"ஆண்களை விடப் பெண்ணிடம் தான் காதல் பொக்கிஷம் உண்டு
அந்தப் பொக்கிசத்தை கண்டுபிடிக்கும் இளைஞன் அறிவாளி
அவனே சிறந்த காதலன் பெண்கள் இவனையே தேடுகிறார்கள் ....!!!"
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------
இதற்கு முந்தைய பதிவு "டிங்கு டைரி - 26 லிஸ்ட்டில இல்லாத பேரா இறுக்கு"
"எக்ஸ்கியூஸ் மீ" என்று ஒரு கீச்சிசு குரல் என் பின்னாளிருந்து வந்தது. திரும்பிப்பார்த்தால்.
ஜீன்ஸ், டாப்பில் ஒரு பெண். துப்பட்டா மாதிரி இருக்கும் தோளில் துண்டு போடுவது மாதிரி ஷாலை போட்டு இருந்தாள். தெளிவான திருத்தமான முகம். டாப்ஸில் ஏதோ எழுதியிருந்தது.
நான் : "யெஸ்" என்றேன்.
பிரியா :"ஐயம் பிரியா, இந்த ப்ராஜெக்ட்ல தான் நானும் வொர்க் பண்றேன். வெளில் லஞ்ச் போகலாமா?" மென்மையாகக் கேட்டாள்.
நான் : "ஷ்யூர்" போலாமே..
ஒரு பொண்ணு சாப்பிட கூப்டா எப்படி வேண்டாம்னு சொல்லுவோம். அதுவும் இவவேற கொஞ்சம் அழகா இருக்குறா. அவள் பின்னாலேயே சென்றேன்.
"யார் இவள், நான் ஏன் இவள் பின்னால் போகிறேன்" என்ற உண்மை லேட்டாக தான் என் மனதில் உறைத்தது.
பார்க்கிங்கில் என் வண்டி அருகே சென்றேன். அப்போது,
பிரியா: "என் வண்டியில போயிடலாமே?" என்றாள்.
நான் : "ஓ.. ஷ்யூர்"
அப்போதும் ஏன் அப்படி சொன்னான் என்று எனக்கே தெரியவில்லை.
பிங்கு ஸ்கூட்டி பின்னால் அமர்ந்த நான், அவள் விரித்துப் போட்டிருந்த கூந்தல் வண்டி வேகத்தில் முகத்தில் மோத, "என்ன ஷாம்பூவாக இருக்கும்?" என்ற ஆராய்ச்சியில் இறங்கினேன். ஹோட்டலுக்கு அதுக்குள் வந்துவிட்டது.
உள்ளே சென்று எதிரெதிர் டேபிளில் இருவரும் அமர்ந்தோம். சிக்கன் பிரியாணி, பட்டர் சிக்கன் ஆர்டர் பண்ணிவிட்டு எனக்குத் தேவையானதை ஆர்டர் பண்ண சொல்லிவிட்டு, கைகழுவப் போயிருந்தாள்.
என் மனதிற்குள் ஐன்ஸ்டீன் பிஸிக்ஸ் க்ளாஸ் எடுப்பதுபோல் ஒன்றும்புரியாமல் உட்கார்ந்திருந்தேன். போன் சிணுங்கியது. பார்த்தால் குமார்.
குமார்: என்னடா ரொம்ப பிசியோ, லஞ்சுக்கு குபுடுவேணு பார்த்தேன்.
நான் : டேய் மச்சி, நான் சொன்ன நீ நம்ப மாட்டே. என் டீம்ல இருக்கிற செமையான ஒரு பொண்ணுகூட லஞ்சுக்கு வெளில வந்திருக்கிறேன். இன்னக்கு சாய்ந்திரம் உனக்கு செம டிரீட் இறுக்கு. சரி அவ வர்றா நான் போன வைக்கிறேன்
பிரியா : "எனக்கு ஆண்கள் சுத்தமாகப் பிடிக்காது. சுயநலவாதிகள். பெண்களிடம் மட்டும் அதிகாரத்தைக் காட்டும் வீரர்கள்" என்று ஆரம்பித்தாள்.
நான் :"ஙே!"
பிரியா : "எல்லா விஷயத்திலும் பெண்கள் தங்களுக்கு கட்டுப்பட்டு போகவேண்டும் என்று யோசிக்கும் மனோபாவம் கொண்டவர்கள் ஆண்கள்" என்றாள் கடுப்பாக.
என் மனதிற்குள், "இவளுக்கு என்ன பிரச்சினை? சம்பந்தமே இல்லாமல் என்கிட்ட புலம்பிக்கிட்டு இருக்கா?" என்று எண்ணினேன்.
பிரியா: "என்ன? எதுவும் பேசாமல் இருக்கீங்க?"
நான் : "இல்லங்க, அதெல்லாம் ஒண்ணும் இல்ல. எனக்கு ஜீன்ஸ் போட்ட பொண்ணுங்கன்னா கொஞ்சம் அலர்ஜி"
பிரியா: "இதுகூட ஆண்களின் வறட்டு அதிகாரம் தான். பெண்கள் ஆண்களுக்குச் சமமாக ஜீன்ஸ் போடுறாங்களேன்கிற கோபத்தின் வெளிப்பாடு தான்."
என் மனதில் "ஓகே, இது எங்கயோ முத்திப் போன கேஸ். ரொம்ப அடிபட்டு இருக்கா" என்று நினைத்துக் கொண்டிருந்த போது, என்னுடைய போன் அடித்தது.
அடுத்த பகுதி " டிங்கு டைரி - 28 டாப்ஸில் எழுதியிருந்த வாசகம்".........
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
"அதிகமாக பேசாதீர்கள்
வெறுக்கபடுவீர்கள்.....
மெளனமாக காத்திருங்கள்
அதிகமாக தேடப்படுவீர்கள்"
வெறுக்கபடுவீர்கள்.....
மெளனமாக காத்திருங்கள்
அதிகமாக தேடப்படுவீர்கள்"
கருத்துரையிடுக Facebook Disqus