"ஆண்களே விழிப்பாக இருங்கள்,
நிறைவேற்ற வேண்டிய பெண்கள் அழுது கொண்டே சாதித்திடுவர் ...!!!"
-------------------------------------------------------------------------------------------------------------------------------------------
-------------------------------------------------------------------------------------------------------------------------------------------
இதற்கு முந்தைய பதிவு டிங்கு டைரி - 37 "இரண்டு பெண்களும் (இல்ல) பிசாசுகளும்!"
6 பேர் உட்காரக்கூடிய பெரிய டேபிள். என் பக்கத்தில் பி.எம். எனக்கு எதிரில் பிரியா. அவள் பக்கத்தில் ஹரிணி. மத்த சீட்களில் குண்டு பீரோ, மைசூர், பாப்கட் உட்கார்ந்தனர்.
6 பேர் உட்காரக்கூடிய பெரிய டேபிள். என் பக்கத்தில் பி.எம். எனக்கு எதிரில் பிரியா. அவள் பக்கத்தில் ஹரிணி. மத்த சீட்களில் குண்டு பீரோ, மைசூர், பாப்கட் உட்கார்ந்தனர்.
ஹரிணி : என்ன நியாபகம் இருக்கா? உங்க பழைய ஆஃபிஸ் தான்" ஹரிணி முதல் அணுகுண்டை என்னை நோக்கி வீசினாள்.
திரும்பவும் நெளிந்தேன். "ஒழுங்கா சாப்பாடு கூட சாப்பிட விட மாட்டேங்குறாய்ங்க. அழகா இருந்தாலே இது ஒரு பிரச்சினை" என்று கருவிக் கொண்டே,
நான் : "இல்லங்க. நியாபகம் இல்ல"
இந்த பதில் சொல்லும் வரை பிரியா, என்னையே பார்த்துக் கொண்டிருந்தாள்.
ஹரிணி : ஓ.கே. நான் அப்ப உங்க டீம் இல்ல. என் ஃப்ரண்ட் ஹேமா தான் உங்கள பத்தி அடிக்கடி சொல்லுவா. அந்த கிரிக்கெட் டோர்னமென்ட்ல, உங்க பேட்டிங்க பார்க்குறதுக்காக, நானும் ஹேமாவும் வந்திருந்தோம். அந்த மேட்ச்ல கூட நீங்க தான ஓப்பனிங் பேட்ஸ்மேன்" ஹரிணி பிசாசு வேலையை இனிதே ஆரம்பித்தது.
நான் : அய்யோ என்னடி சொல்ற.. ஹேமான்னு ஒருத்தி வேற இருக்கிறாளா? டோர்னமென்ட்.. ரைட். கல்யாணத்துக்கு முன்னாடியே, பொண்டாட்டி கையால அடி வாங்குனது நானாக தான் இருக்கும்" என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டு, பிரியாவை கவனித்தேன். அவள் ஆர்வம் காட்டாமல் மெதுவாகத் தட்டில் ஸ்பூனால் கோலம் போட்டுக் கொண்டிருந்தாள்.
"ஓ.. அப்படியா.. அது சூப்பர் மேட்ச்" பட்டும்படாமலும் பேசினேன்.
ஹரிணி : ஆமா. அந்த மேட்ச்ல ஜெயிச்சதுக்கு உங்க டீம் க்ரீன்பார்க்ல கொடுத்த பார்ட்டிக்கு, நானும் வந்திருந்தேன். யப்பா.. என்ன ஒரு ஆட்டம்.. ஏழு ரவுண்ட் தண்ணி அடிச்சிருப்பீங்களா?..'பொல்லாதவன்' எங்கேயும் எப்போதும் பாட்டுக்கு நீங்க போட்ட ஆட்டம்..ச்சான்ஸே இல்ல"
எனக்கு தொண்டையில் ஏதோ சிக்கிக் கொண்டது.
நான் : சதிகாரி, என்ன சாவடிக்காம இங்கே இருந்து போக மாட்டா போல இருக்கே. இரண்டு கன்னத்துலயும் சூடு கண்டிப்பாக விழும்" பின் சத்தமாக, "ஓ.. இதெல்லாம் நோட் பண்ணீங்களா? க்ரேட். சூப்பர்ப் பார்ட்டி அது?" மறுபடியும் பட்டும்படாமலும் சொன்னேன்.
ஹரிணி : பின்ன.. அந்த நியூஇயர் பார்ட்டில கூட ஒரு பாட்டு ஸ்டேஜ்ல பாடுனீங்களே? அது கூட.. ப்ரசன்னா படம்.. ம்ம்ம்"
நான் : அழகிய தீயே' விழிகளின் அருகினில் வானம்.. அது தான.. என்னோட ஃபேவரிட் ஸாங்" அவனையும் அறியாமலேயே உற்சாகத்துடன் பேசினேன்.
ஹரிணி : யெஸ்.. அது தான். அப்ப இருந்து எப்ப ப்ரசன்னாவ பார்த்தாலும் எனக்கு உங்க நியாபகம் தான். நீங்களும் ப்ரசன்னா மாதிரி ஸ்மார்ட்டா இருக்கீங்க. “ஐ எம் கிரேசி பேன் ஆப் யு” சொல்லிவிட்டு வெட்கத்தில் தலையைக் குனிந்தாள் ஹரிணி.
எனக்கு என் இதயம் வெடிப்பது போல இருந்தது. கொஞ்சம் கூட கேப் இல்லாமல், பிரியா கத்தினாள்,
பிரியா : எக்ஸ்கியூஸ் மீ!
ஹரிணி : யெஸ்
பிரியா : ஹி இஸ் மை பியான்ஷி!!!
ஹரிணி : வாட்?
எல்லாரிடமும் இருந்து கோரஸாக
வாட்?
வாட்?
வாட்?........ ?" .
அடுத்த பகுதி "டிங்கு டைரி - 39 "ஆன்சைட் ஆபர்... அலேர்ட் ஆனா நான்!" அடுத்த பகுதி தொடரும்.........
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
“தாயின் முத்தத்தில்
அன்பான அறிவுரையையும்
உணர்ந்தேன்”
“காதலின் முத்தத்தில்
ஆறுதலான அன்பை
உணர்கின்றேன்”
கருத்துரையிடுக Facebook Disqus