0

"இந்த அளவிற்கு நேசிக்க நம்மிடம் என்ன இருக்கிறது' என்று யோசிக்க வைக்கும் ஒருவரை தம் வாழ்வில் கடக்காதவர்கள் அனைவருமே துரதிர்ஷ்ட்டசாலிகளே..."

-------------------------------------------------------------------------------------------------------------------

தற்கு முந்தைய பதிவு இதற்கு முந்தைய பதிவு இதற்கு முந்தைய பதிவு இதற்கு முந்தைய பதிவு டிங்கு டைரி - 40 "பிரச்சனையில் அஸ்வின் ?

திவ்யாவின் நினைவுகளில், எப்போது நான் தூங்கினேன் என்று தெரியவில்லை. காலை மணி 6.30 இருக்கும். காலிங் பெல் அடித்து அடித்துக் கொண்டிருந்தது. மூன்றாவது தடவை அடிக்கும்போது எழுந்துவிட்டேன். நேற்று இரவின் நினைவுகளில் இருந்து இன்னும் வராமல் ஒரு வேளை திவ்யாவாக இருக்குமோ என்ற பயத்துடன் கதவைத் திறந்தேன்.

நினைத்ததை விட பயந்தேன். பிரியா நின்றிருந்தாள் (நல்லவேளையா பூரிக்கட்டையுடன் வரவில்லை :). தழையை தழையை மஞ்சள் நிற பட்டுப் புடவையில். அதில் ஆங்காங்கே பெரிய பெரிய மல்லிகைப் பூ டிசைனுடன் காப்பி கலரில் பார்டர் வைக்கப்பட்டு இருந்தது. ஒரு கணம் பிரியாவின் அழகில் மயங்கிவிட்டேன் என்பது உண்மை, "அழகுனா அழகு செம்ம அழகு". திடீரென ஆறாவது அறிவு அலர்ட்டாக, 

நான்  : "ஹேய்....., நீ ஏன் இங்க நிக்குற‌, அதுவும் இந்த நேரத்துல?  இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்குற" வாயில் இருந்த வழிந்த ஜொள்ளை துடைத்துக் கொண்டே சொன்னேன்.

பிரியா :"தேங்க்ஸ், இன்னிக்கு என் பிறந்தநாள்! இந்தா ஸ்வீட்ஸ் எடுத்துக் கோ?" 

A2B ஸ்வீட் பாக்ஸை நீட்டினாள்.

நான்  : உடனே கையை நீட்டி, "ஓ.. இனிய பிறந்தநாள் வாஆஆஆஆஆ......" 

திடீரென கையை உள்ளே இழுத்துக் கொண்டேன். அப்போது தான் கவனித்தேன். ஷர்ட், டீ ஷர்ட் அட்லீஸ்ட் ஒரு பனியன் கூட இல்லை. ஷார்ட்ஸ் மட்டுமே உடலில். ரொம்பவே கூச்சமானது. உள்ளே ஓடி ஒரு டவலை எடுத்து மேலே போர்த்திக் கொண்டு, மீண்டும் வாழ்த்தினேன்.

பிரியா : "தேங்க்ஸ்" என பதிலுக்கு கையை நீட்டினாள்.

அவளின் உள்ளங்கை, சில்லென ஐஸ்கட்டி போல இருந்தது. கொஞ்சம் என்ன நெறையவே பஞ்சுமிட்டாய் போல மென்மையாகவும் இருந்தது. எனக்கு கை உதறியது. அப்போது தான் நினைவு வந்தது, "தூங்கி எழுந்தவுடன் முகம் கூட கழுவாமல் பேசிக் கொண்டிருக்கிறேன் என்று. இருந்தாலும் சமாளித்தேன்,

நான்  : "அப்புறம்?"

பிரியா :"என்ன அப்புறம் ? கிளம்பு, நாம கோவிலுக்கு போறோம்"

நான்  : "கோவிலுக்கா? நான் இப்ப தான் எந்திரிச்சேன். நான் கெளம்பணும். அட்லீஸ்ட் 15 மினிட்ஸாவது ஆகும்? என் போன் நம்பர் தான் உன்கிட்ட இருகுல்ல. ஒரு கால் பண்ணிட்டு வந்திருக்கலாம்ல"

பிரியா : "கொஞ்சம் ஷாக் கொடுக்கலாமேன்னு தான். சரி பரவால. அதுவரைக்கும் நான் வெயிட் பண்றேன்"

நான்  : "எங்க?" லைட்டாக ஜெர்க் ஆனேன்

பிரியா : "மாடியில் இருக்க மாமி வீட்ல?

நான்  : "ஓ.கே. நான் கெளம்பிட்டு கால் பண்றேன்"

மாமி வீட்டுக்குப் போய்விட்டாள். நான் கிளம்புவதற்கு 20 நிமிடம் மேல் ஆனது. அவளும் கீழே வந்தாள். அவள் ட்ரெஸ்ஸுக்கு மேட்சிங்காக, ஸான்டல் கலர் ஓட்டோ ஷர்ட்டை எடுத்து மாட்டிக் கொண்டான்.

நான் : "இன்னைக்கு ஏன் புல்லட்டில் வரல?" என்ற கேள்வியை தொண்டை வரைக் கொண்டு வந்து, அவளின் அம்சமான புடவை லுக்கை பார்த்துவிட்டு, "உன் வண்டியை என்ன ப‌ண்றது?" என நான் கேட்க. 

பிரியா : "சாய்ந்திரம் வந்து எடுத்துக்கறேன்"

நான்  : " சாய்ந்திரமா ?"

பிரியா : "கோவிலுக்கு போயிட்டு, நேரா நாம ஆஃபிஸ் போயிடலாம். எனக்கு 9.30க்கு ஒரு க்ளையண்ட் கால் இருக்கு."

நான்  : "எல்லாம் ப்ளான் பண்ணித் தான் வந்திருக்கியா? ம்ம் நடத்து நடத்து?" என மௌனமாக பேசிக் கொண்டேன். "ஓ.கே. எந்த கோவில்?"

பிரியா : "மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில்"

நான் : "கிண்டியில் இருந்து மயிலாப்பூர்க்கா...? போறதுக்கே அரைமணி நேரத்திற்கு  மேல ஆகும்? வடபழனி முருகன் கோவிலுக்..."

பிரியா : "இல்ல. இப்ப மணி 7.15 தான ஆகுது. ட்ராபிக் எல்லாம் இருக்காது. 20 மினிட்ஸ்ல போயிடலாம்"

"இப்பவே நான் சொல்றத கேட்கமாட்டேங்குறா. இன்னும் எவ்வளவு இருக்கோ?" மறுபடியும் மைண்ட் வாய்ஸ்.

பக்கத்திலேயே சரவணபவனில் டிஃபன் முடித்துவிட்டு, திரும்ப‌வும் நாங்க ஆஃபிஸ் வ‌ந்த‌போது ம‌ணி 9.15.

ம‌ணி 11 இருக்கும். பாப்க‌ட், சிறுவாணி, ம‌துரை எல்லாம் சுற்றி வ‌ளைத்துக் கொண்ட‌ன‌ர். "பிரபு, ட்ரீட்?" "எங்க‌ளுக்கு ட்ரீட் வேணும்?" "இப்ப‌வே ல‌ஞ்ச் போறோம்?" என கூச்சல் அதிகமாக. 

நான்  : "வெயிட், வெயிட். எதுக்கு இப்ப டிரீட்?"

கோரஸ்சாக : "இன்னைக்கு பிரியாவுக்கு ப‌ர்தேடே. ஸோ, ப‌ர்த்டே ட்ரீட்?"

நான்  : "ரைட். அவ‌ளுக்கு ப‌ர்த்டேன்னா, நீங்க‌ அவ‌கிட்ட‌ தானே கேட்க‌ணும்? எதுக்கு என்கிட்ட‌ கேட்குறீங்க?"

ஓரக்கண்ணால் பிரியாவை தேடினேன். அங்கே யாருடனோ பேசிக் கொண்டிருந்தாள்.

பாப்க‌ட் : "பிரியாகிட்ட‌ கேட்டா, கேன்டீன்ல‌ ஒரு ஜூஸ் கூட‌ வாங்கித் த‌ர‌மாட்டா. 

சிறுவாணி : போன மாசம் ப்ரோமோஷன் வாங்குனத்துக்கு, பீட்ஸா கூட வாங்கித் தரல. 

ம‌துரை : உன் வுட் பீ தான‌. நீ தான் கொடுக்க‌ணும்?"

நான்  : "அப்ப‌ என் ப‌ர்த்டேன்னா, அவ‌கிட்ட‌ கேட்பீங்க‌ளா?"

கோரஸ்சாக : "நோ, நோ. அப்ப‌வும் நீ தான் த‌ர‌ணும்" 

நான்  : "இது எந்த ஊர் நியாயம்?"

அவ‌ஸ்தையாய் நெளிந்தேன். பிரியா நேராக‌ என் இட‌த்திற்கு வ‌ந்தாள்.

பிரியா : "ஓ.கே கேர்ள்ஸ். எல்லாரும் ல‌ஞ்ச் அஞ்ச‌ப்ப‌ர் போக‌லாம்"

கோரஸ்சாக :"!!!!!!!!!!!!!!"

அவ‌ர்க‌ளால் ந‌ம்ப‌முடிய‌வில்லை. ஏன் .... என்னாலையும் தான்.

அடுத்த பகுதி "டிங்கு டைரி - 45 "பேருந்து பயணம்!தொடரும்.........  



முந்தைய டைரிகள் [1] [2] [3] [4] [5] [6] [7] [8] [9] [10] [11] [12] [13] [14] [15] [16] [17] [18] [19] [20] [21] [22] [23] [24] [25] [26] [27] [28] [29] [30] [31] [32] [33] [34] [35] [36] [37] [38] [39] [40] [41] [42]


-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------


"பெண் புரிந்துகொள்ள முடியாதவள் என்றெல்லாம் இல்லை தன்னைத்தானே சிக்கலாக்கிக்கொள்பவள்.."

கருத்துரையிடுக Disqus

 
Top