0
Image result for school love tamil memes

"அவள் என்னைத் திரும்பி பார்த்தாள்….
நானும் அவளைத் திரும்பி     பார்த்தேன்…

அவள் மறுபடி பார்த்தாள்….

நானும் அவளை மறுபடி பார்த்தேன்….
அந்தப் பரீட்சை மண்டபத்தில் இரண்டு பேருக்கும் தெரியவில்லை விடை!"
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------

இதற்கு முந்தைய பதிவு "டிங்கு டைரி - 20 காதலில் சொதப்புவது இப்படித்தான் "

கையில் கட்டுடன், அது ஆடாமல் இருக்க, கழுத்திலிருந்து ஒரு கயிறும் சேத்து கடியிருந்தாங்க. அவள் என்னைப் பார்த்ததும் அருகில் வந்து, “இப்போ எப்படி இறுக்கு” எனக் கேட்க, நானோ “எல்லாம் சரி ஆயிடுச்சு. இதெல்லாம் எனக்குப் பெரிய அடியே இல்ல. எங்க அம்மாவுக்காகத்தான் இதெல்லாம்” என, கழுத்தில் இருந்து வந்த கயிற்றில் இருந்து கையை எடுத்து கீழே தொங்கவிட்டேன். ஆனால் வலிதாங்கமுடியாமல், என்னையறியாமல் ‘அம்மா’ என கத்திவிட்டேன்.

அவள் உடனே, என் கை பிடித்து அந்தக் கயிற்றில் மாட்டிவிட்டாள். மாட்டிய பிறகும் நான் அவள் கையை விடவே இல்லை. சற்று நேரம் பொறுத்து அவள்,
 “எவ்வளோ நேரம் கையை பிடிச்சுட்டு இருக்கிற மாதிரி ஐடியா?”

“இந்த வாழ்க்கை முழுக்க..”

எப்படி எனக்குத் தைரியம் வந்ததென்றே தெரியவில்லை. ஒருவேளை அவள் ஸ்பரிசத்தால் இருக்கலாம். எப்படியோ மனதில் இருந்ததை அவளிடம் சொல்லியாயிற்று என்று ஒரு திருப்தி. ஆனால் அவளோ எதுவும் சொல்லாமல் ஓடிவிட்டாள்.

அந்த வாரம் முழுக்க என்னைத் தவிர்த்து வந்தாள். அந்தச் சனிக்கிழமை, எனக்குக் கட்டை பிரித்தார்கள். வீட்டிற்கு வந்தவுடன், கோவிலுக்குச் சென்று வருகிறேன் என்று கூறிவிட்டு, அவள் வாரா வாரம் செல்லும் சிவன் கோவிலுக்கு சென்றேன். அவள் மஞ்சள் நிற தாவணியில் பளிச்சென்று தெரிந்தாள். எவ்வளவு பேர் இருந்தாலும், நம்மவளை பார்ப்பது நமக்கு எளிது தானே.

நல்லவேளையாக அவள் தனியாக இருந்தாள். அவளிடம் சென்று, “என்ன ஆச்சு. ஏன் எங்கிட்ட பேச மாட்டேங்கர? புடிக்கலைன்னு பொய் சொல்லாத, எனக்குத் தெரியும் என்னை உனக்கு புடிச்சிருக்குன்னு”. எனச் சொல்லிமுடித்த போது,  எனக்கே ஆச்சரியமாக இருந்தது, ஏன் தைரியத்தை எண்ணி.

அவளோ, தலை குனிந்தவாறே, “இதெல்லாம் ஒத்து வராது. எங்க வீட்டுக்கு தெரிஞ்சா வெட்டி போட்டுருவாங்க”, என்றாள்.

நான், “அதெல்லாம் ஆறு வருசத்துக்கு அப்புறம், நான் நல்ல நெலமைக்கு வந்ததுக்கு அப்புறம் உங்க வீட்டில வந்து பொண்ணு கேட்டா குடுக்காமயா போய்டுவாங்க?” எனக் கேட்க, அவள் எதுவும் பேசாமல் நின்றிருந்தாள்.

 “இங்க பார் திவ்யா, எனக்குத் தெரிய வேண்டியதெல்லாம், உனக்கும் என்னை புடிச்சிருக்கா, இல்லையாங்கறதுதான். அஞ்சு ஆறு வருசத்துக்கு அப்புறம் நடக்க போறத பத்தி இப்போ பேசி ஒண்ணும் ஆக போறதில்ல”.

அவள், “பிடிச்சுருக்கு” எனச்சொன்ன போது என் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. என்னைச் சுற்றி பத்தாயிரம் வாட்ஸ் வெளிச்சம், பட்டாம்பூச்சிகள் பறக்க ஒரு மெல்லிய பாடல் ஓடியது.

“குட்டிக்குட்டி சேட்டை செய்து ஒட்டிக்கொண்டாய்
கொஞ்சிக்கொஞ்சிப் பேசி என்னைக் கொத்திச்சென்றாய்
தள்ளித்தள்ளிப் போன பின்னும் பக்கம் வந்தாய்
இன்னும் இன்னும் மேலே செல்ல இரக்கை தந்தாய்"

அடுத்த பகுதி  " டிங்கு டைரி - 22 பொறியாளன் கனவு.. காதல் கனவானது".........  

முந்தைய டைரிகள் [1] [2] [3] [4] [5] [6] [7] [8] [9] [10] [11] [12] [13] [14] [15] [16] [17] [18] [19]


---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
Related image
“ஓடிப் போவதுதான்  காதல் என்றால்,  பள்ளி முடிந்ததும்  உன் கைகளை  பிடித்து ஓடியதுதான்  என்  முதல் காதல்!”

கருத்துரையிடுக Disqus

 
Top