"அன்பிற்கு வேலியிட தெரியுமே தவிர
சிறை வைக்க தெரியாது
வேலிக்கும் சிறைக்கும் உள்ள வித்தியசம்
அன்பு நிறைந்த விழிகளுக்கு மட்டுமே தெரியும்....!!"
-----------------------------------------------------------------------------------------------------------------
-----------------------------------------------------------------------------------------------------------------
நான் காற்றில் பறப்பது போல் உணர்ந்தேன். இந்தச் சந்தோஷத்தை உடனே கொண்டாட வேண்டும் போல இருந்தது. உடனே நினைவில் வந்தான் நண்பன் குமார் தான்.
நான் : "மச்சி, என்ன பண்ணிக்கிட்டு இருக்க? ஈவ்னிங் ஃப்ரீயா?"
குமார் : "கொஞ்சம் ஃப்ரீ தாண்டா. என்ன மேட்டர்?"
நான் : "கிளம்பி எங்க ஏரியா வா. நைட் தண்ணி அடிக்கலாம்?"
குமார்: "வேணான்டா.. கடைசில பிரியா வந்து கதவை தட்டுவா, மொத்த சரக்கும் இறங்கிடும். உங்க போதைக்கு நான் ஊறுகாயா?"
நான் : "அத பத்தி கவலப்படாத மச்சி. நாம இன்னைக்கு ஏசி பார் போயிடலாம்?"
குமார்: "மாமா, SMS படம் பார்த்து இருக்கேல்ல.. அந்த ஹீரோயின் மாதிரி நேரா பாருக்கு வந்துடுவா அவ. அவ பொறுக்கிடா"
நான் : "அடி செருப்பால.. யாரைப் பார்த்து பொறுக்கிங்கிற. அவ என் ஆளு, நான் கட்டிக்கப் போறவ. மரியாதையா பேசு"
குமார் : "வேணும்டா வேணும் எனக்கு இதுவும் வேணும் இன்னும் வேணும். எப்ப நீ அவளைத் தான் கட்டிக்கப் போறேன்னு சொன்னியோ அன்னைக்கே உன் ஃப்ரெண்ட்ஷிப்ப கட் பண்ணி இருக்கணும்"
நான் : "விடு மச்சி, இதுக்கெல்லாம் டென்ஷன் ஆனா எப்படி? நாம என்ன அப்படியா பழகிருக்கோம். நீ மட்டும் இப்ப வந்தா ஏசி பார் முழு செலவை நான் ஏத்துகிறேன்"
குமார் : "ம்ம்ம்.. இது ஒரு நல்ல டீல். ஆனா..இந்த மாதிரி எல்லாம் உன்ன நான் பாருக்கு கூப்பிட்டு போனேன்னு தெரிஞ்சதுன்னா, பிரியா என்ன அடிப்பா மச்சி"
நான் : "நீ இப்ப வரலைன்னாலும் அடிப்பா. நீ நைட் தண்ணி அடிக்க கூப்பிடுறேன்னு அவகிட்ட சொன்னேன்னு வச்சிக்கோ......."
குமார் : "ரைட் மச்சி.. நான் 8 மணிக்கு உன்ன வீட்ல வந்து பிக்கப் பண்ணிக்குறேன். எப்படியெல்லாம் மிரட்டுறீங்க, நடத்துங்கடா நடத்துங்க"
லைனை கட் பண்ணிவிட்டான் குமார்
"இதெல்லாம் கூட நல்லா தான் இருக்கு" என்று என் மனதுக்குள்ளே ரசித்தேன்.
இரவு 8.45 மணி. அரைகுறையான மங்கலான வெளிச்சத்தில் ஒரு ஆஃப் சிக்நேச்சர் பாட்டில் இரண்டு பேர் உடலிலும் சரி பாதியாக இறங்கி இருந்த நேரத்தில் ஆரம்பித்தான் குமார்
குமார்: "ஏன்டா, பிடிக்கல பிடிக்கலன்னு கீறல் விழுந்த டேப் ரிக்கார்டர் மாதிரி கத்திக்கிட்டு இருப்ப.. இப்ப என்ன ஆச்சி?"
நான் : "சிம்பிலான ஒரு லாஜிக் தாண்டா. ஒரு பொண்ணு அசிங்கபடுத்திட்டா, கன்னாபின்னான்னு கலாசுனா, பசங்க யாருக்கும் பிடிக்காது. நானும் 'என்ன இவள பையன் மாதிரி யாருக்கும் அடங்காம வளர்த்து இருக்காங்க, என்ன ஜென்மம்' அப்படியெல்லாம் யோசிச்சி இருக்கேன்"
குமார் : "இப்ப என்ன ஆச்சி? இப்ப மட்டும் எப்படி அவள பொண்ணுன்னு நம்புன?"
நான் : "இன்னிக்கு வரைக்கும் அவகிட்ட நான் தனியா பத்து நிமிஷம் கூட பேசுனது இல்ல. அன்னைக்கு ஹோட்டல் கூப்பிட்டுப் போய் என்னை கிண்டல் பண்ணதோடு சரி"
குமார் :"அப்புறம் அன்னைக்கு மட்டும் ஏன் உன் வீட்டுக்கு வந்தா? இரண்டு பேரும் பேசாம என்ன பண்ணீங்க? மச்சி, இந்த டகால்டி வேலையெல்லாம் என்கிட்ட காட்டாத"
நான் :"மச்சி, இந்த மாதிரி நீ பேசிக்கிட்டே இருந்தேன்னு வச்சிக்கோ, நான் பிரியாவுக்கு போன் பண்ணி உன்கிட்ட கொடுத்திடுவேன். கொஞ்சம் நேரம் மூடிட்டு, நான் சொல்றத கேளு"
குமார் : "உன்கூட தண்ணி அடிக்க வந்தேன் பாரு, என்ன சொல்லணும்"
நான் : "கோச்சிக்காத மச்சி.. எங்க விட்டேன்.. ஆங்.. ஆனா என் மேல அவளுக்கு அப்படி ஒரு இன்ட்ரஸ்ட். நான் சும்மா ஹரிணின்னு ஒரு பொண்ண லவ் பண்றேன்னு தான் சொன்னேன். அதே பேர்ல என் பழைய ஆஃபிஸ்ல இருந்து ஒருத்தி வருவான்னு நான் கொஞ்சம் கூட நெனச்சி பார்க்கல. ஆணா பாரு மச்சி, பிரியா என்ன டென்ஷன் ஆணா தெரியுமா?"
குமார் :""
நான் :"எவ்ளோ டென்ஷன் ஆனான்னு கேளு மச்சி?"
குமார் : "ஏன்டா கேட்டாலும் திட்டுற, கேக்கலைன்னாலும் திட்டுற. ஒரு கோடருக்கு ஆசப்பட்டு குடிக்க வந்தது ஒரு குத்தமா?"
நான் : "சரி நானே சொல்றேன். ஹரிணியும் சும்மா இல்லாம, என்னோட பழைய ஆஃபிஸ் வீர தீர செயல்களை பற்றி பெருமையா பேசிட்டு இருந்தா. நானும் முதல்ல சும்மா ஆர்வம் இல்லாம கேட்டுட்டு இருந்தாலும், ஒரு கட்டத்துல நானும் அவ கூட பேச ஆரம்பிச்சேன்"
குமார்: "ஒரு நிமிஷம், அது என்ன செயல்கள்?"
நான் : "வீர தீர செயல்கள் மச்சி. அதான்டா கிரிக்கெட் மேட்ச், ஸாங் பாடினது, தண்ணி அடிச்சது"
குமார் :"த்தூ, இதெல்லாம் சொல்றதுக்கு உனக்கே வெட்கமா இல்ல, சரி மேல சொல்லு. பிரியா ஹரிணிக்கு இரண்டு அறை விட்டாளா இல்ல உனக்கா?"
நான் : "ஹெய் ஹேய், நான் யாரு? என்ன போய் அடிப்பாளா? இப்படி நாங்க பேசிக்கிட்டு இருக்கும்போது அவ ரியாக்சனை பார்க்கணுமே, அப்படியே டென்ஷன்ல செமத்தியா கடுப்பாயிட்டா. அதுக்கெல்லாம் என்ன காரணம்? லவ் மச்சி லவ். அப்ப கத்துனா பாரு ஒரு கத்து, "எக்ஸ்கியூஸ் மீ" அப்படின்னு?"
"'இவன் தான் நான் கட்டிக்க போறவன்'னு கத்தி சொன்னா. அப்ப எல்லாரோட ரியாக்சன் பார்க்கணுமே. ச்சான்ஸே இல்ல. அந்த லவ், வெகுளித்தனத்துல தான் என்னை என்னமோ பண்ணிருச்சி மச்சி. இனிமே அவ ரவுடி என்ன? பேய் பிசாசா இருந்தாக் கூட நான் அவளைக் கல்யாணம் பண்ணிப்பேன்"
குமார்: "என்னக் கொடுமை மாமா இதெல்லாம்? பிரியாவ இப்படி பண்ணா? ஆச்சர்யமா இருக்கு? பளார் பளார்ன்னு உனக்கு ரெண்டு அறை விட்டுருப்பான்னு நெனச்சேன், ஜஸ்ட் மிஸ்"
நான் : "இதென்ன ஆச்சர்யம். இதுக்கு மேல இன்னொன்னு சொன்னேன்னு வச்சிக்கோ, நீ அப்படியே ஷா...க் ஆகிடுவே. அடிச்சதெல்லாம் இறங்கிடும்"
குமார் : "இப்பவே பாதி இறங்கிடுச்சி. சொல்லு. வேணாம்ன்னு சொன்னா விடவா போற?"
நான் : "நாங்க ரெண்டு பேரும் ஒண்ணா, ஒரே இடத்துக்கு அடுத்தவாரம் ஆன்சைட் போறோமே?"
தம்மை பற்ற வாயில் எடுத்து வைத்தவன், நான் சொன்னதைக் கேட்டு அதிர்ச்சியில் கீழே போட்டுவிட்டு ஒரு நிமிடம் என்னையே வெறித்துப் பார்த்தான்.
குமார் :"என்ன மாமா சொல்ற? கல்யாணத்துக்கு முன்னாடியேவா?"
நான் : “கண் அடித்தபடியே” எஸ் மச்சி.
குமார் : சத்தமாக "சரி, கம்பெனி பாலிஸில ரெண்டு பேரா போயிட்டு, திரும்ப வரையில் தன் வாய்க்குள்ளே "மூணு பேரா வர்றத்துக்கு இடம் இருக்குமா?"
நான் : "வாட்?"
குமார் : "ஆமா நீ ஒண்ணும் தெரியாத பாப்பா பாரு, வாயில விரல வச்சாக் கூட கடிக்க தெரியாது. இப்படியா கல்யாணம் ஆகாத ஒருத்தன கன்னாபின்னான்னு டென்ஷன் ஆக்குறது?"
நான் : "விடு மச்சி கவலைப்படாத. நாம நாளைக்கும் தண்ணி அடிக்கலாம்?"
குமார் : "அடப் போங்கடா.. நீங்களும் உங்க லவ்வும். உன்கூட தண்ணி அடிக்கிறதுக்கு நான் குப்புற படுத்து சிவனேன்னு தூங்குவேன்"
குமார் தலை தெறிக்க தன் வீட்டுக்கு ஓடினான்.
"வெண்ணிலவே வெண்ணிலவே
விண்ணைத் தாண்டி வருவாயா?
விளையாட ஜோடி தேவை"
என டைமிங்காக மொபைல் எப்.எம் பாடிக் கொண்டிருக்க நான் வீடு வந்து சேர்ந்தேன்.
அடுத்த பகுதி "உன்னுடன் பழகும் வரை - அம்மு " தொடரும்.........
-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
"தலை போகும் நொடியில் கூட விடா முயற்சி செய்யுங்கள்
உங்கள்... இறுதி மூச்சு வரை.... எதிரிகள் தளரும் வரை...!"
கருத்துரையிடுக Facebook Disqus