ஸ்கிட் அடித்து நிறுத்தினேன்.
அடுத்த பகுதி "டிங்கு டைரி - 20 காதலில் சொதப்புவது இப்படித்தான்".........
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
"மறக்க முடியா மகழ்ச்சி..
பங்கம் இல்லா தோழமை..
பசமான தோழிகள்..
கள்ளம் இல்லா காதல்..
ஒருங்கே கிடைத்த தருணம்..
பள்ளி பருவம்.."
கருத்துரையிடுக Facebook Disqus