0

"நம்மை நாமே நேசிக்க தொடங்கி விட்டால் நரகமாய் நம்மை கடக்கும் நொடிகள் யாவும் மகிழ்ச்சியாய் மாறிவிடும்"

-----------------------------------------------------------------------------------------------------------------
இதற்கு முந்தைய பதிவு இதற்கு முந்தைய பதிவு 

ட்ரீட் கிளம்ப வேண்டிய நேரம் நெருங்கியது. அம்மாவிடம் இருந்து கால்.

அம்மா : "டேய், இந்த வாரம் ஊருக்கு வர்றீயா?"


நான்  : "இல்லமா. நான் வரல"

அம்மா : "ஏன்டா? அதான் மூணு நாள் லீவ் இருக்குல்ல?"

நான் : "எனக்கு இங்க ஆயிரம் வேல இருக்கும்மா. அதெல்லாம் இப்ப சொல்லிக்கிட்டு இருக்க முடியாது. நைட் ரூம்லர்ந்து கூப்பிடுறேன். வைக்கிறேன். பை"
Image result for lady body spray
அஞ்சப்பர் ஹோட்டல். 15 பேர் சூழ ஒரே வேடிக்கையாய் இருந்தது. என் ப‌க்க‌த்தில் பிரியா. இந்த‌ ம‌திய‌ வேளையிலும், ப்ளூ லேடி, அதன் வாச‌னையில் ஏ.சி அறையில் எனக்கு கிரக்கத்துடன் விய‌ர்த்த‌து. 

பிரியா : "டேட் க‌ன்ஃபார்ம் ஆயிடுச்சி தெரியுமா?". நேர‌டியாக‌ பேச‌வில்லை. கிசுகிசுத்தாள்.

நான்  : "என்ன‌ டேட்?  மேரேஜ் டேட்டா? கொஞ்சம் சத்தமாகவே கேட்டேன்.

பிரியா ; "மெதுவா பேசு..... ஆன்சைட் ட்ராவ‌ல் டேட்..... க‌ம்மிங் ச‌ன்டே தான்"

நான்  : "ஓ.. ஐ ஸீ" விய‌ர்வையை துடைத்தபடியே. "இவ‌ வேற‌.. காதுக்குள்ள ரகசியம் பேசுற மாதிரி பேசுறாளே? இது வேற‌ என்ன‌ன்ன‌மோ ப‌ண்ணுது?" மைண்ட் வாய்ஸ்.

பிரியா : "இன்னிக்கு ஊருக்குப் போக‌லாமா? ஆன்சைட் போற‌துக்கு முன்னாடி வீட்டில்‌ இரண்டு நாள் இருந்துட்டு வ‌ர‌லாம்"

நான்  ; "ஓ, எஸ். ப‌ட் டிக்கெட்ஸ்?" 

கொஞ்ச‌ நேர‌ம் முன்னாடி அம்மாவிட‌ம் இதே விஷ‌ய‌த்திற்காக‌ க‌த்திய‌து கொஞ்ச‌ம் கூட‌ நினைவில் இல்லை. 
Related image
பிரியா : "நான் நேத்தே ந‌ம்ம‌ ரெண்டு பேருக்கும் சேர்த்து புக் ப‌ண்ணிட்டேன். பர்வீன் ட்ராவல்ஸ். ஸோ, நோ ப்ராப்ள‌ம்!" க‌ண்ண‌டித்தாள்.

இர‌வு 9.30. ப‌ர்வீன் ட்ராவ‌ல்ஸ், திண்டிவ‌ன‌ம் தாண்டி சீறிக் கொண்டிருந்த‌து.என் ப‌க்க‌த்தில் பிரியா. ப‌த்து ம‌ணிநேர‌த்திற்கும் மேலாக‌ அவ‌ளுட‌ன் முத‌ன்முறையாக‌ ஒன்றாக‌ இருக்க‌ போகிறோம் என்ற‌ எண்ண‌மே எனக்குக் குதுகலமாக இருந்த‌து. காதலி or க‌ல்யாண‌ம் ப‌ண்ணிக்க‌ போகிறவள் கூட‌ இர‌வு நேர‌த்தில் இந்த‌ மாதிரியான‌ ப‌ஸ் ப‌ய‌ண‌ம் சொர்க்க‌ம்தான். இதெல்லாம் ட்ரெயினில் ஏ/சி கோச்சில் த‌னித‌னி பெர்த்தில் ப‌ய‌ண‌ம் செய்தாலும் கிடைக்காது. அந்த‌ அரைகுறை வெளிச்ச‌மும், ஜ‌ன்ன‌ல் வ‌ழி வ‌ரும் குளிர்காற்றுட‌ன், இரண்டு பேரும் ம‌ட்டும் காதுக‌ளுக்குள் பேசி கொள்வ‌து சுக‌மான‌ விஷ‌ய‌ம்.

நான் : "உன்ன‌ ப‌த்தி ஆஃபிஸ்ல‌ சொன்னாலே, எல்லாரும் டெர‌ர் ஆகுறாங்க‌ளே. ஏன்?" 

பிரியா : ந‌ன்றாக‌ வாய்விட்டு சிரித்துக் கொண்டு, "என்ன‌ சொல்றாங்க‌?"

நான்  : அரை நிமிட‌ம் யோசித்துவிட்டு, "ம்ம்.. அந்த‌ நியூஇய‌ர் பார்ட்டில‌ எதுக்கு ஒருத்த‌னை அடிச்ச‌?"

பிரியா : "அதுவா.. த‌ண்ணிய‌டிக்கிற‌ நாய், ஒழுங்கா த‌ண்ணி ம‌ட்டும் அடிச்சிட்டு போனா எதுக்கு அடிக்கிறேன். என் கூட‌ இருந்த‌ ஜூனிய‌ர் பொண்ணு துப்ப‌ட்டாவ பிடிச்சி இழுத்து க‌லாட்டா பண்ணான். பாவ‌ம், அவ அழுக‌ ஆர‌ம்பிச்சிட்டா. வ‌ந்த‌து கோவ‌ம், ப‌ளார்ன்னு அறைவிட்டேன்"

நான் : அவ‌ள் முக‌த்தை பார்க்காம‌ல், "த‌ண்ணிய‌டிக்கிற‌வ‌ங்க‌ள‌ பொதுவா நாய்ன்னு சொல்ல‌க்கூடாது. அவ‌ங்க‌ளுக்கு என்ன‌ பிர‌ச்சினையோ?"

கொஞ்சம் நேரம் பதிலே வராமல் போகவே, அவளைத் திரும்பி பார்த்தேன்.

பிரியா : முகத்தைக் கிட்ட கொண்டு வந்து, "த்தூ" எனச் செல்லமாக கடித்தாள். "அங்க இருந்த எல்லோருக்கும் அவனை அடிச்சது மட்டும் தான் தெரியும். அதுக்கப்பறம் எல்லாரும் என்ன பார்த்து பயப்படுற மாதிரி நடிக்க ஆரம்பிச்சிட்டாங்க. அதுவும் எனக்கு பிடிச்சிருந்தது, அப்படியே விட்டுட்டேன்"

நான் : "அதான் ஏன்? எல்லாரையும் போல‌வே ஜாலிய, சோஷிய‌லா ப‌ழ‌க‌ வேண்டிய‌து தானே?

பிரியா: "என‌க்கு அதெல்லாம் பிடிக்காது. ஆபிஸ்ல‌ தேவையில்லாம‌ எவ‌ன்கிட்ட‌யும் சிரிக்குற‌து பிடிக்காது. எதுக்கெடுத்தாலும் வெட்க‌ப்ப‌டுற‌தும் பிடிக்காது. கொஞ்சம் சிரிச்சி, ஜாலிய பழகுனாலே, எல்லாரும் அட்வான்டேஜ் எடுத்துக்கிறதும் செம கடுப்பு. அதனால, நான் உண்டு என் வேலை உண்டுன்னு இருப்பேன். இது ஒண்ணும் த‌ப்பு இல்லையே?"

நான்  : "ம்ம்.. குட். ஆமா ஹ‌ரிணி எங்க‌ போயிட்டா? ரெண்டு நாளா ஆளைப் பார்க்க‌வே முடிய‌ல‌?"

அதுவ‌ரை நார்ம‌லாக‌ பேசிக் கொண்டிருந்த‌வ‌ள், முக‌ம் டென்ஷ‌ன் ஆன‌து,

பிரியா : "அன்னைக்கு நான் போட்ட‌ போடுல‌, பெங்க‌ளூர்க்கு ட்ரான்ஸ்ஃப‌ர் வாங்கிட்டு போயிட்டா. இனிமே அவ‌ இந்த‌ ப‌க்க‌ம் வ‌ர‌ மாட்டா. அது ச‌ரி, ஸார் பெரிய‌ ஆள் போல‌.. நெறைய்ய‌ கேர்ள் ஃப்ர‌ண்ட்ஸ் இருக்காங்க‌ளா?"

நான் : "நோ நோ" அவ‌ச‌ர‌ம் அவ‌ச‌ர‌மாக‌ ம‌றுத்தேன் "அதான் நீயே பார்த்தேல்ல‌. நான் அவ‌கிட்ட‌ ஒரு வார்த்தை கூட‌ பேசின‌தே இல்ல‌. அவ‌ளா தான்..."

பிரியா : "ஓ.. பேசி ப‌ழ‌காமாலே நெறைய்ய‌ பேரை உங்க செல்வாக்க காட்டிருக்கீங்க. ம்ம் சூப்பர்" பேச்சில் நக்கல் தெறித்தது, "இதெல்லாம் இதோடு நிறுத்திக்கோ. இனிமே இதுமாதிரி நான் கேள்விப்பட்டேன், கொன்னே போட்ருவேன்"

நான் என் க‌ண்க‌ள் விரிந்த‌து. ஆச்ச‌ர்ய‌த்திலும் அதிர்ச்சியிலும்.

நான் : "உன்ன‌ இல்ல‌.. அந்த‌ பொண்ணை.." திவ்யாவின் முக‌ம் ஒரே ஒரு செக‌ண்ட் பென்டுல‌ம் மாதிரி ம‌ன‌தில் க்ராஸ் ப‌ண்ணி சென்ற‌து.

பிரியா :"ஹேய்ய்ய்.. என்ன‌ கோச்சிக்கிட்டீய.. ரிலாக்ஸ்"

நான்  : "ச்சே ச்சே இல்ல‌.. கோயம்பத்தூரிலிருந்து எப்ப‌டி ஊருக்கு போவ‌?"

பிரியா : "ரொம்ப‌ அக்க‌றை போல‌. அப்ப‌டின்னா, எங்க‌ ஊர் வ‌ரைக்கும் வ‌ந்து விட‌ வேண்டிய‌து தானே?"

நான் : "அய்யோ.. உங்க‌ அப்பா, மீசைய‌ பார்த்தாலே அடிவ‌யித்துல 'ப‌க்'னு இருக்கு"

பிரியா : "ஹா ஹா. டோன்ட் வொர்ரீ. அப்பா கார் எடுத்திட்டு ஹோப்ஸ் பஸ் ஸ்டாப்ல வெயிட் ப‌ண்ணுவாரு. அங்க‌ இருந்து கரையாம்பாளையம் போயிடுவோம்"

நான்  : "ம்ம்ம்"

அப்ப‌டியே தூங்கிப் போனாள். தூக்க‌த்தில் தோள்க‌ளில் சாய்ந்துகொண்டாள். எனக்கு ரொம்ப‌ பிடித்து இருந்த‌து. கைக‌ளை எடுத்து சீட்டின் பின்னால் வைத்துக் கொண்டு அவ‌ள் தூங்குவ‌த‌ற்கு ஏதுவாக வைத்துக் கொண்டான். அவ‌ள் இன்னும் வ‌ச‌தியாக‌ சாய்ந்து கொண்டாள். எனக்குத் தூக்கம் வரவில்லை. அந்த அரைகுறை வெளிச்சத்தில், பிரியா தூங்குவதை காதலுடன் பார்த்துக் கொண்டிருந்தேன். 

அதே நேர‌ம் "கொன்னே போட்ருவேன்.. உன்ன இல்ல.. அந்த பொண்ணை" வார்த்தைகள் திடீரென நினைவில் வந்ததும் திவ்யாவை, இனிமேல் லைபில் நினைத்துக் கூட‌ பார்க்க‌ கூடாது. பிரியா மாதிரியான‌ பெண் லைஃப் பார்ட்னாராக‌ அடைவ‌த‌ற்கு கொடுத்து வைத்திருக்க‌ வேண்டும் என எனக்கு நானே எச்சரித்துக்கொண்டேன். 

ஆன்சைட் முடிந்து வ‌ந்த‌வுட‌ன் உட‌னே அடுத்த‌ முகூர்த்த‌த்தில் க‌ல்யாண‌ தேதி குறிக்க‌ வேண்டும் என‌ யோசித்துக் கொண்டிருந்தேன், ஆன்சைட்டில் ந‌ட‌க்க‌ போகும் விப‌ரீஎங்களுக்கு தெரியாம‌ல்.

" அடுத்த பகுதி தொடரும்.........



முந்தைய டைரிகள் [1] [2] [3] [4] [5] [6] [7] [8] [9] [10] [11] [12] [13] [14] [15] [16] [17] [18] [19] [20] [21] [22] [23] [24] [25] [26] [27] [28] [29] [30] [31] [32] [33] [34] [35] [36] [37] [38] [39] [40] [41] [42] [43]


-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------


"குழந்தைகளின் மீது .. கோபப்பட்ட மாதிரி நடித்தாலும் மழலை மொழியால் பேசியும் குறும்பு பார்வை பார்த்தும் நம்மை மயக்கி விடுவார்கள் !"

கருத்துரையிடுக Disqus

 
Top