0

"மண்ணும் விண்ணும், ஆணும் பெண்ணும் என்பதால் தான் பெண்ணின் மனதைப் புரியமுடியாது என்கிறார்கள் ....!!!

----------------------------------------------------------------------------------------------------------------------------------------

இதற்கு முந்தைய பதிவு "

மீண்டும் விய‌ர்வை கொட்டிய‌து எனக்கு.

முன்னால் நின்றிருந்த என்னை இடித்து த‌ள்ளிவிட்டு, பிரியாவிட‌ம் போனாள் மாமி. அப்ப‌டியே க‌ன்ன‌த்தை மொத்த‌மாக‌ த‌ட‌வி நெட்டி முறித்துச் சொன்னாள்.
ஹவுஸ் ஓனர் மாமி: "நான் , நீ நொம்ப‌ கொடுத்து வ‌ச்ச‌வ‌ன்டா.. அப்ப‌டியே ம‌ஹாலட்சுமி மாதிரி இருக்கா? என் க‌ண்ணே ப‌ட்டுடும் போல‌ இருக்கு" 

("ம‌ஹாலெட்சுமி எந்த‌ ஊர்ல‌ ஜீன்ஸ் போட்டு வ‌ந்துச்சி. மாமி, நீங்க‌ என்ன‌ லூஸா?") 

ஹவுஸ் ஓனர் மாமி:  "என்ன‌டா நீ எதுவும் பேச‌ ஜடமாதிரி நிக்குற? நான் சொல்ற‌து க‌ரெக்ட் தான‌. ம‌ஹாலட்சுமியே வீட்டுக்கு வ‌ர‌ப்போறா?" 

("இவ‌ ம‌ஹாலட்சுமி இல்ல‌, பீர்லட்சுமி. அடிக்கிற‌ பீர்ல‌ பாதி கேட்குறா, இவளா மஹாலட்சுமி? ப‌டுபாத‌கி.. இவ‌ள‌ எங்கிருந்து தான் பிடிச்சாய்ங்க‌ளோ?")

ம‌றுப‌டியும் மெதுவாக‌ புல‌ம்பினேன் என் காதுக்குள்ளேயே

ஹவுஸ் ஓனர் மாமி: "ச‌ரி சின்ன‌ஞ்சிறுசுக‌ பேசிக்கிட்டு இருங்க‌. நான் போய் பில்ட‌ர் காபி போட்டு எடுத்திட்டு வ‌ர்றேன்" மாமி அங்கிருந்து எஸ் ஆனாள்.

பிரியா: என்னைப் பார்த்து திரும்பி, "ரைட், மாமி ப்ராப்ள‌ம் ஸால்வ்டு. இப்ப‌ சொல்லு, ஆளுக்கு ஒரு பியர். ஓ.கேவா?"

நான் : நிஜ‌மாக‌வே டென்ஷ‌ன் ஆனேன், "ஹேய், நீ என்ன‌ பொண்ணா, இல்ல‌ பொண்ணு மாதிரியா? இப்ப‌டி ப‌ச‌ங்க‌ளுக்கு சமமா போட்டி போடுறீயே? வெட்க‌மா இல்ல‌?" என் கத்தினேன்..

பிரியா: "நான் எதுக்கு வெட்க‌ப்ப‌ட‌ணும். இந்த பிய‌ர்ல‌ இது ப‌ச‌ங்க‌ ம‌ட்டும்தான் சாப்பிட‌ணும்னு போட்டிருக்கா? இல்ல‌ விஜ‌ய் ம‌ல்லையா உன்கிட்ட‌ ம‌ட்டும் வந்து  சொன்னாரா?"

நான் : "இல்ல‌..அது வ‌ந்து.. ரைட்.. அப்ப‌டியா?" தைரியத்துடன், "புல்லட் பைக் விள‌ம்ப‌ர‌த்துல‌ கூட‌ தான், இது ப‌ச‌ங்க‌ளுக்கு ம‌ட்டும் தான்ன்னு சொல்லல.. ஆனா பசங்க மட்டும் தான ஓட்டுறாங்க‌.. எல்லா விஷ‌ய‌த்துல‌யும் போட்டி போடுற‌ நீ புல்லட் ஓட்ட‌ ரெடியா?"  என் அவளை மடக்கி விட்ட திருப்தியுடன் பிரியாவைப் பார்த்தேன்.

அவ‌ள் முக‌த்தில் எந்த தயக்கமுமின்றி, கையை நீட்டிச் சொன்னாள், 

பிரியா: "வெளியே போய் பார், நான் எதுல‌ வ‌ந்தேன்னு"

வேலியிலே வந்து பார்த்த எனக்கு தூக்கி வாரி போட்ட‌து. புல்லட் 350 கிளாசிக் ல் வ‌ந்திருந்தாள்.
Related image
"ச‌த்திய‌மாக‌ இவ‌ பொண்ணே இல்ல‌ எனக்கு அப்போ ஹார்ட் பீட் 300ல் அடித்த‌து. 

நான் : "சரி ச‌ரி, ஏன் நீ ஏன் வ‌ள‌வ‌ள‌ன்னு பேசிட்டு இருக்க‌? இப்ப‌ எதுக்கு நீ இங்க‌ வ‌ந்த‌?"  (அப்பாட .. எப்படியோ எனக்கு மீசையில் ம‌ண் ஒட்டல.)

பிரியா: "ஏன் நான் உன்ன‌ பாக்க‌ வ‌ர‌க்கூடாதா?" 

புருவ‌த்தை ஆட்டி ஆட்டி அவ‌ள் கேட்ட போது 

என் மனதுக்குள் ("இவ‌ பொண்ணு தானா") இருந்தாலும் ஆம்பல முறுக்கு என்னாவ‌து? 

நான் : "இங்க‌ பாரு? உன‌க்கு நான் ச‌ரியான‌ ஆள் கிடையாது. என‌க்கும் என் பழைய‌ ஆபிஸ் ஹ‌ரிணிக்கும் நெக்ஸ்ட் ம‌ன்த் மேரேஜ். நாங்க உண்மையான ல‌வ்வ‌ர்ஸ். ஓடிப் போக போறோம். அதனால, இனிமே இப்ப‌டியெல்லாம் ப‌ண்ணாத‌. போ, நான் எங்க‌ அப்பாகிட்ட‌ பேசி க‌ல்யாண‌த்த‌ நிறுத்திடுறேன்" 

அரைம‌ணி நேர‌ம் முன்னால் ப்ளான் ப‌ண்ணிய‌த்தை ஒப்பித்தேன்.

பிரியா: "ச‌ரி முடிச்சிட்டியா?"

நான் : "ம்" என்றேன்.

ஆனால் என் மைண்ட் வாய்ஸ் "இவ எதையோ சுத்தி வளைத்து மடக்க போறது போல கேக்குறாளே? என்று சொல்லி முடிக்க‌ வில்லை,

பிரியா : "ஓடிப் போக‌ப் போறீங்க‌.. ஆனா இத‌ உங்க‌ அப்பாக்கிட்ட‌ பேசி ந‌ம்ம‌ க‌ல்யாண‌த்த‌ நிறுத்த‌ப் போறீங்க‌?"

நான்  : "இல்ல‌.. ஆமா.. இல்ல.. " தெளிவாகக் குழம்பிவிட்டு பின்" ச‌ரி விடு, என‌க்கு தான் உன்னைப் பிடிக்க‌லைன்னு தெரியுதுல்ல‌? அப்புற‌ம் ஏன் இப்ப‌டி டார்ச்ச‌ர் ப‌ண்ற‌?"

பிரியா : "ஓ.கே இது டார்ச்ச‌ராவே இருக்க‌ட்டும். இப்ப‌ நான் ஏன் இங்க‌ வ‌ந்தேன்னா.......?"

 முடிப்ப‌த‌ற்குள்

நான்  :  "அத‌ தான் நான் வ‌ந்த‌த‌துல‌ இருந்து கேக்குறேன். சொல்லு ஏன் இங்க வ‌ந்த‌?" 

என் கையில் எதையோ திணித்தாள். நான் பிரித்து என்ன‌வென்று பார்த்துக் கொண்டிருக்கும்போது சொன்னாள்.

பிரியா: "ந‌ம்ம‌ மேரேஜ் இன்விடேஷ‌ன் ப‌ர்ஸ்ட் காப்பி. ப்ரூப் பார்த்துட்டு என்னென்ன‌ மாற்றம்  ப‌ண்ண‌னும்னு சொல்லு. மாத்திட‌லாம்?" சொல்லிவிட்டு கெளம்பிவிட்டாள். 
Image result for royal enfield memes
புல்லட்டை ஓர் உதை விட்டு ஸ்டார்ட் பண்ணிக்கொண்டே திரும்பி, என்னைப் பார்த்து வெட்கத்துடன் கண்ணடித்தாள் பிரியா. 

நான்  : "??????????????????????????????????"


அடுத்த பகுதி  டிங்கு டைரி 35 "ல‌வ் மேரேஜா, அரேஞ்ச்டு மேரேஜா? ! " அடுத்த பகுதி தொடரும்.........  

முந்தைய டைரிகள் [1] [2] [3] [4] [5] [6] [7] [8] [9] [10] [11] [12] [13] [14] [15] [16] [17] [18] [19] [20] [21] [22] [23] [24] [25] [26] [27] [28] [29] [30] [31] [32] 


---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------



"உங்களை எதிர் பார்ப்பவர்கள் முன்னால் போய் நில்லுங்கள்..... உங்களைக் கண்டால் ஒளிந்து கொள்பவர்களை தேடிக் கொண்டு இருக்காதீர்கள்.....!!"

கருத்துரையிடுக Disqus

 
Top