"விண்ணில் விளையாடும் நிலவைப்போல்
என்னுள் விளையாடுகிறது
உன் நினைவு..."
-------------------------------------------------------------------------------------------------------------------
-------------------------------------------------------------------------------------------------------------------
இரண்டு பேரும் திரும்பச் சென்னை வந்துவிட்டோம். நாளை மறுநாள் ஞாயிற்றுக்கிழமை இரவு விமான பயணம். நானும் பிரியாவும் அநியாயத்திற்கு ஷாப்பிங் பண்ணினோம். ஒரு மாதம் தங்க போவதற்கு, கல்யாணத்திற்கு ஷாப்பிங் பண்ணுவது போல் எக்கசக்கமாக வாங்கிக் குவித்தோம். 10 ரெடிமேட் ஷோரூம்ஸ், வுட்லேண்ட், டி, நகர் நல்லி சில்க்ஸில் பட்டுப்புடவை என கடை கடையாய் ஏறி இறங்கி பர்ச்சேஸ் பெரிய அளவில் நீண்டது. "ஆன்சைட் போறதுக்கு எதுக்கு பட்டுப்புடவை?" எனவும் நான் சண்டை போட்டதில், பிரியாவே ஜெயித்தாள். அதில் நாங்கள் போகாத ஒரே இடம், நகைக்கடை தான்.
அங்கேயும் நான் மட்டும் தனியாக போய் பிரியாவுக்காக ஒரு ரிங் வாங்கியிருந்தேன், ஆன்சைட்டில் தனியாக இருக்கும்போது கொடுப்பதற்காக.
ஞாயிற்றுக்கிழமை காலையில் ஊரில் இருந்து இருவர் பெற்றோரும் வந்துவிட்டனர்.
அம்மா : "எனக்கு என்னமோ உங்க இரண்டு பேரையும் ஒண்ணா அனுப்புறது சரியாப் படலை?"
நான் : "ஏன்மா? கடைசி நேரத்துல குட்டைய குழப்புறீங்க?"
அம்மா : "இரண்டு பேரும் தனித்தனியா போனாக் கூட இந்த அளவுக்கு வருத்தப்பட மாட்டேன்? ஆனா இது தான் என்னைய ஏதேதோ யோசிக்க வைக்குது?"
நான் ; "அதான் ஏன்? நீங்க நினைக்கிற மாதிரி இல்லமா.. இந்த பொண்ணு நல்ல பொண்ணு. பொண்ணு பாக்க போற அன்னைக்கு சொன்னத, நான் வாபஸ் வாங்கிக்குறேன்"
அம்மா : "உனக்கு வேணும்னா நான் வேற பொண்ண பார்த்துக் கட்டி வைக்கிறோம். இந்த பொண்ணு வேண்டாம்?"
நான் : "இது என்ன புதுக்கதை? பர்ஸ்ட் நான் வேணாம்ன்னு சொன்னேன், நீங்க வேணும்ன்னு சொன்னீங்க. இப்ப நீங்களே வேணாம்ன்னு சொல்றீங்க?. இதெல்லாம் ஓவர். எங்களுக்கு உள்ள நல்ல அண்டர்ஸ்டேண்டிங் இருக்கு. ஒண்ணா கோவிலுக்கு போனோம், அந்த பொண்ணு கூட தான் நான் ஒண்ணா ஊருக்கு வந்தேன். அம்மா.. பிரியா ரொம்ப நல்ல பொண்ணும்மா. ஏதாவது சொல்லி கலைச்சி விட்றாதீங்க, ப்ளீஸ்ஸ்ஸ்?"
அம்மா : "அந்த பொண்ணு நல்ல பொண்ணு தான். அதுல எனக்குச் சந்தேகமே இல்ல? ஆனா...."
நான் : "அப்புறம்? அம்மா, இது கொஞ்சம் ஓவர். உங்க பையனையே சந்தேகப்படுறது நல்லா இல்ல. போன வாட்டி மாதிரி நான் தம், தண்ணி எல்லாம் அடிக்க மாட்டேன். இது உங்க மேல சத்தியம்?"
அம்மா : "டேய், நீ என்ன லூஸா? நான் என்ன சொல்ல வர்றேன்னு உனக்குப் புரியவே இல்லையா? ஏங்க நீங்களாவது சொல்லுங்க"
அப்பா : "ஹா ஹா.. விடு நீ நினைக்கிற மாதிரி எல்லாம் ஒண்ணும் ஆகாது. என்ஜாய் பண்ணட்டும். ஒரு மாசம் தான.. வந்தவுடனே கல்யாணத்தை முடிச்சிடுவோம்"
அவர்கள் இருவரையும் மனதிற்குள் திட்டிக் கொண்டு, வெளியே போய்விட்டேன்.
இரவு 11 மணி. அண்ணா பன்னாட்டு விமான நிலையம். இரண்டு பேருடைய பெற்றோரும் வந்திருந்தனர். பிரியாவின் அம்மா, என்னைத் தனியாக அழைத்து ஏகத்திற்கும் அட்வைஸ் மழை பொழிந்தார். நான் அப்போது தான் கவனித்தேன், "காலையில் அம்மாவின் கண்களில் கண்ட அதே குழப்பம், பிரியாவின் அம்மா கண்களில் கண்கூடாகத் தெரிந்தது"
ஒருவழியாக ட்ராலியைத் தள்ளிக் கொண்டு, போர்டிங் பாஸ் வாங்க உள்ளே சென்றுவிட்டோம். எமிக்ரேஷன் க்ளீயரன்ஸ், செக் இன் எல்லாம் முடிந்து, ப்ளைட்டுக்காக காத்திருக்க உட்காரும்போது தான், இருவர் முகத்தில் 2000 வாட்ஸ் பல்ப் பிரகாசம்.
நான் : "என்ன சொன்னாங்க உங்க வீட்ல? அங்கேயும் லா லா லான்னு விக்ரமன் படம் ஓடுச்சா?"
பிரியா : "ஆமா.. தாங்க முடியல.. நானும் இதுவரைக்கும் ரெண்டு மூணு தடவ போயிருக்கேன். அப்பல்லாம் இப்பிடி ஃபீல் பண்ணதில்ல. இப்ப மட்டும் ஏன்னு தெரியல. ஒருவேள இப்ப நான் கல்யாண பொண்ணுல்ல. அதான் ஓவர் அக்கறைன்னு நினைக்கிறேன்" கண்ணடித்தாள்
நான் : "ம்ம்ம். உன்கிட்ட ரொம்ப நாளா கேட்கணும்னு நெனச்சிக்கிட்டு இருந்தேன். நீ ஏன் அடிக்கடி கண்ணடிக்கிற?"
பிரியா : "அதெல்லாம் ச்சும்மா" என சொல்லிக் கொண்டே மறுபடியும் கண்ணடித்தாள்.
நான் : "ஓ..நான் கூட உன் கண்ணுல தான் ஏதோ ப்ராப்ளம்ன்னு நெனச்சேன்?"
பிரியா : "நோ நோ.. யார்கிட்ட பேசும்போதும் இப்படி எல்லாம் பண்றதில்ல. இது நான் க்கு மட்டும் ஸ்பெஷல்" மறுபடியும் கண்ணடித்தாள்.
டைம் ஆகவே, ஏற் இந்திய விமான அறிவிப்பு வந்தது. இருவரும் லேப்டாப் பேக்கை மட்டும் தூக்கிக் கொண்டு ப்ளைட் உள்ளே சென்றனர்.
நான் கார்னர் சீட்டில் உட்கார்ந்து கொள்ள, பிரியா பக்கத்து சீட்டில் உட்கார்ந்தாள். ப்ளைட் பறக்க ஆரம்பித்தது. ரன்வேயில் இருந்து எகிறிக்குதித்துப் பறக்க ஆரம்பிக்கும் போது, டாப் ஆங்கிளில் லைட்டில் மின்னும் மௌண்ட் ரோட், மெரீனா பீச் தாண்டி 45 டிகிரி டில்ட் ஆகி பறக்கும் வரை வெளியே பார்த்துக் கொண்டிருந்தவன், பிரியா பக்கம் திரும்பிப் பேச ஆரம்பித்தேன்.
நான் : "எவ்வளவு நேரம் ஜர்னி டைம்?"
பிரியா : "16 ஹவர்ஸ். ஏற்கெனவே போன இடம் தான். போர். திரும்ப போகுறதுக்கே இன்ட்ரஸ்ட் இல்ல. ஆனா கூட நீ வர்றல்ல. ஸோ, சம்திங் இன்ட்ரெஸ்டிங்"
நான் : "ஓ.. அப்படியா.. இப்ப ஏன் கண்ணடிக்கல?"
பிரியா : "நீ தான் கலாய்க்கிறீயே. ஸோ, இனிமே கிடையாது"
நான் : "நோ நோ கலாய்க்கல.. டவுட் க்ளீயர் பண்ணிக்கிட்டேன். ஆக்சுவலி, நீ அப்படி பண்றது ரொம்ப ரொமான்டிக்கா இருக்கு"
பிரியா : "அங்க தான் இருக்கு உல்லன் டவல். எடுத்து தொடைச்சுக்கோ. ஜொள்ளு ரொம்ப வழியுது"
அசடு வழிந்தேன்.
ஏர்ஹோஸ்டஸ் ஃபுட் ட்ராலியை தள்ளிக் கொண்டு வந்து கொடுக்க ஆரம்பித்தாள். எங்கள் இருக்கை இடத்தை நெருங்கி, "ட்ரிங்க்ஸ் வேண்டுமா?" எனக் கேட்டாள்.
நான் : "எஸ்.. பட்வைசர் பீர் ஒன் ப்ளீஸ்" என வழக்கமாகக் குடிப்பதை சொல்லிவிட்டு பின் பிரியா அருகில் இருப்பது உறைத்து நாக்கைக் கடித்தேன்.
உஷ்ணமாக அவள் என்னைப் பார்த்து முறைத்தாள், பின்
பிரியா : "டூ" என சொன்னாள்.
நான் : "அடிப்பாவி நீயும் அடிப்பியா?"
மறுபடியும் முறைத்தாள், "நீயே குடி" எனக் கடுப்புடன் என்னிடம் கொடுத்தாள்.
"வெரி குட்" என வாங்கிக் கொண்டு வெட்கமே இல்லாமல் இரண்டு மினி பீரையும் குடித்தேன். சாப்பிட்டு முடித்துவிட்டனர். ஆஃப் சிக்நேச்சரையே தலைகீழாகக் கவிழ்ப்பவனுக்கு, இது எறும்பு கடிக்கும் அளவுக்குக் கூட போதை ஏறவில்லை.
நான் : "ஏர்போர்ட்ல ரிசீவ் பண்றதுக்கு யாரும் வருவாங்களா?" தெளிவாகவே கேட்டேன்.
பிரியா : "ம்ம், வருவாங்க. ரெகுலரா லாஜிஸ்டிக் டீம்ல இருந்து வருவாங்க. பட், இன்னைக்கு அங்க இருக்கிற ஒரு லேடி வர்றதா சொன்னாங்க" ரொம்ப கேஷுவலாகவே சொன்னாள். துளி கோபம் கூட இல்லை.
இப்படியே 1 மணிநேரத்திற்கும் மேலாக பேசிக் கொண்டிருந்தோம். பின்னர் தூங்கிவிட்டோம். லண்டன் நகரமே இன்னும் விடியவில்லை. அதிகாலை 6.00 மணி. ப்ளைட் லேண்ட் ஆனது. இருவருக்கும் தூக்க கலக்கம் துளியும் இல்லை. ஆனால் குளிர் பின்னிக் கொண்டிருந்தது. லக்கேஜ் கலெக்ட் பண்ணிக் கொண்டு, வெளியே வரும்போது ஏகப்பட்ட பேர் கையில் போர்டுடன் காத்துக் கொண்டிருந்தனர். நான் , எங்களின் பெயரை தேடிக் கொண்டிருந்தேன். யாரிடமும் இல்லை. பிரியாவிடம் கேட்டான்.
பிரியா : "அவங்களுக்கு என்ன நல்லா தெரியும். அதனால வச்சிருக்க மாட்டாங்க. வெயிட் தேடிப் பார்க்கலாம்" என்றாள். அங்கே இருந்த எல்லா லண்டன் வெள்ளகார பெண்கள் முகத்தையும் ஆவலோடு பார்த்துக் கொண்டிருந்தேன்.
நீளமான குளிர் ஜாக்கெட், கையில் க்ளோவ்ஸ் அணிந்து கொண்ட ஒரு லேடியை தொட்டு திருப்பினாள் பிரியா.
"ஹாய்" என சொல்லிக் கொண்டே இருவரும் கட்டிப் பிடித்துக் கொண்டனர்.
"இது தான் பிரபு!" என எனக்கு இன்ட்ரோ கொடுக்க பிரியா திரும்பினாள். நான் அங்கு இல்லை. 50 மீட்டர் தொலைவிலேயே பேயறைந்தது போல் அதிர்ச்சியில் உறைந்திருந்தேன்.
அந்த லேடி ஆவலுடன், "யார்?" என எட்டிப் பார்த்தாள்.
ஆச்சர்யத்தில் திவ்யாவின் கண்கள் விரிந்தன.
"டிங்கு டைரி - 47 காதலியின் சகவாசம் அடுத்த பகுதி தொடரும்.........
-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
முகத்த பாத்து வர நட்பை விட,
குணத்தை பாத்து வரும் நட்புக்கு ஆயிசு அதிகம்...
#நட்பு
கருத்துரையிடுக Facebook Disqus