"அவள் கண்கள் பேசிய வார்த்தை புரிந்த எனக்கு….
அவள் உதடு பேசிய வார்த்தை புரியவில்லை……
படுபாவி மூச்சு விடாமல் ஆங்கிலம் பேசுறாள்…."
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------
இதற்கு முந்தைய பதிவு "டிங்கு டைரி - 36 "ஆஃபிஸிற்கு புதிதாக வந்த நச்ஃபிகர்!"
மீட்டிங் முடிந்து எல்லாரும் அவரவர் இடத்திற்குப் போனார்கள். நான், பிரியாவை எட்டிப் பார்த்தேன். அவள் மானிடர் முன் தலையை குனிந்து உட்கார்ந்திருந்தாள். இந்த நேரத்தில் அவளைப் போய் பார்த்துப் பேசுவது, சாத்தானுடன் நள்ளிரவில் தோளில் கைபோட்டுப் பேசுவதற்கு சமம் என முடிவெடுத்ததால், என் இடத்திலேயே உட்கார்ந்தேன்.
"என்ன பண்ணலாம்? இவளைக் கன்வின்ஸ் பண்ணலாமா இல்லை இது தான் கேப்புன்னு இவகிட்ட இருந்து எஸ்கேப் ஆகிடலாமா? ஆனாலும் நான் சொன்ன மாதிரியே ஒரு ஃபிகர் அதே பேர்ல வருவான்னு கனவுல கூட திங்க் பண்ணது இல்ல. இவ பிரியாவ விட சூப்பரா, செமத்தியா வேற இருக்கா" இதே போல் ஏகப்பட்ட விஷயங்கள் மண்டையில் ஓடினாலும், கடைசியில் 'ஜீன்ஸ் போட்ட மஹாலெட்சுமி' தான் ஜெயித்தாள். (இன்னைக்கு ஜீன்ஸ் இல்ல. சுடிதார்)
ஆஃபிஸ் கம்யூனிகேட்டரில் பிரியாவிற்கு பிங் பண்ணினேன்.
பிரியா திரையில் :"Hi Priya"
முழுதாக இரண்டு நிமிடம் கரைந்த பின், அவளிடமிருந்து
என் திரையில் : "Go to HELL"
"உன்கூட பேசுறப்பல்லாம் நான் அங்க இருந்து தான் பேசுற மாதிரி இருக்கு" மறுபடியும் மைண்ட் வாய்ஸ். இருந்தாலும் அவள் டென்ஷனில் இருப்பதால், கூல் பண்ண ட்ரை பண்ணினான்.
பிரியா திரையில் : "Shall v go for Lunch?"
என் திரையில் : "Go to HELL"
"அங்க போய் என்னத்த சாப்பிடுறது?" என நினைத்துக் கொண்டு, அவளை கூல்டவுன் பண்ணும்குற முயற்சியை சந்தோஷமாக விட்டுவிட்டேன்.
மணி வேற மதியம் 1:30 தாண்டி ஓடிக் கொண்டிருந்தது. பசி வயிற்றைக் கிள்ளியது.
சாப்பிட போகலாமா?" என ஸ்வீட் வாய்ஸ் என்னைக் கூப்பிட்டது
நான் : "ஓ.. ஷ்யூர்" என மின்னல்வேகத்தில் பதில் சொல்லிவிட்டு யோசித்தேன் "இது பிரியா வாய்ஸ் இல்லையே?" என்று சொல்லிக் கொண்டே எழுந்து பார்த்தால் "ஹ...ரி....ணி"
அப்படியே ஷாக்காகி நின்றிருந்தேன். நல்லவேளை, பிரியா இடத்தில் இல்லை. அப்படியே சைலண்டாக என் இடத்தில் உட்கார்ந்தேன். "இவ வந்த முதல் நாளே, பேர் சொல்லி கூப்பிடுற அளவுக்கு வந்துட்டா?" என மனதிற்குள் நினைத்துக் கொண்டேன். அப்போது தான் பின்னால் ஒரு உருவத்தின் நிழலைக் கவனித்தேன். சேரில் உட்கார்ந்து கொண்டே திரும்பிப் பார்த்தால், பிரியா முறைத்து நின்று கொண்டிருந்தாள்.
("ஆஹா, ஒரு பிசாசிடம் இருந்து தப்பிச்சு, கொள்ளிவாய் பிசாசிடம் மாட்டிக்கொண்டோமே?")
எனக்கு எப்படி என்ன ரியாக்ட் பண்ணுவதென்றே தெரியவில்லை. திருடிவிட்டு அப்பாவிடம் மாட்டிய குழந்தை மாதிரி கன்னாபின்னாவென்று முழித்தேன். சிரிக்க ட்ரை பண்ணினேன். அடுத்த செகண்டே மாறி உம்மென்று வைத்துக் கொண்டேன். சீலிங்கை வெறித்துப் பார்த்தேன். அப்பவும் பிரியா என்னை வெறித்த கண்களுடன், நேராகப் பார்த்துக் கொண்டிருந்தாள்.
நாங்கள் இருவரும் பேசிக் கொள்ளவில்லை. அப்போது ஹரிணி, என் இடத்திற்கு வந்தாள்.
"பிசாசும், கொள்ளிவாய் பிசாசும் ஒரே இடத்தில்"
"இன்னும் என்ன பண்ணிக்கிட்டு இருக்கீங்க. வாங்க நாம சாப்பிட போகலாம்" என்றாள் ஹரிணி.
நெளிந்தேன். "ஓ.கே. பிரியா, வா சாப்பிட போகலாம்" என்று சொல்லிவிட்டு நான் முன்னால் நகர்ந்தேன். பின்னாலே பிரியா. அவள் பின் ஹரிணி வந்தால்.
அடுத்த பகுதி டிங்கு டைரி 38 "பொறுமையிழந்த பிரியா ! " அடுத்த பகுதி தொடரும்.........
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
"உங்கள் வீதியில் மரங்கள்
அசைய வில்லை என்றால்
அங்கே
எங்கோ ஒரு காதல்
புழுங்கிக் கொண்டிருக்கிறது
என்று அர்த்தம்"