"பெண்களே விழிப்பாக இருங்கள், ஆண்கள் உண்மையை விட
பொய்யை உண்மைபோல் சொல்வதில் வல்லவர்கள் ....!!!"
------------------------------------------------------------------------------------------------------------------------------------------
இதற்கு முந்தைய பதிவு "டிங்கு டைரி - 32 "பியர் டான்ஸ்"
கதவைத் திறந்தால் பிரியா நின்று கொண்டிருந்தாள். ப்ளாக் கலர் டஃப் ஜீன்ஸ், காலர் வைத்த லாங்க் ஆரஞ்ச் டாப். போன தடவை மாதிரி எந்தத் துணியும் கழுத்தைச் சுற்றி போடல.
கதவைத் திறந்தால் பிரியா நின்று கொண்டிருந்தாள். ப்ளாக் கலர் டஃப் ஜீன்ஸ், காலர் வைத்த லாங்க் ஆரஞ்ச் டாப். போன தடவை மாதிரி எந்தத் துணியும் கழுத்தைச் சுற்றி போடல.
பிரியா: "குமார், நீ எப்படி இங்க?"
பிரியாவின் முதல் கேள்வி குமாரை நோக்கி.... அதிர்ந்தான்.
குமார்: "இல்ல, சும்மா தான். நான் , நான் கெளம்புறேன்டா" என்று வாசலை நோக்கி நடந்தான், இரண்டு கன்னங்களையும் தடவிக் கொண்டே.
பிரியா: "ஓ.. குமார் சார், நீங்க நான் வோட ஃப்ரெண்டா?. ஐ ஸீ.. மைண்ட்ல வசிக்கிறேன்" என்றாள் எகத்தாளமாக
குமார்: "இல்ல.. ஆமா.. இல்ல.. எனக்கு ஆஃபிஸ்ல வேல இருக்கு.. பை"
வீட்டை விட்டு ஓடாத குறையாக எஸ்கேப் ஆனான்
பிரியா: "ம்ம்.. அப்புறம் நான் ?"
என்னைப்பார்த்துத் திரும்பியபடியே
பியரில் இருந்த தண்ணீர் எல்லாம் வியர்வை அருவியாகக் கொட்டியது. இவளைக் கொஞ்சம் கூட எதிர்பார்க்காததால் கொஞ்சம் ஆடிப்போனான் என்பது உண்மை.
நான் : திக்கித் திணறி, "உன்னை யார் இங்க எல்லாம் வரச் சொன்னது? இது பேச்சிலர்ஸ் ரூம்" என்று அவன் சொல்லிக் கொண்டிருக்கும்போது ரூமை பிரியா நோட்டம் விட்டுக் கொண்டிருந்தாள்.
கட்டிலின் அடியில் காலி பியர் பாட்டில்கள் ஒளிந்து இருப்பதை பார்த்துவிட்டு, அவள் என்னைப் பார்த்த பார்வையில் எனக்கு வெப்பம் அதிகமாக கொதித்தது.
நேரே போய், பிரிட்ஜை திறந்து பார்த்தாள்.
பிரியா: "ஓ.. இன்னும் ரெண்டு கிங்க்ஃபிஷர் பீர் இருக்கா? ஸோ, நான்தான் பீர் பூஜையில் கரடியா?"
நான் : "இல்ல.. ஆமா.. இல்ல"
பிரியா: “வெரி பேட் என அவள் தலையை ஆட்டியவாறு.. சரி வா நாம ரெண்டு பேரும் ஆளுக்கு ஒரு பியர் அடிக்கலாம்"
நான் : "என்ன? உன்னை யார் இங்க எல்லாம் வரச் சொன்னா? மேல் வீட்டிலிருக்கும் ஹவுஸ் ஓனர் மாமிக்கு மட்டும் தெரிஞ்சது, ஆரோகரி தான்?"
காலிங் பெல், "டிங் டாங் டிங் டாங் டிங் டாங்" என விடாமல் அடித்தது.
நான் : "நான் சொன்னேன்ல"
பிரியாவிடம் புலம்பிக் கொண்டே திறந்தேன். திறந்தால்,
நான் : மா....மீமீமீமீ
அடுத்த பகுதி டிங்கு டைரி 34 "புல்லட் மாமி!!! " அடுத்த பகுதி தொடரும்.........
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
"அழகானவர்கள் திரும்ப
பார்க்க வைக்கிறார்கள்...
அன்பானவர்கள் திரும்ப
நினைக்க வைக்கிறார்கள்....!!!"
கருத்துரையிடுக Facebook Disqus