"உன் நேசத்தை..
உன் ஸ்பரிசத்தை..
உண்மையாய் உள்ளத்தில்
உணர வைத்த பின்,
எப்படி நினைக்கச்
சொல்கிறாய்..
இன்னொருத்தியை?"
------------------------------------------------------------------------------------------------------------------
------------------------------------------------------------------------------------------------------------------
காலடியில் பூமி நழுவுவது போல், எனக்கு இருந்தது. லண்டனுக்கு வந்து சேர்ந்த முதல் நிமிடத்திலேயே இப்படிப்பட்ட அதிர்ச்சி இருக்குமென நான் கனவில் கூட நினைத்துப் பார்க்கவில்லை. இருவரும் என்னை நோக்கி நடந்து வந்தனர். சிறுமூளை அவசர அவசரமாக அலாரம் அடித்ததில், ட்ராலியில் இருந்து ஏதோ கீழே விழுந்தது போல் பாவ்லா பண்ணினேன்.
பிரியா : "என்னாச்சி பிரபு".
நான் : "இல்ல.. பேக் கீழே விழுற மாதிரி இருந்துச்சி.. அதான் சரி பண்ணேன்"
பிரியா : "ஓ.கே. பை தி வே, ஸீ இஸ் திவ்யா" என இன்ட்ரோ கொடுத்தாள்.
திவ்யா உதட்டில் சிரிப்புடன் கை கொடுத்து விஷ் பண்ண, கைகளை நீட்டினாள். எனக்கு உள்ளங்கையில் சூழ்நிலையின் சூடு பரவியது. அவனும் கைகளை நீட்டினான்.
நான் : "ஓ.. ஐ ஸீ. ஐ'யாம் பிரபு" என்று தெரியாத ஆள் போல் பதில் இன்ட்ரோ கொடுத்தேன்.
அரை நிமிடம் என் கண்களை உற்று நோக்கிய திவ்யா, "சம்திங் ராங்" என மனதுக்குள் நினைத்துக் கொண்டு, "ஓ.கே. லெட்ஸ் கோ" என கார் பார்க்கிங் ஏரியா நோக்கி நடக்கத் தொடங்கினோம்.
இந்த நான்கு வருடத்தில் எவ்வளவு நடந்து விட்டன? ஆஸ்திரேலியாவில் படித்தவள் இலண்டனில் வேலை பார்க்கிறாள். லண்டன் குளிரின் மினுமினுப்பும் தோலின் நிறத்திலும், வாயிலிருந்து வரும் வார்த்தைகளில் வலுக்கட்டாயமாகச் சேர்ந்துவிட்ட வெள்ளைக்கார இங்க்லீஷ் ஆக்சென்ட் என முழுதாக மாறியிருந்தாள் திவ்யா.
விமானநிலையம் வெளியே, ஒரு எஸ்.யு.வி எங்களுக்காகக் காத்துக்கொண்டிருந்தது.. காரில் ஏறியதும் திவ்யா காரை இயக்க அது 100 மைல் வேகத்தில் சீறி பாய்ந்தது. லண்டன் நகரம் இன்னும் விழிக்கவில்லை. கார் பின் சீட்டில் நானும், பிரியாவும் அமர்ந்திருந்தோம்.
திவ்யா கார் ஓட்டிக் கொண்டே பேச்சை ஆரம்பித்தாள், "என்ன பிரியா, ரொம்ப டையர்டா இருக்கீங்களா? "
பிரியா : "நோ நோ. ஃப்ளைட்லயே சரியான தூக்கம். ப்ரெஷ்ஷா தான் இருக்கோம்.
திவ்யா : "ஓ.. ஓகே.. லாஸ்ட் டைம் வரும்போது பிரபு வரலீயே?"
பிரியா : "யெஸ். அவர் இப்ப தான் ஜாயின் பண்ணாரு"
திவ்யா : "ஓ.. ஐ ஸீ.."
பிரியா : "ம்ம்.. இப்பவும் நாம Clerkenwell ஆஃபிஸ் தானே?"
திவ்யா : "நோ.. நீங்க இப்ப போக போறது Barnsbury ஆஃபிஸ்"
பிரியா : "அப்ப அங்க நீங்க இருக்க மாட்டீங்களா?"
திவ்யா : "யெஸ். இப்போதைக்கு அந்த ப்ளான் இல்ல. ஆனா என் பாஸ்கிட்ட நான் பேசிட்டு எப்படியும் ஒன் வீக்ல உங்க ப்ளேஸ்க்கு வந்திடுவேன். உங்கள பார்த்த உடனே, நீங்க இங்க இருக்க போற ஒருமாசத்துல உங்க கூட கொஞ்சம் டைம் இருக்கணும்னு தோணுது" என என்னை ஓரக் கண்ணால் பார்த்தபடி சொன்னாள்.
பிரியா : "ஓ.. ஸோ நைஸ்"
விபரீதம் புரியாமல் சந்தோஷத்தை வார்த்தைகளில் கொட்டினாள்.
நான் இதில் கலந்து கொள்ளவே இல்லை. அவர்கள் பேசியதையும் காது கொடுத்துக் கேட்கவில்லை. விடியக் காத்திருக்கும் லண்டன் நகரத்தின் வெளிச்சத்தை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தேன். ஒன்றரை நேர பயணத்தின் முடிவில் Bloomsburyல் உள்ள St Giles Hotel ஹோட்டல் வந்து சேர்ந்தனர். Suite 109,110 புக் செய்யப்பட்டு இருந்தது.
விடிந்து விட்டது.
கெளம்புவதற்கு முன் திவ்யா "ஓகே.. நல்லா ரெஸ்ட் எடுங்க.. நாளைக்கு காலைல நானே வந்து பிக்கப் பண்ணிக்குறேன். முடியலேன்னா, கார் அனுப்புறேன்"
பிரியா : "ஓ.கே. தேங்க்ஸ்" என்றாள், அவளுடன் கைகுலுக்கிக் கொண்டே
திவ்யா : "என்ன பிரபு, நீங்க எதுவும் பேசவே மாட்டேங்குறீங்க?" குறும்பு புன்னகையுடன் கேட்டாள்.
நான் : "நோ.. நத்திங்.. தேங்க்ஸ் ஃபார் யுவர் ஹெல்ப்" என சம்பிரதாயமாக சொல்லி கை கொடுத்தேன்.
திவ்யா மனதிற்குள் "மறுபடியும் தப்பாகக்கூடாது. ஒரு வாரம் வேண்டாம். இரண்டே நாள்ல இங்க வந்திடணும். பிரபுக்கிட்ட நாலுவருஷ கதையை பேசணும்".
கீ வாங்கிக் கொண்டோம்.
பிரியா : "என்னப்பா, ஆர் யூ ஆல்ரைட்?" என தோள்பிடித்து கேட்டாள்.
நான் ; "யா.. ஓ.கே. நோ ப்ராப்ளம். லைட்டா டையர்டா இருக்கு?"
பிரியா : "ஓ.கே. நீ போய் ரெஸ்ட் எடு. நான் ப்ரேக்ஃபாஸ்ட் ரெடி பண்ணிட்டு உன்ன கூப்பிடுறேன்"
நான் : "ஓ.கே" என ரூமுக்குள் சென்று கொண்டு பூட்டிக் கொண்டேன்.
'தொப்புனு மெத்தையில் சரிந்து விழுந்ததும் தலை சுக்குநூறாக வெடிக்கக் காத்திருந்தது. "திவ்யாவை எப்படி சமாளிப்பது?, அவள் மனதில் இன்னும் கல்லூரி நினைவுகள் ஓடிக் கொண்டிருக்கிறதா?, இருந்தால் அவளை எப்படிச் சமாளிப்பது?, பிரியாவிடம் சொல்லிவிடலாமா?, சொல்லாமல் இருந்தால் கண்டுபிடித்துவிடுவாளா?, திவ்யா பிரியாவிடம் உடைத்து விடுவாளா?, அதற்கு பிரியா எப்படி ரியாக்ட் பண்ணுவாள்?, பிரியா சொன்னது போல் கொன்று விடுவாளோ? கல்யாணம் நடக்குமா?" என ஒரே செகண்டில் ஓராயிரம் குழப்பங்கள் கண் முன்னே ஓடிக் கொண்டிருந்தது.
"கல்யாணம் ஆன காதலியின் சகவாசம் நரகம்" சுஜாதா எப்பவோ சொன்னது என் விஷயத்தில், வேறு மாதிரி வொர்க் அவுட் ஆக ஆரம்பித்தது. "கல்யாணப் பெண் பக்கத்தில் இருக்கக் காதலியின் சகவாசம் நரகம்"
"டிங்கு டைரி - 48 கல்யாண மேட்டர் .... !...... திவ்யாபோட்ட கொக்கி! " அடுத்த பகுதி தொடரும்.........
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
"பட்டாம்பூச்சியைப் பிடித்து மீண்டும் அதை சுதந்திரமாக பறக்கவிட்டேன்...
மீதமிருந்தது அதன் பாசம் என் கைகளில் வண்ணங்களாக...."
கருத்துரையிடுக Facebook Disqus