“காதலி ஏமாற்றி விட்டாளே
என்று கவலைப்படாதே
காதலிக்க ஒருத்தி இருந்தாளே
என்று சந்தோசப்படு ....!!!”
------------------------------------------------------------------------------------------------------------------------------------------
------------------------------------------------------------------------------------------------------------------------------------------
இதற்கு முந்தைய பதிவு "டிங்கு டைரி - 23 மதில்மேல் நின்றவள்"
செமஸ்டர் லீவில் கோயம்பத்தூர் சென்ற போது நண்பர்கள் மூலம் அவளைப் பற்றிய தகவல் தெரிந்து கொள்ள முயன்றேன். திவ்யா பற்றி எந்த நண்பனிடமும் தகவல் இல்லை. இதற்கிடையே, அப்பா உடல்நிலை சரியில்லாமல் போக, என் கடமையை உணர்ந்தேன். திரும்பி சென்னை வந்த போது புது மனிதனாக வந்தேன்.
அவளை மறக்க முடியவில்லை என்றாலும், அவள் சுட்டிக்காட்டிய குறை என்னைப் படிக்க வைத்தது. அனைவரும் ஆச்சரியப்படும் விதமாக அனைத்துப் பேப்பர்களையும் கடைசி செமஸ்டருக்குள் முடித்தேன். முடித்து வந்த மூன்று மாதங்களில் ஒரு MNC-யில் வேலைக் கிடைக்க வீட்டில் அனைவருக்கும் மகிழ்ச்சி.
என்ன தான் நல்ல வேலை வீட்டில் அனைவரும் மகிழ்சியாக இருந்தும் அவளை நான் மறக்க முடியவில்லை. ‘இது போல, வாழ்க்கையில் நீ நல்ல நிலைக்கு வரத்தான் அப்படிப் பேசினேன்’ என்று சொல்லி, என்னைப் பார்க்க வருவாள் எனக் கனவுகளுடன் வாழ்ந்து வந்தேன்.
இப்படியாக அவள் நினைவுகளுடன் காலத்தை கழித்துக்கொண்டிருந்த போது ஒரு நாள், முகபுத்தகத்தில் நண்பர் பரிந்துரையில் அவளின் பெயர் பார்த்தவுடன், என்னையுமறியாமல் கை அவளை க்ளிக்கியது. உள்ளே அவள் புகைப்படம். ஆஸ்திரேலியாவில் இருக்கிறாளாம்.
ஊரிலிருந்து அம்மா அழைத்தார். எனக்கு கல்யாணத்துக்குப் பெண் பார்க்க முடிவு செய்திருப்பதாய்.
‘மனதில் இருப்பவள் வெளியேறும் நாள் வரை பொறுங்கள்’ எனக் கூற நினைத்தும சொல்ல முடியாமல், “இரண்டு மூணு வருஷம் ஆகட்டும்”, என்று கூறி அழைப்பைத் துண்டித்தேன்.
அடுத்த பகுதி "டிங்கு டைரி - 25 அம்பி 2 ரெமோ".........
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
கருத்துரையிடுக Facebook Disqus