"திருமணம் ஆகாவிட்டால் பரவாயில்லை
காதலிக்காமல் இருந்துடாதீர்
பிறப்புக்கே அர்த்தமில்லாமல் போய் விடுவீர் ....!!!"
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------
இதற்கு முந்தைய பதிவு "டிங்கு டைரி - 25 அடுச்சன்பாறு அப்பாயின்மென்ட் ஆடர்"
இன்டர்காம் அலறல் சத்தம் கேட்டு என் கனவு கலைந்தது.
குமார்: மச்சி, ஐயம் வெய்டிங் டவுன்.. சீக்கிரம் வாட பசிக்குது.
நான் : ம்ம்.. வர்றேன் வை.
பக்கத்தில் ஒரு ஹோட்டலுக்கு சென்றோம். என் முகம் குழப்பத்தில் இருந்ததை குமார் கவனித்தான்.
குமார்: ஏன் டா டல்லா இருக்குற, காலைல அம்பியா இருந்து ரெமோ மோடுக்கு போன.. நாலு மணிநேரம் கூட ஆகுல அதுக்குள்ள என்னாச்சு. யார் உன்ன அன்னியனா மாத்துனது.
குமார்: எதோ ஒண்ணு இறுக்கு. இப்பவே சொல்லு.. அப்புறம் நைட்டு சரக்கடிக்கீல என்கிட்ட வந்து பொலம்ப கூடாது.
நான் : இல்ல மச்சி, ஆபீசி சிஸ்டத்துல கொஞ்ச போட்டோ இருந்துச்சு அதுல பப்புவபாத்தேன்.
குமார்: என்னடா சொல்லுற.... திவ்யா, ஹேமா, நந்தினி, ஹரிணி, வர்சினி ஓகே. லிஸ்ட்டில இல்லாத பேரா இறுக்கு. முதல்ல இந்த பப்பு யாருனு சொல்லு..
நான் : பப்பு என் சின்ன வயசு தோழி. ஸ்கூல் முலாண்டு லீவுக்கு என் மாமா வீட்டுக்குப் பத்து நாள் போய் இருப்பேன், அவுங்க பக்கத்து வீட்டில் ஒரு பொண்ணு இருந்தா அவபேர் என்னனு தெரியாது எல்லாரும் பப்புன்னு கூப்பிடுவாங்க. மூணு வருசத்தில் முப்பது நாள் தான் என்கூட ஒண்ண விளையாடியிருப்பா. எனக்கு பப்புவ ரொம்ப பிடிக்கும். என் ஒன் சைடு லவ்வர்னு வச்சுக்கோவே.
குமார்: ம்ம்.. பிஞ்சுலையே பழுத்தவனா டா நீ. சரிவிடு அவ இப்ப உங்க டீம்லயா இருகுரா.
நான் : தெரியல டா, அவ சின்ன வயசு போட்டோ தான் பார்த்தேன்.
குமார்: விடுமச்சி கண்டுபிடுச்சுரலாம். உங்க ஆபீசில தான் இருப்பா போய் விசாரிச்சு பாரு..
மதியம் ஆபீஸ் போனதும் அந்த போட்டோவை என் கைப்பேசியில் பதிவிறக்கம் செய்தேன். என் டீமில் அனைவரிடமும் விசாரித்ததில், இதற்கு முன்னாள் அந்த சிஸ்டத்தில் ராஜேஷ் தான் இருந்தார். சில மாதத்திற்கு முன்தான் இங்கிருந்து சென்றார் ஆனால் அவரைப் பற்றியும் எந்தத் தகவல்களும் இல்லை என்று தெரிந்தது.
அன்றுமாலை குமாருடன் சென்று சர்வீஸ்க்கு விட்டிருந்த எனது பைக்க எடுத்துவிட்டு ரூமுக்கு சென்றேன். பப்புவின் ஞாபகம் மீண்டும் வர. எப்படி பப்பு போட்டோ அங்க வந்துச்சு. இந்த ராஜேஷ் யாரு, ராஜேஷ்க்கும் பப்புவுக்கும் என்ன சம்பந்தம், எப்படிக் கண்டுபிடிக்கிறது என்ற ஒரே குழப்பத்தில் இருந்தேன் என் கைப்பேசியை எடுத்து குமாரை அழைத்தேன்.
குமார்: சைடிஷ் வாங்கீடேன்.. ஆன்தவே மச்சி..
நான் : பப்புவ எப்படிடா கண்டுபிடிக்கிறது..
குமார்: என்னது மறுபடியும் பப்புவா..
நான் : சாக்குப்போக்கு சொல்லி எஸ் ஆகா பாக்காத. நேர ரூமுக்கு வா.
குமார் மைன்ட் வாஸ் ”இன்னைக்கு இவனும் சரக்கடிக்க மாட்டான் நம்மளையும் அடிக்க விடமாட்டான் அப்படியே அடிச்சாலும் இவன் புலம்பல் தாங்க முடியாதே”
அடுத்த பகுதி " டிங்கு டைரி - 27 ஜீன்ஸ் போட்ட ஏகே47".........
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
பீள் பண்ணு ஆன Future -அ Spoil பண்ணாதே…….
Think பண்ணு ஆணா Time-அ Waste பண்ணாதே ………
Sight அடி ஆணா Serious-ஆ Loveபண்ணாதே…….
தண்ணி அடி ஆணா மட்டை ஆகாதே…….
கருத்துரையிடுக Facebook Disqus