0
Related image

"காதலிக்கும் வரை அவஸ்தை எல்லாம் ஆனந்தம் ...

காதலித்த பின் ஆனந்தம் எல்லாம் அவஸ்தையானது ..!!!"
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------
இதற்கு முந்தைய பதிவு "டிங்கு டைரி - 19 நிழலாடிய சடுகுடு திவ்யா"

சைக்கிளை வேகமாக அழுத்திக்கொண்டு போய், ஸ்கிட் அடித்து நிறுத்தினேன். அப்போதுதான் தெரிந்தது, இவளை பாத்துடே, பின்னாடி சைக்கிள் கேரியரிலிருந்த சாப்பாட்டுக் கூடை நழுவ, பறந்து பொய் பத்தடி தூரத்தில் விழுந்து, சாப்பாடு எல்லாம் கீழே கொட்டிருச்சு.

சாப்பாடு கொட்டியதை விடப் பெரிய வருத்தம், அவளும் அவள் தோழிகளும் சிரித்ததுதான். நான் சைக்கிளில் இருந்து கீழே இறங்குவதற்குள், அவளே என் டிபன் பாக்ஸ்-ஐ எடுத்துக்கொண்டு வந்து என்னிடம் கொடுத்தாள். முகத்தில் கஷ்டப்பட்டு சிரிப்பை அடக்குறாலாம் என்று எளிதில் புரிந்தது எனக்கு.

முதல் முயற்சி, படுதோல்வியில் முடிந்த சோகத்தில் இருந்த என்னை, என் நண்பர்கள்தான் உற்சாகப் படுத்தினார்கள். அடுத்த முயற்சிக்கு. அதில் குமார் சொன்ன ஒரு ஐடியா, “மச்சி, சைக்கிள்ல பண்ணதாலதான் இப்பிடி ஆயிடுச்சு. நீ மட்டும் பைக்ல ட்ரை பண்ணுனேன்னுவை, கண்டிப்பா வொர்க்அவுட் ஆயிடும்” என உசுப்பேத்த, இந்த சனிக்கிழமை அதை முயற்சி செய்ய முடிவு செய்தேன். அப்பாவின் கை, காலில் விழுந்து நண்பன் வீட்டுக்கு போகவேண்டுமென்று சொல்லி ஸ்கூலுக்கு எடுத்துவிட்டு வந்தேன். 

நான் எதிர்பார்த்தது போலவே, அன்று மாலை அவள் பேருந்து நிறுத்தத்தில்  நின்று இருந்தாள். அவளைப் பார்த்துக்கொண்டே பைக்கை வேகமாகச் செலுத்திய நான் அங்கே சாலை வளைவில் வந்த இன்னொரு பைக்கில் நான் மோத, நான் பைக்குடன் காற்றில் பறந்துகொண்டிருந்த போதுதான் உறைத்தது இதுதான் ஏலர சனியானு. பிறகு, மருத்துவமனையில் தான் கண்விழித்தேன். திரும்பப் பள்ளிக்கு செல்ல ஒரு மாதம் ஆனது.

அடுத்த பகுதி  "டிங்கு டைரி - 21 திவ்யாவுடன் கைகோர்த்த நிமிடம்".........  


முந்தைய டைரிகள் [1] [2] [3] [4] [5] [6] [7] [8] [9] [10] [11] [12] [13] [14] [15] [16] [17] [18]


---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------


Image result for SCHOOL LOVE tamil MEME

"ஆடவன் அன்புக்கு அடங்கத்தான் பெண்கள் விரும்புகிறார்கள்...... 

ஆளத்தெரியாதவனிடம் பூமி எப்படி நிலைப்பதில்லையோ அப்படி அன்பால் அடக்கத் தெரியாதவனிடம் பெண்கள் நிலைப்பதில்லை...."

கருத்துரையிடுக Disqus

 
Top