0

"காதலில் தோற்றவன் மனவுறுதி மிக்கவன்
எல்லாத் தடைகளையும் வெறியோடு கடப்பான்
 

காதலில் மனப் பக்குவம் இல்லாதவன்–தான் காதல் பைத்தியம் ஆகிறான்
காதலுக்குக் கனவு தேவை காதலே கனவாக்கி விடக்கூடாது.

-------------------------------------------------------------------------------------------------------------------------------------------

இதற்கு முந்தைய பதிவு "டிங்கு டைரி - 24 மனதில் இருப்பவள் வெளியேறும் நாள்"

நம்ம மத்தவங்கள விரும்புரதவிட நம்மை யார் விரும்புராங்கலோ அவங்களுடனான  வாழ்க்கை எப்பாவுமே இனிமையானது. கோயம்பத்தூரில் இருந்து சென்னைக்கு வந்து ABCஎனும் ஐடி நிறுவனத்தில் ஒருவருட பணி முடித்து சில காரணங்கள் சொல்லி அந்த வேலையை விட்டு வந்துவிட்டேன், பிரிந்த காதலை மறக்க முயற்சி செய்து இரவு பகல் பார்க்காமல் குடித்துக்கொண்திருந்ததை பார்த்த என் நண்பன் குமார் முயற்சியில் அவன் வேலை பார்க்கும் நிறுவனத்திலேயே  எனக்கு ஒரு வேலை வாங்கினான். அப்போது நடந்த கதைதான் இது.

அவள் என்னை விட்டுப் பிரிந்தால்……மதுக் குடிக்க மாட்டேன்……
தாடி வைக்க மாட்டேன்……அழுது புலம்ப மாட்டேன்…..
அமைதியாகத் தூங்கி கொண்டிருப்பேன்..அவள் தங்கையின் மடியில்…
கொய்யாலே..கல்லறையில் தூங்குவேனென்று நினைச்சியா….

Related image

ஒரு கனவு போய்க்கொண்டிருந்தது, அன்று அதிகாலை 6 மணிக்கெல்லாம் விடிந்துவிட்டது, கூவுன சேவலை அடுச்சு குழம்பும்  வச்சுட்டாங்க பக்கத்து வீட்டுல, காலை எட்டு மணி. சுலீர்ரென வெய்யல் அடிக்க, கைப்பேசியில் அலாராம் அலறியது.. ஒரு கை அதை நிறுத்திவிட்டு மறுபடியும் மெத்தை விரிப்பிற்குள் போனது, கதவை யாரோ தட்டும் சத்தம்.. எவண்டா நிம்மதியா தூங்க கூட விடமாடிங்குராங்க.. மீண்டும் பலமாக கதவு தட்டும் சத்தம் கேட்டு எழுந்து வந்து கதவை திறந்து பார்த்தால்..எதிர் முனையில் நின்றான் ”குமார்”.

குமார்: மச்சி மணி எட்டு ஆச்சு இன்னும் கெளம்புலியா, டேய் இன்னிக்கு உனக்கு முதல் நாள் ஆபீஸ். கஷ்டப்பட்டு ரெகமண்டேசன் புடுச்சி, மேனேஜர்கிட்ட கெஞ்சி இந்த வேலையை உனக்கு வாங்கி தந்திருக்கிறேன் அத கெடுத்துறாத. இன்னும் கால் மணி நேரத்துல நாம கெளம்பறோம்..

முக்கால்மணி நேரத்தில் நான் ரெடியானேன்.. இருவரும் பைக்கில் கிளம்பினோம். புதிய ஆபிஸில் முதல் நாள், குமார் இரண்டாம் தளத்திலும் எனக்கு  ஆறாம் தளத்தில் ஆபீஸ்..

லிப்ட்டில் இருவரும் நுழைந்தோம். 

குமார்: நாவேனும்னா உங்க ஆபீஸ் வரைக்கும் வரட்டுமா டா.

நான் : நான் என்ன சின்ன பப்பாவா, நீ உன் ஆபீஸ்க்கு போ. 

இரண்டாம் தளம் வந்ததும் குமார் லிப்டிளிருந்து வெளியேறினான். நான் மட்டும் லிப்டில் தனியாகச் சென்றேன்.. என்ன செய்வதென்றே தெரியவில்லை சிறிது பதற்றமாகவும் இருந்தது. லிப்டு கதவு திறந்தது.. 

சுத்தியும் ஆந்திரா, கர்நாடகா, ராஜஸ்தான், தமிழ்நாடு, கேரளா என மாநிலம் வாரியாக லட்டு லட்டா  பெண்கள் கூட்டம். எந்த பொண்ணைப் பார்க்க, என்ற எக்கச்சக்க குழப்பத்தில் இருக்கும்போது என் கைப்பேசி சிணுங்கியது. குமார் எதுக்கு அதுக்குள்ள கூப்புடுறான்.

குமார்: மச்சி, புது ஆபீஸ் எப்படி இருக்கு... 

நான் : "மச்சி, என்ன ஆபிஸ்டா இது?  ஒரே பொண்ணுங்க கூட்டம். அம்பி மாதிரி இருக்கிற என்னை ரெமோ மாதிரி ஆக்குறாளுங்கடா..?"
செய‌ற்கையாக‌ வெட்க‌ப்ப‌ட்டேன்.

குமார்: "உனக்கு மச்சம் தாண்டா. 'பிரபு'ங்கிற உன் பேரைவிட 'ஆனந்த கண்ணன்'னு பேர் வச்சிருந்தா அந்த இடத்துக்கு நல்லா இருந்திருக்கும்...... என் ப்ராஜ்க்ட்லயும் இருக்காங்களே.... ஹூம்ம் ஒரே ஆன்ட்டிஸ்சும்...... பாட்டீஸ்சுமா......" 

நான் : "சரி புலம்பாத அதுக்கெல்லாம் லக் வேணும். சரி லஞ்ச்க்கு போன் பண்றேன். இப்ப என்ன டிஸ்டர்ப் பண்ணாத.. பை"

டீம் மேனேஜர்: ஹலோ பிரபு, வீ ஹப்பிளி வெல்கம் யூ டு அவர் டீம்.. 

தன் டீமிடம் என்னை அறிமுகப் படுத்தினார்.. பிறகு ஒரு மாதிரியாக‌ என் சீட்டில் செட்டில் ஆனேன். என் ப்ராஜெக்ட் ரிப்போர்டுகள் பார்த்துக் கொண்டு கணினியை ஆன் செய்தேன். மை லாக்கர் என்ற போல்டரை ஓபன் செய்தேன். திரையி பெண்கள் புகைப்பட களஞ்சியமே இருந்தது அதில் ஒரு சிறு வயசு புகைப்படத்தை பார்த்ததும் அந்த முகத்தை எங்கயோ பார்த்த ஞாபகம் வந்தது.
அப்படியே கொசு சுருள் சுத்த ஆரம்பிக்கிறது. “பப்பு.. பப்பு உன்னை நிச்சயம் ஒரு நாள் சந்திப்பேன்”

அடுத்த பகுதி  " டிங்கு டைரி - 26 என்னது... மறுபடியும் அவளா!!!.........  


முந்தைய டைரிகள் [1] [2] [3] [4] [5] [6] [7] [8] [9] [10] [11] [12] [13] [14] [15] [16] [17] [18] [19] [20] [21] [22] [23]


---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------



கருத்துரையிடுக Disqus

 
Top