"என் கற்பனையின் முழு உருவம் என்னவனின் நினைவுகள்..,
அவன் நினைவின்றி நானில்லை, கற்பனையும் உயிர் பெறும் அவன் அன்பிற்கு முன்..
அவனது மனம் நிலவின் நிறத்தை ஒட்டியது,,
அவனுக்குள் இருக்கும் நான் தள்ளாடுகிறேன்அவனது அன்பில் மயங்கி.. என்னவனே"
------------------------------------------------------------------------------------------------------------------------------------------
இதற்கு முந்தைய பதிவு இதற்கு முந்தைய பதிவு டிங்கு டைரி - 42 "புலம்பல் வாக்குமூலம்!"அடுத்த நாள், வியாழக்கிழமை. சீக்கிரம் ஆஃபிஸில் இருந்து வந்த எனக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. பைக்க எடுத்துக் கொண்டு, நேராக குமார் ரூமுக்கு வந்தேன்.
குமார் : "என்ன நீயா?"
செயற்கையாக ஷாக்காகி போனது போல் நடித்தான். வீட்டை விட்டு கொஞ்சம் வெளியே வந்து நான் தனியாகத் தான் வந்தேனா என உறுதி செய்துகொண்டான்.
நான் : "நானே தான். ரொம்ப போர் அடிக்குது. பீச் போகலாமா?"
குமார் ; "வந்துட்ட. வேற வழி?"
புலம்பிக் கொண்டே இருவரும் பீச் கிளம்பினோம்.
பீச்சில் வண்டியை பார்க் செய்துவிட்டு, கடலின் அலை அருகே நடந்து சென்று கொண்டிருந்தபோது
குமார் :"தம் அடிக்கிறீயா?"
நான் : "இல்ல. எனக்கு வேண்டாம்"
குமார் : "மேரேஜ் ஃபிக்ஸ் ஆனதுல இருந்து நீயும் ஒரு ரேஞ்சா தான் இருக்க. எனக்கு நேரம் வரும்டா. பிரியா டார்ச்சர் தாங்க முடியாம தண்ணி அடிக்க நீ என்ன கூப்பிடுவேல்ல, அப்ப வச்சிக்குறேன்"
நான் : "மச்சி, நீ இங்கேயே இரு. நான் போய் சோன் பப்படி, கார்ன் ஏதாவது கொறிக்கிறதுக்கு வாங்கிட்டு வரேன்"
வறுத்த கடலை வாங்கிக் கொண்டிருந்தேன். திரும்பும்போது, பார்க்கிங் ஏரியாவில் ஒருவன் உள்ளே வண்டியைத் திருப்பிக் கொண்டிருந்த போது, அதை கவனிக்காமல் நான் குறுக்கே வந்ததும், சடன் ப்ரேக் அடித்தான்.
"டேய்.." என அவன் அசிங்கமாக திட்ட ஆரம்பிக்க போகும்போது நடுவே இடைவெளிவிட்டு, ஹெல்மெட் கண்ணாடியை தூக்கிவிட்டுக் கொண்டு, "பிரபு ... " என முடித்தான்.
எனக்கு யார் எனத் தெரியவில்லை. ஆனால் அவன் பின்னால் ஒரு ஃபிகர் இருந்தது.
தினேஷ் : "டேய், நான் தான் தினேஷ்" என அவன் சொல்வதற்கும், ஹெல்மெட்டை கழற்றிய நேரத்திற்கும் சரியாக இருந்தது.
எனக்கு ஆச்சர்யம். நான்கு வருட பொறியியல் கல்லூரி வாழ்க்கையில் கிடைத்த நிறைய நண்பர்களில் ஒருவன். கல்லூரி முடிந்து நான்கு வருடத்திற்கு அப்புறம் இப்போது தான் பார்க்கின்றேன்.
நான் : "தினேஷ், எப்படி இருக்க?"
தினேஷ் :"ஃபைன்டா. நீ எப்படி இங்க? நீ யு.எஸ் போயிட்டதா கேள்விப்பட்டேன்"
நான் : "யெஸ், ஆனால் நான் மூணு மாதம் முன்னாடியே வந்துட்டேன். இங்க தான் என் ஃப்ரெண்ட் ரூம் இருக்கு. அப்படியே சும்மா வாக் வந்தோம். உனக்கு கல்யாணம்ன்னு கேள்விப்பட்டேன்"
தினேஷ் : "ஆமான்டா. இவ தான்" என பின்னால் இருந்தவளுக்கு இன்ட்ரோ கொடுத்தான். மொபைல் நம்பர் மாற்றிக் கொண்டோம். "கண்டிப்பா கல்யாணத்துக்கு வந்திடணும்."
"சரி டா, நான் கண்டிப்பா வர்றேன் " என நான் சொல்லிக் கொண்டிருந்தபோதே தினேஷ் என் கண்களை ஒரு வித தயக்கத்துடன் பார்த்துக் கொண்டிருந்தான்.
தினேஷ் : திவ்யா எப்படிடா இருக்கா?"
மொபைலில் தினேஷ் நம்பரை ஸ்டோர் பண்ணிக் கொண்டிருந்தேன், சரியாக கவனிக்கவில்லை,
நான் : "எந்த திவ்யா?"
தினேஷ் : "திவ்யாடா, திவ்யா ப்ரியதர்ஷினி. மறந்துட்டீயா?"
லேசாக அதிர்ச்சியானேன். என் மனதினுள் பல பிரேம்கள் ஓடின, "கோயம்பத்தூர், பெர்க்ஸ் ஸ்கூல், ஸ்கூல் மைதானம், கைகோர்த்த நிமிடம், கேன்டீன், ப்ராக்டிகல் லேப், தியேட்டர், கோவில்" எல்லாம் ப்ளாஷ் அடித்துக் கொண்டிருந்தது.
என் தோள்களைப் பிடித்து லைட்டாக உலுக்கினான் தினேஷ்.
நான் : "இல்லடா. தெரியல. ரொம்ப நாளா கான்டாக்ட்ல இல்ல"
தினேஷ் : "ம்ம்.. ரொம்ப நாள் முன்னாடி, எனக்கு மெயில் அனுப்பி இருந்தா. லண்டன்ல ஹையர் ஸடடீஸ் பண்ணிக்கிட்டு இருக்கிறதா சொல்லி இருந்தாள். உன்ன பத்தியும் கேட்டிருந்தா. உன் கார்ப்பரேட் மெயில் ஐடியும் அனுப்பி இருந்தேன். நீங்க அதுக்கப்புறம் கான்டாக்ட்ல தான் இருப்பீங்கன்னு நெனச்சேன். சாரி டா "
நான் ;"பரவாஇல்ல"
தினேஷ் : "ஓ.கேடா. நாங்க கெளம்புறோம்"
குமாருடன் கொஞ்ச நேரம் பீச்சில் இருந்துவிட்டு, நேராக வீட்டுக்கு வந்துவிட்டேன். அவசரம் அவசரமாக என்னுடைய பெரிய சூட்கேஸைத் திறந்தேன். எல்லாத் துணிகளையும் வெளியில் எடுத்து அடியில் இருந்த ஆட்டோகிராஃப் நோட்டை எடுத்தேன்.
திவ்யா எழுதிக் கொடுத்த பக்கத்திற்கு வந்தான்.
"லைஃபில் எதையும் மிஸ் பண்ணக்கூடாது என நினைத்ததில்லை, உன்னுடன் பழகும் வரை!"
-அம்மு
அந்த பக்கத்தின் நடுவே முகத்தை வைத்து முகர்ந்தேன். பழைய நாட்கள் கண்முன்னே ஓடிக் கொண்டிருந்தது, என் கண்களில் இரண்டு துளி கண்ணீர்.
அடுத்த பகுதி "டிங்கு டைரி - 44 "பிரியா கொடுத்த ஷாக்?! தொடரும்.........
-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
1.முன்னால் செல்லும் 3 ஓநாய்கள் கூட்டத்தின் மிக வயதானவை வழிகாட்டலுக்காக.
2.அடுத்ததாக இருக்கும் 5 ஓநாய்கள் கூட்டத்தின் மிக வலிமையான போராளிகள்.
3.தனது குழு முழுக்க முன் செல்லவிட்டு கடைசியாக வருவதே கூட்டத்தின் தலைவன்.
தலைமை பண்பு,நிர்வாகம் என்பதை நாம் கற்று கொண்டது இயற்கையிடம்.
கருத்துரையிடுக Facebook Disqus