"அடுத்து நீ சிரிப்பை அடகுவைப்பாய் ...!!!
இதயத்தை அடகுவைப்பாய் ...!!!
வாழ்க்கையை அடகுவைப்பாய் ...!!!
கடைசியில் வெறும் கையுடன் நின்று விடாதே ....!!!"
----------------------------------------------------------------------------------------------------------------------------------------
----------------------------------------------------------------------------------------------------------------------------------------
இதற்கு முந்தைய பதிவு "டிங்கு டைரி - 34 "புல்லட் மாமி!!!"
நடப்பது எதுவுமே எனக்குப் புரியவில்லை எல்லாவற்றையும் கடவுள் மேலே போட்டுவிட்டு, கொஞ்சம் கொஞ்சமாக நார்மல் லைஃபுக்கு மாறினேன். திங்கள்கிழமை காலையில் வழக்கம்போல ஆஃபிஸ் வந்திருந்தேன்.
நடப்பது எதுவுமே எனக்குப் புரியவில்லை எல்லாவற்றையும் கடவுள் மேலே போட்டுவிட்டு, கொஞ்சம் கொஞ்சமாக நார்மல் லைஃபுக்கு மாறினேன். திங்கள்கிழமை காலையில் வழக்கம்போல ஆஃபிஸ் வந்திருந்தேன்.
என் கேபினை சுற்றி ஒரு நோட்டம் விட்டேன். பிரியா கேபினில் இல்லை. ஓரளவுக்கு நிம்மதியாக இருந்தது. சிஸ்டத்தை ஆன் பண்ணி, மின்னஞ்சல் செக் பண்ணிக் கொண்டு ரிலாக்ஸ் மூடில் இருந்தேன்.
திடீரென்று நாலைந்து பெண்கள், என்னைச் சுற்றி வந்து கொண்டனர்.
"ஹேய் அண்ணா, கங்கிராட்ஸ்! சொல்லவே இல்ல" என்று சொல்லிக் கொண்டே என் கையை வலுக்கட்டாயமாகப் பிடித்து வாழ்த்து சொன்னாள் ஒரு பாப் கட் தலை.
நான் : "???"
"புதுமாப்பிள்ளை முறுக்கு இப்பவே வந்திருச்சு?" என்றால் குண்டுக்கன்னு குர்சிதா
"கல்யாணம் எப்போ?" என் இன்னொரு பீரோ சைஸ் பொண்ணு கேட்க.
இப்படி மாறி மாறி கேள்வி கேட்டதும், நான் துடுக்குற்றேன், "ஆஹா, அந்த சனியன் ஊர் ஃபுல்லா சொல்லிருச்சா? புது ஆஃபிஸ்ல வந்த சகுனமே சரியில்லை" என எனக்கு நானே பேசிக் கொண்டேன். "எப்ப அந்தப் பேரழகி பிரியாவ பார்த்தேனோ அன்னைலர்ந்து என் மைண்ட் வாய்ஸ் மட்டும் தான் பேசுகிறது. வாயிலிருந்து ஒரு வார்த்தையும் வரமாட்டேங்குது. எப்படி இருந்த நான், இப்படி ஆ...கிட்டேன்" என்று சீலிங்கை வெறித்துப் பார்த்தேன்.
பீரோ சைஸ் பொண்ணு : "என்ன பாஸ், இப்பவே ட்ரீம்க்கு போயிட்டீங்களா? சொல்லு எங்க போகலாம் மேரேஜ் ட்ரீட்?"
நான் : "எனக்கு சென்னைல நிறைய பார், பப் எல்லாம் தெரியாது? நீங்களே சொல்லுங்க"
பாப்கட் பொண்ணு : "ஹலோ, திஸ் இஸ் டூ மச். ட்ரீட் அங்கல்லாம் வேண்டாம். கல்யாணத்துக்கு வரும்போது ஹோட்டல்ல அரேஞ்ச் பண்ணா மட்டும் போதும்?"
நான் : "அடிப்பா.....வி" என நான் மென்மையாக புலம்பினேன்
பீரோ சைஸ் பொண்ணு : "தி.நகர் Barbeque Nation, இல்லைன்னா GRT Kebab Factory போகலாம் OR Residency Towers???".
குண்டுக்கன்னு குர்சிதா : "எது ஓ.கே நான் ?".
நேகா : ஆறடியில் வளர்ந்த மைசூர்க்காரி கரகரப்பான குரலில் கேட்டாள், "அதெல்லாம் அப்புறம் டிசைட் பண்ணலாம். கல்யாண பொண்ணு யாரு நான் ? லவ் மேரேஜா, அரேஞ்ச்டு மேரேஜா??
நான் : "அடிப்பாவி பிரியா, எல்லா மேட்டரையும் சொன்ன.. உன் பேரையும் சேர்த்துச் சொல்லி இருக்க வேண்டியது தானே? இப்படி கோர்த்து விட்டுட்டாளே? என்று அவளைத் தேடும்போது ஒரு பாடல் அவள் கேபின் சைடில் இருந்து வந்தது.
" கங்கைக் கரைத் தோட்டம் கன்னிப் பெண்கள் கூட்டம்
கண்ணன் நடுவினிலே.. ஓ..ஓ..ஓ"
டைமிங்காக கேட்டது. எட்டிப்பார்த்தேன், பிரியா எழுந்தாள்.
"மவனே, பேரச்சொன்ன, தொலைச்சிடுவேன்" என்பது போல் மிரட்டிக் கொண்டே என்னை நோக்கி வந்தாள். மற்ற பெண்கள் கவனிக்கவே இல்லை.
வந்தவள் என்னைப் பார்த்து,
பிரியா : "என்னங்க ஸார், முகமெல்லாம் வீங்கி இருக்கு. நைட் என்ன ஓவர் மப்பா? ஃப்ரெண்ட்ஸ்க்கு பேச்சிலர் பார்ட்டி கொடுத்தீங்களா?"
சம்பந்தமில்லாமல் கேட்டு சிரித்துக் கொண்டாள். சுற்றியுள்ளவர்களும் சிரித்த பெரும் சிரிப்பில் அந்த ஏரியாவே அதிர்ந்தது. "க்ர்ர்ர்க் க்ர்ர்ர்ர்ர்க்" ஆத்திரத்தில் நான் பல்லைக் கடித்துக் கொண்டிருந்தேன்.
பிரியா : "ஓ.கே கேர்ள்ஸ். நாம இதப்பத்தி லஞ்ச் ப்ரேக்கில என்கிட்ட கேட்டுக்கலாம்" என்று சொல்லி பிரியாவே சபையைக் கலைத்தாள்.
நான் இன்னும் அவளை முறைத்துக் கொண்டிருந்தேன். சடாரென பிரியா திரும்பி என்னை நோக்கி வந்தாள்.
நான் : ஆஹா இப்போ என்ன போகம்பத்த கேளப்பபோறாலோ தெரியலையே!!!!
அடுத்த பகுதி டிங்கு டைரி 36 ""ஆஃபிஸிற்கு புதிதாக வந்த நச் ஃபிகர்!!" அடுத்த பகுதி தொடரும்.........
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
"எழுத பட்ட விதி மாறுவது
இல்லை :- ஜனனம்.
எழுதிய விதி முழு பலனையும்
போதிப்பது இல்லை:- ஜாதகம்.
விதி வலியது அதை மாற்றும்
சக்தி அந்த கடவுளுக்கே இல்லை
என்பதே நிதர்சனம்"
கருத்துரையிடுக Facebook Disqus