0
வானம் கோபித்துக்கொண்டால் எனக்கென்ன.. நிலாவை விட நீ தான் அழகு..!

-------------------------------------------------------------------------------------------------------------
இதற்கு முந்தைய பதிவு இதற்கு முந்தைய பதிவு 

மறுநாள் காலையில் ஆஃபிஸ்க்கு வந்தோம். என்னிடம் ஒரு படபடப்பு தொடர்ந்து இருந்து கொண்டே இருந்தது. பிரியா கண்டுபிடித்துவிட்டால், இப்போது இருப்பதைக் காட்டிலும் பெரிய பிரச்சினையில் சிக்கிக் கொள்வோம் எனத் தெரிந்ததால், படபடப்பை வெளியே காட்டிக் கொள்ளவில்லை. ஆனால் வியர்வை அருவி மாதிரி பொழிந்து காட்டிக் கொடுத்தது. அடிக்கடி கர்ச்சீப்பை  எடுத்து துடைத்துக் கொண்டேன். க்ளையண்டின் பெரியதலைகளுக்கு இன்ட்ரோ கொடுப்பதற்காக இருவரையும் க்ளையண்ட் சர்வீஸ் மேலாளர் மனோஜ் ஒவ்வொரு இடத்திற்கும் கூப்பிட்டு போய்க் கொண்டிருந்தார். . 

வழியில் எங்கும் திவ்யாவை சந்தித்துவிடக்கூடாது என 360 டிகிரியிலும் சுற்றுமுற்றும் பார்த்து அவள் இல்லை என உறுதிப்படுத்திக் கொண்டு போனேன்.

“யாரைத் தேடிக்கிட்டு இருக்க?” மீட்டிங் முடிந்து திரும்பும்போது பிரியா ஹஸ்கி வாய்ஸில் நடந்துகொண்டே என்னிடம் கேட்டாள்.

நான் : ”இல்லை.. யாரையும் தேடலை?” அவசரம் அவசரமாக மறுத்தேன்.

பிரியா : “இல்லை.. நீ யாரை தேடுறன்னு எனக்குத் தெரியும்?”

நான் : “யாரை?”

பிரியா : “திவ்யா? அவளைத் தான தேடுற?” 

வியர்வை மீண்டும் அருவியாய் கொட்ட ஆரம்பித்தது. “அய்யோ, இவளுக்கு எல்லாம் தெரிஞ்சி போச்சா?” பிரியா, ஸ்கூல் மேட்டரைப் பத்தி ஆரம்பித்தால் காலில் விழுந்து உண்மையை மொத்தம் கொட்டிவிடலாம் என்ற முடிவுடன், டென்ஷனை ஒருவழியாய் சமாளித்துக் கொண்டு,

நான் : “ஆமா.. உனக்கு எப்படித் தெரியும்?” அவன் கேட்பதற்கும், காஃபி எடுக்க பேன்ட்ரியினுள் நுழைவதற்கும் சரியாக இருந்தது.

பிரியா : “அன்னைக்கு காலங்கார்த்தாலேயே ஜொள்ளு விட்டத நானும் நோட் பண்ணேன். கெத்து மெயிண்டெயின் பண்றதுக்காகத் தான் அவகூட பேசாம விறைப்பா திரிஞ்சன்னும் எனக்கு தெரியும். எப்படி உன்னை மாதிரி பசங்களால மட்டும் இப்படி இருக்க முடியுது?” என நேருக்கு நேராக என்னிடம் சண்டை போடுவது போல் கேட்டாள்.

உள்ளே டென்ஷனில் இழுத்து இருந்த மூச்சை, வாய் வழியே ஊதி வெளியே விட்டு விட்டு “அடச்சே.. இதத்தான் கேட்க வந்தியா?“ என மனதுக்குள் நினைத்துக் கொண்டு, 

நான் : “இல்ல.. இல்ல.. இன்னிக்கு வர்றதா சொல்லிட்டு இருந்தாங்கல்ல, அதான் எங்கன்னு பார்த்தேன். மற்றபடி அவங்கள நான் சைட் எல்லாம் அடிக்கல?”

பிரியா : “ம்ம் சரி சரி.. ஒரு வாரம் கழிச்சி தான் வர்றதா சொன்னா.. இன்னொரு விஷயம் திவ்யா நம்ம ஏஜ் க்ரூப் தான். வாங்க போங்கன்னு சொல்ல வேணாம். அது திவ்யாவுக்கே பிடிக்காது?”

”என்கிட்டேயேவா?” என லைட்டாக சிரித்துவிட்டு புன்முறுவலுடன்,

நான் : “ஓ.கே. மேடம்” என்றேன்.

“கொஞ்ச நேரத்துல நானே வாயைக் கொடுத்து மாட்டிக்க பார்த்தேனே? உஷார்டா பிரபு” என உள்ளுக்குள் அலாரம் செட் பண்ணிக் கொண்டேன்.

காஃபி எடுத்துக் கொண்டு நாங்கள் இருவரும் அவரவர் இடத்துக்குப் போய் கொஞ்சம் கொஞ்சமாக வேலையில் மூழ்க ஆரம்பித்து இருந்தோம். 

லஞ்ச் டைம் நெருங்க ஆரம்பித்தது. இருவரும் லஞ்ச் பாக்ஸ் எடுத்துக் கொண்டு கபே போய் சாப்பிட ஆரம்பித்தோம். வெளியில் இருந்து பார்த்தால், நான் மட்டும் சாப்பிடுவது தெரியும்.

பிரியா : “பிரபு, யார்கூடவும் ட்ரீட், பார்ட்டின்னு சொல்லி போயிடாதே. அதுவும் டேவிட், ஸ்மித் உடன்”.

நான் : “”ஏன்? எல்லாரும் நல்லாத் தான் பேசுறாங்க?”

பிரியா : “அதுக்கு இல்ல.. எல்லாரும் ஒரு மாதிரி?”

நான் : “ஒரு மாதிரின்னா?”

பிரியா : “ஒரு மாதிரின்னா ஒரு மாதிரி” 30 செகண்ட் இடைவெளி விட்டு, “எல்லாரும் நல்லாத் தான் பேசுவாங்க.. ஆனா ஒரு மாதிரி டைப்.. அதாவது Gay டைப். உஷாரா இரு.. எக்குதப்பா போய் யார்கிட்டயும் மாட்டிக்காத..” மறுபடியும் 30 செகண்ட் இடைவெளி விட்டு, “ஒண்ணும் ப்ராப்ளம் இல்ல. அதான் நான் இருக்கேன்ல”

நான் ; ”வாட்?”

பிரியா : “ஐ மீன், நான் தான் உன் கூட இருக்கேன்ல.. உன்னை எங்கேயும் தனியா அனுப்ப மாட்டேன்னு சொல்லவந்தேன்” மூச்சு வாங்கிக் கொண்டு அர்த்தத்தைச் சரியாக மொழிபெயர்த்துச் சொன்னாள்.

நான் : “ஓ… ஓ.கே.....  டூ மினிட்ஸ் வெயிட் பண்ணு. நான் ஹோட்டல்ல இருந்து சிப்ஸ் எடுத்திட்டு வந்தேன். போய் எடுத்திட்டு வர்றேன்?” என்று சொல்லிவிட்டு கிளம்பினேன்.

இரண்டு நிமிடத்திற்கு முன்னதாகவே திரும்ப வந்துவிட்டேன். பேண்ட்ரியினுள் இருந்து இரண்டு பெண்கள் சிரிக்கும் சத்தம் அதிர அதிரக் கேட்டது. நச் பிகர் ஜெனிபராக இருக்குமோ என திடீரெனபார்ம் ஆன ஜொள்ளுடன், உள்ளே வந்த எனக்கு பெரும் ஷாக்.

உள்ளே பிரியாவுடன் திவ்யா பேசிக் கொண்டிருந்தாள். திவ்யா சாதாரணமாக வரவில்லை. வொயிட் அண்ட் வொயிட் டைட்டான சுரிதாரில். 

“இந்த சுரிதார் எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கே….” என யோசித்துக் கொண்டிருக்கும்போது, “ஓ.. மை காட்.. இது காலேஜ்ல நான் வாங்கிக் அவளுக்கு அனுப்பியது மாதிரி இருக்கே.. அளவு தெரியாம ரொம்ப லூஸா வாங்கிக் கொடுத்தத, இப்பவும் வச்சிருக்காள்லா?” என யோசித்துக் கொண்டே பேண்ட்ரி வாசலிலே நின்று கொண்டிருந்தேன்..

திவ்யா :“ஹேய் பிரபு.. கெட் இன்..” என 1000 வாட்ஸ் பல்ப் போல் சிரித்துக் கொண்டே உள்ளே வரச் சொல்லி சைகை கொடுத்தாள். 

நான் நேராக அந்த இடத்திற்கு வந்தேன்.

திவ்யா : ” என்னடா, ஒரு வாரம் கழிச்சி வர்றேன்னு சொன்னவ.. இப்பவே வந்துட்டான்னு பாக்குறீயா பிரபு?”

நான் : “ம்ம்ம்..” என எதையோ மென்று கொண்டு, தலையை மேலும் கீழுமாக அசைத்துக் கேட்டேன்.

திவ்யா : “எல்லாம் கல்யாண மேட்டர் தான்?”

நான் : “வாட்??”

திவ்யா : “நீ தான் வாயைவே திறக்க மாட்டேங்குற.. ஆனா பிரியா ரொம்ப ஃபாஸ்ட்?”

நான் : “என்ன சொன்னா….ங்க?” என “ங்க” வை போலியாக சேர்த்துக் கொண்டு வறண்ட தொண்டையில் வார்த்தைகளை சேகரித்துக் கொண்டு கேட்டேன்.

திவ்யா : “அவங்க கல்யாண மேட்டர் பத்தி.. உனக்கு தெரியாதா பிரபு?” என கன்னாபின்னாவென துள்ளலுடன் கேட்டாள்.

எனக்கு பசி சுத்தமாக அடங்கி பயம் அடிவயிற்றுடன் மொத்த வயிறையும் கவ்விக் கொள்ள முகத்தில் கொஸ்டின் மார்க் வரைந்து திவ்யாவையும், பிரியாவையும் மாறி மாறி பார்த்துக் கொண்டிருந்தேன், வெளிறிப் போன கண்களுடன்…..

"" அடுத்த பகுதி தொடரும்.........  

முந்தைய டைரிகள் [1] [2] [3] [4] [5] [6] [7] [8] [9] [10] [11] [12] [13] [14] [15] [16] [17] [18] [19] [20] [21] [22] [23] [24] [25] [26] [27] [28] [29] [30] [31] [32] [33] [34] [35] [36] [37] [38] [39] [40] [41] [42] [43] [44] [45] [46]

[47] முந்தைய பதிவு || அடுத்த பதிவு [49]

----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------


"அன்று கனவில் தோன்றி கவலைகள் மறக்க செய்தாள்.. இன்று கனவாய் மாறி வாழ்க்கையை கவலை கொள்ள செய்தாள்.."

கருத்துரையிடுக Disqus

 
Top