-நீங்கா யாரையும் காதலித்தீர்களா..? என்று கேழுங்கள்
-இல்லை என்றால் அந்த திருமணத்தை விரும்பாதீர்கள்
-உன்னிடம் ஒரு எந்திரன் வருகிறான் ....!"
------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
இதற்கு முந்தைய பதிவு "டிங்கு டைரி - 29 வீசிய வலைகள்!"
பெண் பார்க்கும் படலம் நடந்து கொண்டிருந்தது. தலையைக் கீழே குனிந்த நான், கையில் இருந்த தட்டின் மேலிருந்த சொஜ்ஜியை பார்த்தவாறே அரைமணிநேரமாய் நிமிர்ந்துகூட பார்க்கவில்லை. பெரியவர்கள் தான் பேசிக்கொண்டிருந்தனர்.
பாலாஜி : மச்சி சொஜ்ஜி மட்டும் தானா பஜ்ஜி இல்லையா ?
நான் : மெதுவாய் பாலாஜியை முறைத்தவாரே "டேய் பஜ்ஜி வாயா.. கொஞ்சம் அடங்கிட்டு இருக்குறியா.
பிரியா அப்பா: "பொண்ணுகூட தனியா 5 நிமிஷம் பேசுறீங்களா?"
(அய்யோ, தனியா பேசி நானே எனக்கு சூனியம் வச்சிக்கவா, நான் மாட்டேன்)
நான் : "இல்லங்க, பரவால்ல"
குனிந்த தலையை நிமிரவே இல்லை.
பிரியா அப்பா "அட, கூச்சப்படாதீங்க மாப்ள, போய் பேசுங்க, நாங்க எதுவும் சொல்ல மாட்டோம்" சொல்லி அவரே சிரித்துக்கொண்டார்.
(மாப்ளயா???? ஆஹா முடிவே பண்ணிட்டாய்ங்களா?) எழுந்து போனேன்.
மொட்டைமாடிக்கு அனுப்புனா கூட அப்படியே கீழே எட்டி குதிச்சி எஸ்கேப் ஆகலாம். இவிங்க என்ன நேரா பெட்ரூமுக்கு அனுப்புறாய்ங்க. எதோ நடக்கபோகுது.
உள்ளே போனேன். வந்த வேகத்தில் கதவு மூடிக் கொண்டது. கதவில், ஒரு சின்னக் குழந்தை, வாயில் விரல் வைத்து மூடி "ஓ மை காட்!" என்று சொன்ன வால்பேப்பர் கண்ணுக்குப் பட்டது.
("ஆஹா சகுனமே சரியில்லையே")
("ஓ. வெட்கப்படுறா போலக் கள்ளி, எமகாதகி. பிரபு உஷார இருடா. புடிக்கலைன்னு நேரா சொல்லிட்டு எஸ்கேப் ஆகிடு")
நான் : தொண்டையை இருமிக்கொண்டே, "இங்க பாருங்க, உங்களுக்கும் எனக்கும் செட் ஆகாது. நீங்க உங்க தகுதிக்கு ஏத்த நல்ல மாப்பிள்ளையா பார்த்து செட்டில் ஆகிக்கோங்க. என்னை விட்ருங்க. நீங்களே உங்க அப்பா, அம்மாகிட்ட 'என்ன பிடிக்கலை'ன்னு சொல்லி நிறுத்திடுங்க" தம் பிடித்து விடாமல் பேசினேன்.
பிரியா :"’’’’’’’’’’’’’’’"
நான் : "என்னங்க எதுவும் பேச மாட்டேங்குறீங்க"
பிரியா : "ம்ம் சரி"
நான் :"ரொம்ப ரொம்ப நன்றிங்க" என்று சொல்லிவிட்டு திரும்பி பார்க்காமல் கதவை நோக்கி ஓடினேன்.
பிரியா : "ஒரு நிமிஷம்"
("ஆஹா, விடமாட்டேங்கிறாளே") திரும்பாமல் கதவைப் பார்த்து நின்றேன்.
பிரியா : "ஐ லவ் யூ!"
(செத்தேண்டா நான் ...)
கதவில் அந்த குழந்தை இவனையே பார்த்துக் கொண்டிருந்தது.
அடுத்த பகுதி " டிங்கு டைரி - 31 பியரும் புலம்பலுமாக:!".........
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
"இவன்தான்னு முடிவானபின், பெண்ணின் எதிர்பார்ப்பு பல மடங்கு அதிகமாகும்
இவதான்னு உறுதியானபின்,ஆணின் அலட்சியம் தொடங்கும்"
கருத்துரையிடுக Facebook Disqus