0

"புரிதலே அடிப்படை.. சில நெருக்கங்கள் விலகுவதும்.. சில பிரிவுகள் நெருங்குவதும்.. அன்பில் அனைத்தும் சாத்தியமே.. முன்னெப்போதும் இல்லா - நெருக்கம் உணர😍💖 - பிரிவு உணர😞"

---------------------------------------------------------------------------------------------------------------------------------------

இதற்கு முந்தைய பதிவு இதற்கு முந்தைய பதிவு 


 “அப்படியா?” ஷாக்கில் இருந்து வெளிவராமல் பிரியாவை நோக்கினேன்
கண் அடித்தாள் பிரியா.

திவ்யா பிரியா நோக்கி திரும்பும் இரண்டு செகண்ட் இடைவெளியில் நார்மல் ஆனாள்.

”அவன் அவன் வயித்துல புளியை கரைச்சிட்டு இருக்கு. இதுல இவ வேற, நேரம் காலம் தெரியாம லவ் பண்றா.. வெட்கப்படுறா.” என அலுத்துக் கொண்டேன்

திவ்யா : “என்கிட்ட சொன்னத சொல்லுங்க பிரியா.. கம் ஆன்” திவ்யா அவசரப்படுத்தினாள்.

பிரியா : “அதான் வீட்ல அலையன்ஸ் பார்த்திட்டு இருக்காங்க.. ஐ கெஸ் ஒருபேமிலி என் பேரண்ட்ஸ்க்கு ரொம்ப பிடிச்சி இருந்தது. அல்மோஸ்ட், கன்பார்ம் ஆன மாதிரி தான். அத தான் சொன்னேன்” என சொல்லிவிட்டு, “மவனே, நீயா ஏதாவது உளறுனே, கொன்னே போட்ருவேன்” என்பது போல் என்னைச் சைகையில் மிரட்டினாள்.

திவ்யா : “பாத்தீயா பிரபு. லாஸ்ட் டைம் வரும்போது கல்யாணமே பண்ணிக்க மாட்டேன்னு சொல்லிட்டு இருந்தவங்க, இப்ப என்னடான்னா பிக்ஸ் ஆச்சின்னு சொல்றாங்க. க்ரேட் இம்ப்ரூவ்மெண்ட்” என ஆச்சர்யத்தில் பொங்கினாள்.

ஒரு பக்கம் நிம்மதியாக இருந்தாலும், திவ்யா எனக்குள் மறுபடியும் டென்ஷனைக் கெளப்பினால். இருந்தாலும் பிரியா நோட் பண்ணாமல் விட்டதால் சகஜமாக பிரியாவை நோக்கி, “ஓ.. அப்படியா.. க்ரேட். ஆனா நீங்க ஏன் கல்யாணமே பண்ணிக்க மாட்டேன்னு சொன்னீங்க..” என போலியாக கேட்டேன்.

திவ்யா : ”அவங்களுக்கு அட்ராக்சன், லவ் மேலேயே நம்பிக்கை இல்லையாம். அதுக்கும் மேல ஆண்கள் மேல சுத்தமா நம்பிக்கை இல்லையாம். ஆண்கள் யாரும் லவ் பண்ற பொண்ணை கட்டிக்க மாட்டாங்க. சீரியஸ்னெஸ் இல்லாதவங்க. விளையாட்டுத்தனமா இருப்பாங்க. கடைசில அல்டிமேட் லாஸ், பெண்களுக்கு தான்.. அப்பிடி இப்பிடின்னு ஏகப்பட்ட கம்ப்ளையிண்ட்ஸ். ஐ திங், இவங்கள கட்டிக்கப் போறவன் ரொம்ப லக்கி. வெரி குட் கேர்ள்.” என பில்டப் கொடுத்தாள்.

பிரியா வெட்கத்தில் சிவந்தாள். சிவந்து கொண்டே என்னை நோக்கினாள்.

நான் : “இஸ் இட் ஸோ? க்ரேட்” ஒரு பக்கம் லக்கி என சந்தோஷப்பட்டாலும் நெருப்பில் நிற்பது போல தவித்தேன்.

திவ்யா : “என்ன பிரபு? உங்க பசங்களைப் பத்தி அபாண்டமா குத்தம் சொல்றாங்க. நீங்க எதுவும் சொல்ல மாட்டீங்களா?”

கையில் ஏதாவது கிடைத்தால், இவள் தலையில் நச்சென்று போட வேண்டும் போல எனது கை பரபரத்தது. பல்லைக் கடித்துக் கொண்டே,

நான் : “நான் சொல்ல என்ன இருக்கு? அது அவங்களோட பெர்சனல் ஒப்பீனியன். அவங்க இஷ்டம்” என ஏதோ உளறினேன்.

திவ்யா : “நைஸ். நீங்க சொல்றதும் கரெக்ட்” என தலையை ஆட்டிக் கொண்டே ஒரு வழியாக அமைதியானாள். 

அடுத்த செகண்டே, பிரியா ஆரம்பித்தாள்,

பிரியா :  “பிரபு, உனக்கு இவங்க ஸ்டோரி தெரியாதே? ரொம்ப பெரிய்ய்ய்ய.. ரொமாண்டிக் லவ் ஸ்டோரி” 

எனக்கு ஏழரை நாட்டு சனி இரண்டு பெண் ரூபத்தில் முன்னே நின்று கொண்டு, ‘ஜிங்குச்சா ஜிங்குச்சா’ என ஆடுவது போல் இருந்தது. நெற்றியில் வழியும் வியர்வையைத் துடைத்துக் கொண்டு அமைதியாக நின்றேன்.

பிரியா : “என்னன்னு கேட்க மாட்டியா பிரபு” எப்படியாவது திவ்யாவை பழிக்குப் பழி வாங்கவேண்டும் என துடியாய் துடித்தாள். 



இதற்கு முந்தைய பதிவு இதற்கு முந்தைய பதிவு 

திவ்யா என்னுடைய ரியாக்சனை ரொம்ப ஆழமாக நோட் பண்ணிக் கொண்டிருந்தாள்.

”கேட்காம இருந்தா விடவா போற. அதுவுமில்லாம அதுலயும் நான் தான்டி ஹீரோ” என மனதுக்குள் நினைத்துக் கொண்டு, 

நான் : “என்ன ஸ்டோரி?” என திவ்யாவின் பார்வையை அவாய்ட் பண்ணிக் கொண்டே பிரியாவிடம் கேட்டான்.

பிரியா : “ஸ்கூல் படிக்கும்போது ஒருத்தன் கூட ஒருவருஷமா நல்லப்ரெண்டா இருந்தாங்களாம். ஆனாலும் பேர்வெல் டே அன்னிக்கு தான் அவன்மேல ஃப்ரெண்ட்ஷிப் தாண்டி லவ் இருந்திச்சின்னு பீல் பண்ணாங்களாம்.”

நான் : “ஓ ஐ ஸீ..”

பிரியா : “அன்னைக்கு இவங்களால அந்த பையன்கிட்ட நார்மலாவே பேச முடியலையாம்… எப்படியோ மனசுல இருந்ததை அவன் SLAM  நோட்ல கவிதை மாதிரி கிறுக்கிட்டு வந்துட்டாங்களாம். இதுல ஒரு சோக பார்ட் என்னன்னா, அதுக்கு அப்புறம் இன்னிக்கு வரைக்கும் அவன்கிட்ட பேசவே இல்லையாம்”

நான் : “ம்ம்ம்” என தலையசைத்தேன். 

அங்கே திவ்யா தலையைக் கீழே குனிந்து கொண்டு பீல் பண்ணிக் கொண்டிருந்தாள். அவள் கண்களில் கண்ணீர் துளிர்த்துக் கொண்டிருந்தது.

பிரியா : “அவன் என்ன டியூப்லைட்டா? ஒரு பொண்ணா வெட்கத்தை விட்டு திரும்ப போய் ப்ரோப்பஸ் பண்ணிட்டு இருப்பா. இதுனால தான் பசங்க மேல எனக்கு ரொம்ப வெறுப்பு.”

திவ்யா : “ஹேய் பிரியா, கூல் டவுன் கூல் டவுன்” என அவளை அமைதி படுத்தினாள்.

பிரியா : ”ஆனா இவங்க மேலயும் தப்பு இருக்குன்னு சொன்னாங்க. காலேஜ் முடிஞ்ச உடனே ஹையர் ஸடடீஸ் படிக்க அப்ராட் போயிட்டதா சொன்னாங்க. அவன மீட் பண்ண, இன்னும் இரண்டு மாசத்துல சென்னை வரப் போறாங்களாம்”.

“ம்ம்ம்” என சொல்லிவிட்டு அங்கிருக்கும் சூடான சூழ்நிலையை சமாளிக்க முடியாமல் “எக்ஸ்கியூஸ் மீ” என சொல்லிவிட்டு ரெஸ்ட் ரூம் சென்றேன்.

”நான் என்ன தப்பு பண்ணேன்” என வாய் விட்டு கத்த வேண்டும் போல் இருந்தது. முகம் கழுவிட்டு திரும்ப வந்தேன்.

பிரியா : “நாங்க எங்க கதைய சொல்லி போர் அடிக்கிறோம். உனக்கு எப்ப கல்யாணம் பிரபு?” என நேஷனல் அவார்டுக்கான நடிப்புடன், ரொம்ப கேஷுவலாகக் கேட்டாள்.

நான் : “தெரியல. லேட் ஆகும்ன்னு நினைக்கிறேன்”.

பிரியா : “ஆனா பசங்களால எப்படி ஈசியா எடுத்துக்க முடியுது. இன்னிக்கு ஒரு பொண்ணை லவ் பண்றாங்க.. நாளைக்கே இன்னொரு பொண்ண லவ் பண்றாங்க”.

நான் : “அதுக்காக விட்டுட்டு போன பொண்ணுக்காக தாடி வச்சிட்டு அழவா முடியும்” என சாப்பிட்டுக் கொண்டே சொன்னேன். 

திவ்யா மட்டும் என்னை முறைத்துக் கொண்டிருந்தாள். இதை நான் கவனிக்காத்து போல் இருந்தேன்.

பிரியா : “இல்ல.. ஒரு பரிவு வேணாமா? அவனே ப்ரோப்பஸ் பண்ணிட்டு, அதை ஏத்துக்காத பொண்ணுக்காக கொஞ்ச நாள் கூட வெயிட் பண்ண மாட்டாங்களா? என்ன பாய்ஸ்?” தான் ஏன் இப்படி பேசுகிரேன் என்று அவளுக்கே தெரியாமல் அனத்திக் கொண்டிருந்தாள்.

நான் : “ஏத்துக்கிட்டா மட்டும் வந்திடவா போறாங்க? பொண்ணுங்களுக்கு பிடிச்சிருந்தா, ப்ரோப்பஸ் பண்ண அன்னைக்கே ஒத்துக்குவாங்க.. இல்லைன்னா வாழ்க்கை முழுசும் வெயிட் பண்ணாலும் மதிக்க மாட்டாங்க” என நானும் ஒரு பதிலடி கொடுத்தேன்.

திவ்யா : “அப்படின்னா?”.

நான் : “வெரி சிம்பிள் பாலிசி.. த்ரிஷா கிடைக்கலைன்னா ஒரு திவ்யா”

திவ்யா : “வாட்?”

பிரியா : “வாட்?”, கொஞ்சம் லேட்டாக

" ! " அடுத்த பகுதி தொடரும்.........

முந்தைய டைரிகள் [1] [2] [3] [4] [5] [6] [7] [8] [9] [10] [11] [12] [13] [14] [15] [16] [17] [18] [19] [20] [21] [22] [23] [24] [25] [26] [27] [28] [29] [30] [31] [32] [33] [34] [35] [36] [37] [38] [39] [40] [41] [42] [43] [44] [45] [46] [47]


-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------



Image result for trisha illana divya memes

லவ் ல ஒன் சைடு இருக்கலாம் 2 சைடும் இருக்கலாம் பட் சூசைடு மட்டும் கூடவே கூடாது மச்சி திரிஷா இல்லனா திவ்யா


கருத்துரையிடுக Disqus

 
Top