0


"அடேய் இறைவா லவ் பண்ணி கல்யாணம் பண்ணதான் ஒரு ஃபிகர கூட காட்டல
கல்யாணம் பண்ணிட்டு லவ் பண்ணவாவது ஒரு பொண்ண காட்டுடா"

---------------------------------------------------------------------------------------------------------------------



இதற்கு முந்தைய பதிவு "டிங்கு டைரி - 28 டாப்ஸில் எழுதியிருந்த‌ வாச‌க‌ம்:"

என் வீட்டில் பெண் பார்த்துவிட்டார்கள். அந்தப் பெண் பெயர் பிரியா ஏன்னுடன் ஒன்றாக வேலை பார்க்கிறாள். பிரியா, திமிர் பிடித்த பெண் என்று கேள்விப்பட்டால் கூடப் பரவாயில்லை. நேராகப் பார்த்து பேசி, டென்ஷன் ஆகியிருந்தேன். 

இப்போது என் நம்பிக்கை எல்லாம் அப்பா, அம்மாவிடம் பேசி இந்த சம்மந்தத்தை இத்தோடு நிறுத்துவதில் தான் உள்ளது. தனியாக கிச்சனில் இருந்த அம்மாவிடம், அஸ்திரத்தை ஆரம்பித்தேன்.

நான் : "ம்மா, இந்த பொண்ணு எனக்கு வேணாம்மா. ரொம்ப குண்டா இருக்கா? நான் தான் சொன்னேன்ல, எனக்கு ஒல்லியான பொண்ணுதான் வேணும்"

அம்மா : போட்டோவை வாங்கி பார்த்துவிட்டு,"இவ குண்டா? ஆடிக்காத்துல பறந்துபோற மாதிரி இருகுறவ தான் வேணுமா? லூசாடா நீ. சாந்தி சித்திய பார்த்த‌து இல்லையா?"

நான்  : "யார் அவங்க?"

அம்மா :"அதான்டா, குரும்பவாலயம் குண்டு சித்தி"

நான்  : "ஓ.. ஆமா.. அவங்களுக்கு என்ன இப்போ"

அம்மா : "அவ சின்ன வயசில் எப்படி இருந்தா தெரியுமா? முருங்கைக் காய் மாதிரி ஒல்லியா இருந்தா? இப்ப பாரு, அவ பேரே குண்டு சித்தின்னு சொல்றோம். கல்யாணத்துக்கு அப்புறம் எல்லா பொண்ணுங்களும் கண்டிப்பா குண்டு ஆயிடுவாங்க. ஒல்லியான பொண்ணுங்க தான் ரொம்ப பாஸ்ட்டா குண்டு ஆவாங்க. மனசைப் போட்டு குழப்பிக்காதடா"

நான்  :"அம்மா, நான் சொல்றது ஸ்லிம்மா, ஸ்ட்ரக்சரா... ம்மா ப்ளீஸ் அதெல்லாம் உங்களுக்கு சொன்னா புரியாது. அதுவும் இல்லாம இவ ரவுடிமா. என்கூட தான் வேலை பாக்குறா"

அம்மா : "ஓ.. அப்படியா.. ரொம்ப நல்லதா போச்சி. சொல்றத கேளு ரொம்ப நல்ல இடம், நல்ல குடும்பம்டா. அது மட்டும் இல்லாம உங்க ரெண்டுபேர் ஜாதகமும் நல்ல பொருந்துதுன்னு உங்க அப்பா சொல்லுறார், வீணா மனசைப் போட்டு குழப்பிக்காத. போ, இன்னிக்கு சயந்திரம் அவங்க வீட்டுக்கு போறதுக்கு கிளம்பு, ஒரு நல்ல சட்டையை அயர்ன் பண்ணிவை"

அம்மாவிடம் திட்டம் பலிக்காது. வேற வழி இல்லை, அப்பா காலிலாவது விழுந்து இதை நிறுத்த வேண்டும்.

ஹாலில் உட்கார்ந்து டி.வி. பார்த்துக் கொண்டிருந்தவரிடம்,

நான்  :"அப்பா, இந்த பொண்ணு சம்மந்தம் வேணாம்ப்பா ப்ளீஸ்!, ஒரு வாரம் முன்னால நீங்க அனுப்பினத, நேத்து தான் நேர்ல பார்த்தேன். என் புது ஆபிஸ்ல தான் வேலை பாக்குறா. சரியான திமிர் புடிச்ச பொண்ணுன்னு கேள்விப்பட்டேன். ப்ளீஸ் வேணாம்ப்பா"

அப்பா : "ஓ.. ரொம்ப நல்லதா போச்சு"

என் மைன்ட்ல “ஏன் சொல்லி வைத்ததுபோல‌ ரெண்டு பேரும் ஒரே மாதிரி ரியாக்ட் பண்றீங்க”

அப்பா : "அதெப்படிடா, இரண்டே நாளில் ஒரு பொண்ணைப் பத்தி இம்ரெஸ்ஷன் டெவலப் பண்ணுவ"

நான்  : "அப்பா... அவ நான் தான் மாப்பிள்ளைன்னு தெரிஞ்சதும், என்னை லஞ்ச் கூப்பிட்டுப் போய் செமத்தியா கலாசிட்டா.. பெண்ணுரிமை, ஆண்கள் அதிகாரம்ன்னு விட்டு விளாசிட்டு கடைசில நான் தான் கல்யாண பொண்ணுன்னு சொல்றா. எனக்குப் பேச்சு மூச்சே நின்னு போச்சி"

அப்பா : "ஹா ஹா.. ரொம்ப தெளிவான பொண்ணு தான். கல்யாணத்துக்கு முன்னாடி உங்க அம்மாவோடா அப்பவிதன முகத்த வச்சி தான் கட்டிக்கிட்டேன். ஆணா அதுக்கு அப்புறம் உரிமை, அதிகாரம்,ராஜ்யம் எல்லாம் அம்மா தான். எல்லாமே என்கிட்ட ஒரு சாங்கியத்திற்கு தான் கேட்பா. அந்த வகையில் நீ கொடுத்து வச்சவன்டா. பிரியா ரொம்ப தெளிவா முன்னாடியே உன்கூட வெளில வந்து பேசி இருக்கா"

நான்  : "நீங்க‌ காமெடி ப‌ண்ற‌துக்கு இது தான் டைமா? இது என் வாழ்க்கை பிர‌ச்சினைப்பா. க‌ல்யாண‌த்துக்கு அப்புற‌ம் ஆபிஸ்ல‌ இருந்தே லேட்டா ப‌தினோரு ம‌ணிக்கு வ‌ந்தா சாப்பாடு கூட போட‌ மாட்டா. 'நீங்க‌ வ‌ர்ற‌ வ‌ரைக்கும் நான் ஏன் வெயிட் ப‌ண்ண‌னும், உங்க‌ளுக்கு நான் ஏன் சாப்பாடு போட‌ணும். இது கூட‌ கால‌ங்கால‌மா ஆண்க‌ள் மனைவி மீது ந‌ட‌த்தும் அட‌க்குமுறைக‌ளில் ஒன்னு'ன்னுனு மேடையில்‌ பேசுற‌ மாதிரி பேசுவா"

அப்பா : "ஒண்ணும் க‌வ‌லைப்படாத‌டா. க‌ல்யாண‌த்துக்கு அப்புற‌ம் உன்னைய‌ ப‌ட்டினியா தூங்க‌விட‌ மாட்டா"

நான்  : "என்ன? ஏதோ வேற அர்த்தத்தில் பேசுற‌ மாதிரி இறுக்கே" முன‌கினான். பின் சத்தமாக‌ "அப்பா, நான் சொல்ற‌து உங்க‌ளுக்கு புரிய‌வே இல்லையா?"

அப்பா : "நீ போய் கெள‌ம்பு. க‌ல்யாண‌த்துக்கு அப்புற‌ம் பிரியா ஆபிஸ் போக‌மாட்டாள்ன்னு சொல்லிட்டாங்க"

நான்  : "ஐய‌ய்யோ.. 24 ம‌ணிநேர‌மும் வீட்ல‌ தான் இருப்பாளா? நான் செத்தேன்"

அடுத்த பகுதி  " டிங்கு டைரி - 30 சொஜ்ஜி பஜ்ஜியுடன்!".........  
முந்தைய டைரிகள் [1] [2] [3] [4] [5] [6] [7] [8] [9] [10] [11] [12] [13] [14] [15] [16] [17] [18] [19] [20] [21] [22] [23] [24] [25] [26] [27]

-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------


"எதுவுமே சரியில்லாத போதும்..!! எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவது தான் வாழ்க்கை...!!"

கருத்துரையிடுக Disqus

 
Top