0


"இளவட்டங்களே...

காதல் என்பது அடகு கடைதான், 

முதலில் சிரிப்பின் மூலம் அடகுக்கடை திறக்கப்படும் ....!!!"
-------------------------------------------------------------------------------------------------------------------------------------------

இதற்கு முந்தைய பதிவு "டிங்கு டைரி - 35 "ல‌வ் மேரேஜா, அரேஞ்ச்டு மேரேஜா?"

பிரியா : "என்ன‌டா, என் பேர‌ சொல்ல‌லியேன்னு பாக்குறீயா? அதான் நீ தான் ஹ‌ரிணியோ, ஷாலினியோ.. ஏதோ ஒரு பொண்ணுகூட‌ ஓடிப்போக‌ போறேன்னு சொன்னேல‌. அதான் சொல்ல‌ல‌.." என்று சொல்லிக் கொண்டே க‌ண்ண‌டித்தாள். கெளம்பி அவள் இடத்துக்குப் போய்விட்டாள்.

ம‌றுப‌டியும் ப‌ல்லைக் க‌டித்தேன். "அடிக்க‌டி க‌ண்ண‌டிக்கிறாளே, இவ‌ளுக்கு எதுவும் ஒண்ணரைக் க‌ண் வியாதி இருக்குமோ" என்று அடுத்த‌ செக‌ண்டே கொலைவெறியுட‌ன் யோசித்தேன்.

ல‌ஞ்ச்க்கு கெள‌ம்பும்முன், ப்ராஜெக்ட் மேன‌ஜ‌ரிட‌ம் இருந்து மின்னஞ்சல். உட‌னே டீம் மீட்டிங்கிற்கு கான்ஃப்ர‌ன்ஸ் ரூமுக்கு வ‌ர‌ச்சொல்லி எல்லாருக்கும் வ‌ந்திருந்த‌து.

லைட்டாக‌ க‌னைத்துக் கொண்டு பி.எம் ஆர‌ம்பித்தார், "உங்க‌ எல்லாரையும் இங்க‌ வ‌ர‌ச் சொன்ன‌துக்கு கார‌ண‌ம், புதுசா ஒருத்த‌ர் ந‌ம்ம‌ டீமுக்கு வ‌ந்திருக்காங்க‌. ஸோ, introduce ப‌ண்ற‌துக்காக‌ வ‌ர‌ சொன்னேன்"

ஒருத்தி ஓர‌மாக‌ நின்றிருந்தாள். அருமையான ஸ்ட்ரக்சருடன், ரொம்ப‌ அழ‌காக‌ இருந்தாள். அவ‌ள் போட்டிருந்த‌ ட்ரெஸ் நல்ல‌ கலர் காம்பினேஷ‌னில் நிறைய‌ சிந்தெடிக் வொர்க்ஸ் ப‌ண்ண‌ப்பட்டு நீட்டாக‌ இருந்த‌து.

"ந‌ச் ஃபிக‌ர் ந‌ம்ம டீம்ல..... இவ வர்ற நேர‌ம் பார்த்து என‌க்கு பொண்ணு பார்த்து என் கைய‌ க‌ட்டிப் போட்டுட்டாங்க‌ளே நான் " என்று ஃபீல் ப‌ண்ணினேன். 

புதிதாக‌ வ‌ந்த‌வ‌ள் வாயைத் திற‌க்காம‌ல், இத‌ழ்க‌ள் ம‌ட்டும் அசைந்து இன்ட்ரோ கொடுத்தாள், "நான் ABC க‌ம்பெனில இதுக்கு முன்னால‌ வொர்க் ப‌ண்ணேன்..."

"அட‌ ந‌ம்ம‌ ப‌ழைய‌ ஆஃபிஸ், எப்ப‌டி மிஸ் ப‌ண்ணோம்?" என்று வ‌டிவேல் ரேஞ்சில் திங்க் ப‌ண்ணினேன்.

"ஐ'யாம் ஹ‌ரிணி" என்று சிரித்துக் கொண்டே தொட‌ர்ந்தாள்.

நான் ஜொள்ளுட‌ன் கேட்டுக் கொண்டிருக்கும்போதே, ஏதோ ஒரு ஜோடிக் க‌ண்க‌ள் என்னை பார்ப்ப‌து போல் தோன்ற‌வே, சுற்றியும் பார்த்தேன். "ஆ.. பிரியா"

பிரியா பார்வையில் உக்கிர‌ம் தெறித்தது. கோபத்தில், ஆத்திரத்தில், முகம் சிவந்தது. என்னக்கும் அவ‌ள் பார்வையின் முதலில் புரியாமல் பின்னர் அர்த்த‌ம் புரிந்தது. ("நான் ஓடிப்போக‌ போவ‌தாக பிரியாவிடம் பொய் சொன்ன‌ ப‌ழைய‌ ஆஃபிஸ் பெண் பெய‌ர் ஹ‌ரிணி")

பிரியா : "எக்ஸ்க்யூஸ் மீ" என்று சொல்லிக் கொண்டே கான்ஃப‌ர‌ன்ஸ் ரூமை விட்டு வெளியேறினாள்.

நான்  : "வாட் த ஹெல் இஸ் ஹபநிங்?" என்று அநியாய‌ டென்ஷ‌னானேன்.

அடுத்த பகுதி  டிங்கு டைரி 37 ""இரண்டு பெண்களும் (இல்ல) இரண்டு பிசாசுகளும்! " அடுத்த பகுதி தொடரும்.........

முந்தைய டைரிகள் [1] [2] [3] [4] [5] [6] [7] [8] [9] [10] [11] [12] [13] [14] [15] [16] [17] [18] [19] [20] [21] [22] [23] [24] [25] [26] [27] [28] [29] [30] [31] [32] [33] [34]


---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------



“உனக்கு ஒரு பொண்ணு “ஹாய்” சொல்லுறானா கண்டிப்பா

உனக்கு முன்னாடி வேற யாருக்கோ “Bye” சொல்லி இருப்பா ..!”

கருத்துரையிடுக Disqus

 
Top