"டெடி பியர்னு எதையோ போட்டோ புடிச்சி போட்டுக்கிட்டு இருக்காணுவ ச்சை.
எனக்கு தெரிஞ்ச பியர் எல்லாம் கிங்பிசர், கோல்ட், 20000, சிங்காரோ தான்."
-------------------------------------------------------------------------------------------------------------------------
இதற்கு முந்தைய பதிவு "டிங்கு டைரி - 30 சொஜ்ஜி பஜ்ஜியுடன்"
நான் : "ஹேய் குமார், ஃப்ரீயா இருக்கியா? மதியம் என் ரூமுக்கு வரமுடியுமா?"
குமார்: "ஏன்டா, எனக்கு வேலை இருக்கு. நான் ஆஃபிஸ் போறேன்"
நான் : "ஃப்ரிட்ஜ்ல 6 பியர் பாட்டில் வச்சி இருக்கிறேன். அது ரொம்ப ச்சில்லுன்னு இறுக்கு"
குமார் : "மச்சி, நான் வேணும்னா 11 மணிக்கே வந்துடட்டுமா? சீக்கிரம் முடிச்சிட்டு சீக்கிரம் லஞ்ச் சாப்பிடலாம்"
நான் : “சீக்கிரம் வந்து சேரு"
குமார், என் ரூமுக்கு வந்து சேர்வதற்குள் ஒரு ஃப்ளாஷ்பேக். “எங்க ஆஃபிஸில் வேலை செய்யும் பிரியாவைப் பற்றி பேசப் போறோம். பிரியாவிற்கு நான் தான் மாப்பிள்ளை என்று தெரிந்ததும், தனியே கூப்பிட்டுபோய் கன்னாபின்னாவென கலாட்டா பண்ணிவிட்டாள். ஷாக்காகி போன நான், என் அம்மா அப்பாவிடம் கெஞ்சினேன், கத்தினேன் ஆனாலும் பயனில்லை, என்னால் கல்யாண பேச்சு வார்த்தைகளை நிறுத்த முடியவில்லை. அதனால் இதுவரை நடந்த அசம்பாவிதங்களை பற்றியும், பிரியா அட்டூழியங்களைப் பற்றியும் என் பதினோராம் வகுப்பு பள்ளிகாலம் முதல் சிநேகமாக இருக்கும் உயிர் நண்பன் குமாரிடம் புலம்புவதற்கு அவனை அழைத்துள்ளேன்.
ஓவர் டூ என் ரூம். கதவுல ஒரு போஸ்டர் “பை திஸ் மேன் எ பீயர்” டைம் 11 A.M
நான் : "டேய் உள்ள வா. நீ வர்றத மேல்வீட்டுல இருக்குற ஹவுஸ் ஓனர் பாத்துட்டாங்களா?"
குமார்: "இல்லடா, ஏன்?"
நான் : "அவங்களுக்கு நீ ரூமுக்கு வந்தாலே சரக்கு அடிக்கத் தான் வர்றீயோன்னு சந்தேகம் வந்திருச்சி, அதான்"
குமார்: "சரி சரி என்ன மேட்டர்? பிரியா ஓவர் டார்ச்சர் பண்றாளா?"
நான் : "ஆஹா, நாம மனசுல நெனச்சத இவன் கரெக்ட்டா பேரோட சொல்றானே? எப்படி?" என்று ஆச்சர்யத்தில் புருவத்தை உயர்த்தியவன், "மச்சி, உனக்கு பிரியாவை தெரியுமா?"
ரெண்டு பியர் ஃப்ரிட்ஜில் இருந்து எடுக்கப்பட்டது.
குமார்: "தெரியுமாவா.. உன்னை மாதிரி புதுசா வந்தவங்க தவிர, பிரியாவை தெரியாதவன் இந்த ஆஃபிஸ்ல ஒருத்தன் கூட இருக்க மாட்டான். செக்யூரிட்டிக்கு கூட தெரியும்னா பாத்துக்கோயேன்"
நான் : "ஏன் மச்சி, அவ்வளவு பெரிய ஆளா அவ?"
குமார்: "போன நியூ இயர் ஆஃபிஸ் பார்ட்டில, அவ டீம்ல ஒரு ஜூனியர் ஒருத்தன் தண்ணியடிச்சிட்டு ஓவரா சவுண்டு விட்டப்ப, ஓங்கி அவன் கன்னத்துல ஒரு அறை விட்டா பாரு. எல்லார் காதுலயும் 'ஒய்ங்ங்ங்ங்'ன்னு சவுண்ட் வந்துச்சி"
முதல் பியரின் முதல் சிப்பை உறிஞ்சிக் கொண்டிருந்த நான் டப்பென தரையில் பயத்துடன் வைத்துவிட்டு, கன்னத்தைத் தடவிப்பார்தேன் .
நான் : "என்னடா சொல்ற.. தண்ணியடிக்குறது ஒரு குத்தமா?"
குமார்: "மச்சி, ஸ்ட்ரெய்ட் ஃபார்வர்டு பொண்ணுங்க சிலர் பத்தி கேள்விப்பட்டு இருப்பல்ல.. அந்த க்யூல இவதான் முத ஆளு. அந்த அறை வாங்குனவன் ஒரு வாரம் ஆஃபிஸ் பக்கமே வரல. பேப்பர் போட்டு போயிட்டான்"
கேட்டுக் கொண்டே, கடுமையான டென்ஷனில் முக்கால் பியரைக் காலி பண்ணிவிட்டேன்.
நான் : "வேற என்ன அவளைப் பத்தி ஹாட் நியூஸ்"
குமார்: வாயில் தலைகீழாக கவிழ்த்தி குடித்துக் கொண்டிருந்தவன், பாதியிலே நிப்பாட்டி, "அவளை பத்தி வர்ற நியூஸ் எல்லாமே ஹாட் நியூஸ் தான். போன வருஷம் UK ஆன்சைட்ல இருந்தப்ப, பார்ட்டில மறுபடியும் ரகளை"
நான் : "ஏன் அங்கே யாரையும் அடிச்சிட்டாளா?"
மொத்த பயத்தையும் கண்களில் தேக்கி கேட்டேன்.
குமார்: "யாரையும் அவ அடிக்கல.. அவ தான் இரண்டு ரவுண்டு ஒயின் அடிச்சிட்டா. ஒரே ஆட்டம்"
நான் : "டேய், என்னடா சொல்ற"
குமார்: "பின்ன என்ன? அவ போட்ட ஆட்டத்துல, ஈஃபிள் டவரே ஆட்டம் போட்டுச்சின்னா, பாத்துக்கோயேன்"
பியர் வேலையைக் காட்ட ஆரம்பித்தது.
நான் : "அவ தண்ணி எல்லாம் அடிப்பாளா? என்னால நம்பவே முடியல"
குமார்: "நம்பித் தான் ஆகணும். சரி இதையெல்லாம் நீ ஏன் இவ்வளவு சீரியஸா கேட்குற?"
என் கன்னத்தில் கைவைத்தவாறே "அந்த நல்ல பொண்ண கட்டிக்கப் போறவன் நான் தான்"
முழுதாக ஒரு நிமிடம் குமார், என்னை வெறித்து பார்த்தான். பலவித உணர்ச்சிகள் அந்த பார்வையில் பொங்கியது, கூடவே அவன் திறந்த அடுத்த பியரும்.
குமார்: "உனக்கு ஆறுதல் சொல்றதுக்கு கூட எனக்கு வார்த்தைகள் இல்லடா. இந்த 15 வருஷத்துல இப்ப தான் எனக்கு உன்ன பாத்தா பாவமா இருக்கு."
நான் : "நீ வேற ஏன்டா, கூட கொஞ்சம் பீதியைக் கெளப்புற? இத நிப்பாட்டுறதுக்கு வீட்டுல கேஞ்சினேன், கத்தினேன், கதறினேன். யாருமே என்ன மதிக்கில. உன்கிட்ட புலம்பலாம்ன்னு வந்தா, அதுக்கு அவிங்களே பரவாயில்ல" என்று நிறுத்தி நிதானமாகப் பேசினேன்.
குமார்: "ப்ரீயா விடுடா.
நான் : அந்த பிரியாவதான் விட ட்ரை பண்ணுறேன், முடியலையே....
குமார்: ஒரு பியருக்கே உன்னக்கு ஏறிடுச்சா.. நான் பிரியாவ சொல்லுல ப்ரீயா விடுன்னு சொன்னேன், ஆனா ஒண்ணு, அடுத்த வாரம் சனிப்பெயர்ச்சி இந்த உலகத்தில் உனக்கு மட்டும் தான் நடக்க போகுதுன்னு நினைக்கிறேன். நான் வேட்ஸ் பிரியா, குட் காம்பினேஷன்"
நான் : "மூஞ்சியிலே குத்துனேன்னு வச்சிக்கோ, மவனே..." டென்ஷனாகி பின் பொறுமையாக "கடுப்பை கெளப்பாதடா. ஏதாவது ஐடியா கொடுத்து அந்த கண்டத்தில் இருந்து காப்பாத்துடா"
இரண்டாவது பியர் ஆரம்பம்.
அடுத்த பகுதி டிங்கு டைரி 32 "பியர் டான்ஸ்" அடுத்த பகுதி தொடரும்.........
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
1.மச்சி நான் full steady டா
2.பைக் ஐ நானே ஓட்டுறேன்டா
3.நான் போதையில் உளறுரேன்னு மட்டும் நினைக்காதடா
4.எனக்கு எவ்வுளவு அடிச்சாலும் ஏறாது மச்சி5.இன்னொரு பெக் அடிச்சா செமையா இருக்கும்
6.நான் உனக்காக உயிரையும் கொடுப்பேன்டா
7.மச்சி நாளையில இருந்து குடிக்க மாட்டேண்டா
(Last but not least…பசங்க சொல்லும் மெகா தத்துவம்)
8.மச்சி இந்த பொண்ணுங்களை நம்பவே கூடாதுடா 🙂
கருத்துரையிடுக Facebook Disqus