"அவனின் கள்ளம் கபடமில்லாத அன்புக்கு முன்னே
என் திமிரான பேச்சும் கர்வமும் மரித்துப் போனதே"
-----------------------------------------------------------------------------------------------------------------
-----------------------------------------------------------------------------------------------------------------
இப்போது அஸ்வின் அறையில் பிரியா.
அஸ்வின் : "பிரியா, நேரா நான் விஷயத்துக்கு வர்றேன். நீங்க திரும்பவும் UK க்ளையண்ட் ப்ளேஸ்க்கு போகணும். நீங்க ரெடியா?"
முழுதாக அரைநிமிடம் யோசித்தாள்.
பிரியா : "ஸாரி, அஸ்வின். என்னால இப்ப போக முடியாது"
அஸ்வின் : "என்ன காரணம்ன்னு தெரிஞ்சிக்கலாமா?"
பிரியா : "கொஞ்சம் பெர்சனலா வேலைகள், பேமிலி கமிட்மெண்ட்ஸ்"
அஸ்வின் : "ம்ம்.. ஓ.கே. ஸோ, அப்படின்னா, உங்களுக்கு பதிலா நான் புதுசா இரண்டு பேரைத் தேடணும், ஐ வில் டேக் கேர்"
பிரியா : "இரண்டு பேரா? வாட் டூ யூ மீன்?"
அஸ்வின் : "யூ நோ நான் ரைட். அவர்கிட்ட தான் நான் ஃபர்ஸ்ட் ப்ரோப்பஸ் பண்ணேன். ஃபர்ஸ்ட், பெர்சனல் வேலை, பிரச்சினைன்னு சொல்லிக்கிட்டு இருந்தார். அப்புறம் உங்க பேரைச் சொன்னதும் ஓ.கே சொல்லிட்டாரு"
மெல்லிதாக உதட்டின் ஓரத்தில் புன்னகை பரவ ஆரம்பித்தது.
அஸ்வின் : "இதுல ஆச்சரியம் என்னன்னா, நீங்க வரலைன்னு சொன்னா அவரும் வரமாட்டேன்னு சொல்லிட்டாரு.!! உங்கள பத்தி அவருக்கு தெரியாதுன்னு நினைக்கிறேன்"
அந்த மெல்லிய புன்னகை காது வழி கடந்து நெற்றியின் நடுவில் வந்து இணையும் போது, முழுவதும் வெட்கத்தில் சிவந்து இருந்தாள்.
அஸ்வின் :"ஓ.கே. பிரியா. நாட் எ ப்ராப்ளம். ஐ வில் டேக் கேர்"
பிரியா :"அஸ்வின், ஒன் செகண்ட். நாங்க என்னைக்கு ஆன்சைட் கெளம்பணும்?"
அஸ்வின் : "வாட்?" தேவையில்லாமல் அதிர்ச்சியானதில் டென்ஷன் ஆனான்
பிரியா : " "
அஸ்வின் : "சத்தியமா புரியல? ஏன் இரண்டு பேரும் ஒரே மாதிரி சொல்றீங்க?" வழுக்கைத் தலையில் ஒட்டியிருந்த வேர்வையை கர்ச்சீப்பில் ஒற்றி எடுத்தபடி கேட்டார்.
பிரியா : "நான் சொன்ன பெர்ஸனல் பிரச்சினை, நான் தான். நான் சொன்ன பெர்ஸனல் கமிட்மென்ட்ஸ், நான் தான்"
அஸ்வின் : "Why?"
பிரியா : "அய்யோ கடவுளே, இன்னிக்கி காலையில் இருந்து எத்தனை பேரிடம் தான் இத சொல்ல வேண்டி இருக்குமோ? அவன் கூலா எஸ்கேப் ஆகிட்டான்? இடியட்" என்று பிரியா தன் மனதுக்குள் கடவுளையும், என்னையும் திட்டிக் கொண்டிருந்தாள்.
அஸ்வின் : "ஹலோ பிரியா.. நான் எதுக்குன்னு கேட்டேன் ?"
பிரியா :"He is my Fiancee!!! We are getting married SOOOOON!"
அஸ்வின் : "வாட்?"
இது தான் அஸ்வின்க்கு நிஜ ஷாக்.
பிரியா : "நீங்க ஏன் அஸ்வின் ஷாக் ஆகிறீங்க?"
அஸ்வின் : "இந்த மேட்டர் எல்லாம் தெரியாமல் அவர்கிட்ட கிட்ட உங்கள பத்தி ஏதேதோ சொல்லிட்டேன்?"
சோகத்தில் மூழ்கினார் அஸ்வின்.
பிரியா : "ஹா ஹா ஹா" அந்த அறையே அதிர அதிர சிரித்தாள்
அடுத்த பகுதி "டிங்கு டைரி - 42 "புலம்பல் வாக்குமூலம்! தொடரும்.........
-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
"பசிக்கு பால் ஊத்த ஆளில்லை..
எனக்கு ஏன்டா அபிஷேகம் பண்றீங்கன்னு சொல்றாரு
#சிவன்..
கருத்துரையிடுக Facebook Disqus